இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருச்சபையின் வேதபாரகர்கள் வேதாகம வாக்கியங்களுக்குத் தந்த பல்வேறு விளக்கங்கள்!

திருச்சபையின் வேதபாரகர்கள் இந்த வேதாகம வாக்கியங்களுக்குத் தந்த பல்வேறு விளக்கங்களைப் பார்ப்போம்:

அர்ச். பெர்னார்தீன்: 

‘இரட்சகரைக் கருத்தரித்து, பெற்று, உணவூட்டி வந்தவர்களும், தொடர்ச்சியாக அவரருகில் நின்றவர் களும், ஒவ்வொரு பயணத்திலும் அவரோடு துணைநின்றவர்களும், அவருடைய வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஒவ்வொன்றையும் கண்ணுங்கருத்துமாகக் கவனித்தவர்களுமான திவ்விய கன்னிகை யும், மகா பரிசுத்தவதியுமான மாமரி மட்டுமே இரட்சகருடைய மாபெரும் வேலைகளை, அவருடைய பல்வேறு போதக முறைகளை, அறிந்திருந்தார்கள்; அவற்றில் அவர்கள் ஒத்துழைத் தார்கள், விசேஷ முறையில் அவற்றைக் கண்டார்கள், அதிக இரகசிய மான விதத்தில் அவற்றைக் கேட்டார்கள், அதிகத் துரிதமாக அவற்றை அறிந்துகொண்டார்கள், அதிக கவனத்தோடு அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்; சகல அப்போஸ்தலர்களையும், சீடர் களையும் விட மிக ஏராளமான அளவில் அவற்றைக் கற்றுக்கொண் டார்கள், அதிகப் பிரமாணிக்கமுள்ள முறையில் அவற்றை விவரித் தார்கள். இதனாலேயே அவர்களுக்குப் புகழ்ச்சியாக மேற்கண்ட வாக்கியம் சொல்லப்பட்டுள்ளது, ஏனெனில் நம் ஆண்டவர் மக்களிடம் உவமைகளில் பேசி, நண்பர்களுக்கு விளக்குவது போல, தம் அப்போஸ்தலர்களுக்குகு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார் என்றாலும், அவர் விசேஷமான முறையில் நேசித்தவர் களாகிய தம் திருத்தாயாரின்மீது அவர்கள் அதிகமான போதகத் தைப் பொழிந்தருளி, அதிகமான இரகசியங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள், மிக அடிக்கடி அவர்களை வெள்ளைப் போளத்தின் மலைக்கும், தூபத்தின் குன்றுக்கும் உயர்த்தி, தம்மையும் தம்முடைய பரலோக மகிமையையும் பற்றிய ஓர் அறிவை அவர் களுக்குத் தரும்படியாக, திராட்சை இரச உக்கிராண அறைகளில் அவர்களை மறைத்து வைத்தார்.''

அர்ச். பொனவெந்தூர்:

‘இந்தப் புதல்வியர் அர்ச்சியசிஷ்டவர்களையும், தேவதூதர் களையும் குறிப்பதாக நாம் புரிந்துகொண்டால், அவர்கள் சகல கன்னியருக்கும் முந்தினவர்களாகவும், ஸ்துதியர்களின் கண்ணாடி யாகவும், வேதசாட்சிகளின் ரோஜாவாகவும், அப்போஸ்தலர்களின் ஒலிபெருக்கியாகவும், தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசன ஸ்தல மாகவும், பிதாப்பிதாக்களின் மகளாகவும், சம்மனசுக்களின் இராக்கினியாகவும் இருக்கிற மாமரி அவர்கள் அனைவருடைய செல்வங்களையும் விஞ்சியிருக்கிறார்கள் என்று நாம் சொல்லக் கூடாதா?''

மூன்றாவதாக, மனிதாவதாரத்திற்குத் தன்னுடைய சம்மதத்தைத் தருவதில் மாமரி அனுசரித்த விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் உன்னதச் செயலின் காரணமாக, அவர்கள் வரப்பிரசாதத்திலும் அழகிலும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், சம்மனசுக்களுக்கும் அப்பாற்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்மதத்தின் மூலம் மாமரி சகல சம்மனசுக்கள் மற்றும் அர்ச்சியசிஷ்டவர்களின் செயல்களில் அவர்களை விட அதிகப் பேறுபலன்களைச் சம்பாதித்தார்கள்; இதனால், அர்ச். எப்பிஃபானியுஸின் கருத்துப்படி, அவர்கள் கடவுளைத் தவிர மற்ற அனைவருக்கும் மேலானவர்களாக இருக் கிறார்கள்.

