குருக்களை தனிப்பட்ட முறையில் ( comments about personal) விமர்சிப்போர்களுக்கு ஐயோ கேடு !

அந்தக் குற்றத்திற்காக நாளை உங்கள் நாவுகள் தீயால் வருடக்கணக்காய் சுடப்படலாம்..

குருக்களில் கணக்கை ஆண்டவர் நேரிடையாக பார்ப்பார்..செட்டில் செய்யும் வரை யாரையும் விட மாட்டார்.. அவரே சொல்லியிருக்கிறார் மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்ப்பார்க்கப்படும்…

ஆனால் பொது நிலையினர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையோ ! அவர்களின் ஏதாவது தனிப்பட்ட செயலையோ குறித்து அவர்களை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தால்..ஆண்டவரின் கடுமையான கோபமும், தண்டனையும் அவர்கள் மேல் வந்து சேரும்..

திருச்சபைக்கோ, திருப்பலிக்கோ, ஆண்டவருக்கோ, தேவமாதாவுக்கோ ஏதாவது அவசங்கை என்றால் கண்டிப்பாக கேட்கலாம்..

ஆனால் குருக்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசுவது, சந்தேகப்பட்டு பேசுவது, அவமரியாதையாக பேசுவது, அவசங்கையாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் நாக்குகள் கண்டிப்பாக சுட்டெரிக்கப்படும்…உத்தரிக்கும் ஸ்தலம் அவர்களுக்கு மிகக்கடுமையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..அவர்கள் நரகம் செல்லவும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஜீவியத்திலும் அவர்களுக்கு நிம்மதி கிடைக்காது.

அழுந்தவே அழுந்துவார்கள்..

அதற்குப்பதிலாக அவர்களுக்காக ஜெபிக்கலாம்… குருக்களுக்காக தவமிருந்து பரிகாரத்தோடு ஜெபிக்கலாம்… குருக்களுக்கும், நம் பங்குத் தந்தையர்களுக்காகவும் அதிகமாக ஜெபிக்க வேண்டும். ஜெபத்தால் அவர்களைத் தாங்க வேண்டும்…

அதை விட்டு விட்டு.. அவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடுதல்…கண்டபடி திட்டுதல்…தேவையற்ற வீடியோக்களை பகிர்தல், அவசங்கையாக பேச்சில் ஈடுபடுதல்…அவன் இவன் என்று பேசுதல் அப்படி செய்வோர்கள் உடனடியாக பாவசங்கீர்த்தனம் செய்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்…

இல்லையேல் அவர்கள் நாக்குகள் நெருப்பில் பல நூறு ஆண்டுகள் வேகவேண்டியிருக்கும் ஜாக்கிரதை…

இது கத்தோலிக்கம் ரொம்பவே சோதிக்கப்படும் காலம்...

குறிப்பு : குருக்களின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த தகவல்கள், வீடுயோக்களை பகிர்தல் பாவம். சாத்தானின் தந்திர சோதனைகள் இதில் அடங்கியுள்ளது. இது போன்றவைகளை டவுன்ட்லோடு செய்து உங்கள் ஆன்மாக்கள் நாசமாகிவிடாது எச்சரிக்கையாய் இருங்கள்... இதில்தான் எதிரியின் தந்திரம் அடங்கியுள்ளது...

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!