இறுதியாக, மாமரி ஒரு விதத்தில் சகல சம்மனசுக்களுடையவும், அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் எல்லா வரப்பிரசாதத்திற்கும் மூல காரணமாக இருக்கிறார்கள். ‘‘மாமரியின் சம்மதமின்றி மனிதாவதார பரம இரகசியம் நிறைவேற்றப்படாதது ஏன்? ஏனெனில் அவர்கள் சர்வ நன்மையினுடையவும் மூல காரணமாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்'' என்று அர்ச். இரேனேயுஸ் கூறுகிறார்.

‘தயவு பொய்யானது, அழகு வீணானது; ஆண்டவருக்குப் பயப்படுகிற ஸ்திரியே புகழப்படுவாள்.''

இந்த அற்புதமான ஸ்திரீ மற்றவர்களைப் போல தயவையோ, அழகையோ தேடவில்லை, மாறாக அவர்களுடைய எல்லா மகிமையும், புகழ்ச்சியும் தெய்வபயத்திலிருந்தே அவர்களுக்கு வருகிறது. மாமரியில் இருந்த இந்த பரிசுத்தமான பயம் அவர் களுடைய மகிமைக்கும் பக்திக்குரிய தன்மைக்கும் மட்டுமின்றி, அவர்களுடைய திருச்சரீரத்தின் அழகுக்கும் ஆதாரமாக இருந்தது.

‘அவளுடைய கரங்களின் பலனை அவளுக்குத் தாருங்கள்; அவளுடைய செயல்கள் (நீதியின்) வாசல்களில் அவளைப் புகழக் கடவன.''

மோட்சத்தில் சகல சம்மனசுக்களுக்கும் அர்ச்சியசிஷ்டவர் களுக்கும் மேலாக மகிமைக்கு உயர்த்தப்பட்ட மாமரி, இந்த மகிமையில் தன்னுடைய அனைத்தையும் கடந்த உழைப்புகள் மற்றும் துயரங்களின் பலனைப் பெற்றுக்கொண்டார்கள், அவற்றில் இருந்து புகழ்ச்சியையும் பெற்றுக்கொண்டார்கள். இவ்வாறு மாமரியின் பரலோக ஆரோபண நாள் பற்றி அர்ச். தமாசீன் அருளப்பர்:

‘இன்று தூதர்கள் அக்களிக்கிறார்கள், அதிதூதர்கள் போற்றி ஆர்ப்பரிக்கிறார்கள், சத்துவகர் புகழ்ச்சியில் சேர்ந்துகொள் கிறார்கள், பிராதமிகர் களிகூர்கிறார்கள், பலவத்தர் மகிழ்ச்சி கொண் டாடுகிறார்கள், பத்திராசனர் திருநாள் கொண்டாடுகிறார்கள், ஞானாதிக்கர்கள் போற்றிப் புகழ்கிறார்கள், பக்திச்சுவாலகர்கள் மகிமைப்படுத்துகிறார்கள். இவர்களும் கூட தங்கள் தாயாரின் மகிமைக்குத் தங்கள் புகழ்ச்சியின் சம்பாவனையைக் கொண்டு வரும் போது, மகிமையால் நிரப்பப்படுகிறார்கள்'' என்கிறார் (நுrழிமி. 2, de ம்லிrதுஷ்க்ஷூ.).

அர்ச். சியென்னா பெர்னார்தீன் பரலோகத்தில் மாமரியின் மகிமையையும், அவர்களுடைய வல்லமையுமாகிய அவர்களுடைய உழைப்பின் பலனைப் பற்றிப் பேசும்போது இப்படிச் சொல்கிறார்:

‘பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு எத்தனை சிருஷ்டிகள் ஊழியம் செய்கிறார்களோ, அத்தனை சிருஷ்டிகள் மகிமையுள்ள திவ்ய கன்னிகைக்கும் ஊழியம் செய்கிறார்கள்; ஏனெனில் சகல சிருஷ்டி களும், அவர்கள் பிரபஞ்சத்தில் எந்தப் பதவியில் இருந்தாலும் சரி, அகூர்கள் சம்மனசுக்களைப் போல அரூப சிருஷ்டிகளாக, அல்லது மனிதர்களைப் போலப் பகுத்தறிவுள்ள, அல்லது வானங்களையும், பூமியையும் போல சடத்தன்மையுள்ள சிருஷ்டிகளாயிருந்தாலும் சரி, இழக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, அல்லது பரலோகப் பாக்கியவான்களாக இருந்தாலும் சரி, தெய்வீக அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிற எல்லோருமே மகிமையுள்ள திவ்ய கன்னிகையின் அதிகாரத்திற்கும் உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் சர்வேசுர னுடையவும், மாமரியினுடையவும் திருச்சுதனாக இருக்கிறவர் பூலோகத்தில் தம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட திருமாதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.''

எல்லாக் கிறீஸ்தவர்களும், எல்லா மனிதர்களும் ஒரு நாள் பாக்கியவான்களின் இராச்சியத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, அங்கே, கடவுளின் திருத்தாயாரை நோக்கி அர்ச்சியசிஷ்டவர்களும் சம்மனசுக்களும் எழுப்புகிற: ‘‘இஸ்ராயேலின் மகிமை நீரே, ஜெருசலேமின் சந்தோஷம் நீரே; எங்கள் மக்களின் மகத்துவமும், முதல்வியும், அனைவரிலும் சிறந்தவர்களும், அனைவரிலும் அதிக மேன்மையுள்ளவர்களும், கடவுளின் சிருஷ்டிகளில் அதிகப் பிரியத்துக்குரியவர்களும், அவருடைய வல்லமையின் அற்புதமும், அவருடைய ஞானத்தின் அற்புதப் படைப்பும், அவருடைய நன்மைத்தனத்தின் மிகுந்த கனிவுள்ள வஸ்துவும், பிதாவின் மணவாளியும், திருச்சுதனின் தாயாரும், இஸ்பிரீத்துசாந்துவின் திருப்பேழையும், மனுக்குலத்தின் இணை இரட்சகியும், சகல மனிதர்களுடையவும் தாயாரும் சிருஷ்டிக்கப்பட்ட ஆளுமைகள் அனைத்திலும் அதிகமாக உயர்த்தப்பட்டவர்களும், அதிக மகிமையுள்ளவர்களும், கடவுளின் மகிமைக்கு மற்ற அனைவரிலும் அதிக நெருக்கமானவர்களும், நித்திய தெய்வீகத்தோடு இரத்த உறவுள்ளவர்களும், இவ்வாறு அவருடைய வல்லமை மற்றும் தேவ இலட்சணங்களின் உறவுக்காரியுமான இராக்கினியே வாழ்க!'' என்னும் புகழ்ச்சிக் கீதத்தில் அவர்களோடு சேர்ந்துகொள்ளும் படியாக, பூலோகத்தில் மாமரியின் இனிய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்திருப்பார்களாக.

‘ஃபீனெஸ் திவினித்தாத்திஸ் ப்ரொப்பிங்க்குயிஸ் ஆத்திஞ்ஜித்'' அர்ச். தாமஸ் அக்குயினாஸ்.

இங்கே நாம் நம் புத்தகத்தை முடித்துக் கொள்வோம், ஆயினும், நாம் சொல்லியுள்ள எல்லாவற்றிலிருந்தும் ஒரு பொது முடிவை எடுப்பதற்கு முன்பாக அல்ல. நம் வாசகர்கள் எப்படி ஒரு அத்தியாயத்திலிருந்து மற்றொரு அத்தியாயத்திற்குக் கடந்து சென்று, நாம் நம்புவது போல, நமது தியானப் பொருள் பற்றிய அதிக முழுமையானதும், அதிகம் சிறந்ததுமான அறிவைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதைப் பொறுத்து, அவர்களுடைய மனங்களின் மீது மின்னித் துலங்க வேண்டிய முடிவாக அது இருக்கிறது.

இந்த முடிவு இதுதான்: கடவுளின் அதியற்புதத் தாயாருக்குரிய சங்கை மரியாதை வணக்கத்தை மதிப்பிட யாரால் முடியும்? அப்படியே, கடவுளிடம் அவர்கள் கொண்டுள்ள அதிகாரம், வரம்பு ஆகியவற்றின் அளவையும், அதன் காரணமாக, நாம் அவர்களில் வைக்க வேண்டிய நம்பிக்கையின் அளவையும் யாரால் வரையறுக்க முடியும்?

நாம் இது வரை சொல்லியுள்ள அனைத்தினுடையவும் சுருக்கம் இதை அதன் தெளிவான ஒளியில் வைக்கும்.

மாமரி நித்தியத்திலிருந்தே முன்குறிக்கப்பட்டது, கிறீஸ்து நாதரின் தாயார் என்ற முறையில் அவரோடு இசைந்திருக்க வேண்டியதாக இருந்தது என்றும், கிறீஸ்துநாதரின் தாயாராகவும், மனுக்குலத்தின் மனிதத் தலைவி என்ற முறையிலும், மனிதாவதாரம், இரட்சணியம் ஆகியவற்றிற்குத் தன் சம்மதத்தைக் கொடுக்க, அல்லது கொடுக்காமல் நிறுத்தி வைக்க, சிருஷ்டிக்கப்பட்ட சகல ஆளுமைகளின் பிரதிநிதியாகத் தேர்ந்துகொள்ளப்பட்டார்கள் என்றும், இதன் காரணமாக, அவர்கள் இந்தப் பரம இரகசியங்களின் மத்தியஸ்தியாக ஏற்படுத்தப்பட்டார்கள் என்றும், மனிதாவதார நேரத்தில் தான் தந்த இந்தச் சம்மதத்தை, கல்வாரியின்மீது நம் இரட்சணியம் நிறைவேறிய சமயத்தில் அவர்கள் உறுதிப்படுத்தி னார்கள் என்றும், சிருஷ்டிக்கப்பட்ட சகல புத்தியுள்ள ஜீவியர்களின் அளவுக்கும் அப்பாற்பட்ட ஓர் அளவில் சுபாவமானவையும், சுபாவத்திற்கு மேலானவையுமான இலட்சணங்கள் அவர்கள் மீது பொழியப்பட்டன என்றும் நாம் பார்த்திருக்கிறோம். தன்னுடைய ஃபியாத்தின் காரணமாக, வேறு எந்த சிருஷ்டியிடமிருந்தும் கடவுள் பெற்றிராத ஒரு மகிமையை அவர்கள் அவருக்குத் தந்தார்கள் என்றும், அவர்கள் மறுபிறப்படைந்த மனுக்குலத்தின் தாயாராகவும், சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாகவும், பரலோக பூலோக இராக்கினியாகவும் ஆனார்கள் என்றும் நாம் பார்த்திருக்கிறோம். 

இனி, இத்தகைய ஒரு சிருஷ்டி எப்பேர்ப்பட்ட சங்கை வணக்கத் திற்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது? எத்தகைய பிரமிப்புள்ள பாராட் டையும், எத்தகைய நேசத்தையும் அவர்கள் நம்மிடமிருந்து பெற உரிமை பாராட்டாதிருக்கக் கூடும்? கத்தோலிக்கத் திருச்சபையோ, எந்த ஒரு கத்தோலிக்கனுமோ, மாமரிக்குக் குறைவான சங்கை மரியாதையும் நேசத்தையும் தர முடியுமா? மாமரி நம் ஞான ஜீவியத்தின் விடியற்காலத்திலும், அதன் தொடர்ச்சியிலும், அதன் இறுதி நிறைவேற்றத்திலும் ஒத்துழைக்கிறார்கள் என்றால், நம் இரட்சணியத்தின் எல்லா மூலாதாரங்களிலும் அவர்கள் எடுத்த பங்கைப் பற்றியும், அந்த மூலாதாரங்களை நமக்குப் பயன்படுத்து வதில் அவர்கள் எடுக்க வேண்டிய பங்கு பற்றியும் நாம் சிந்திக்கும் போது, இது வேறு எப்படியும் இருக்க முடியுமா?

இதன் காரணமாக, கத்தோலிக்கத் திருச்சபை கடவுளாகத் தான் வழிபடுகிற சேசுநாதருக்கு அடுத்ததாக, அவருடைய தாயாகிய அதியற்புதமான சிருஷ்டியை, மற்ற சகல அர்ச்சியசிஷ்டவர் களுக்கும் தான் செலுத்துகிற நேசத்திற்கும் வணக்கத்திற்கும் மேலானதொரு நேசத்தையும் வணக்கத்தையும் கொண்டு மகிமைப் படுத்தி, சங்கை செய்யும்போதும், ஒவ்வொரு வரப்பிரசாதத் தினுடையவும் ஊற்றாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கு அடுத்ததாக, மாமரி வரப்பிர சாதங்களைச் சம்பாதிப்பதில் ஒத்துழைத்தது போலவே, அந்த வரப் பிரசாதங்களைப் பகிர்ந்தளிப்பதிலும் ஒத்துழைப்பவர்கள் என்ற முறையில், மாமரியில் தன்னுடைய முழு நம்பிக்கையையும் வைக்கும்போதும், அது முற்றிலும் சீரான, சரியான ஒரு காரியத்தையே செய்கிறது. 

ஆகவே, மாமரி கத்தோலிக்கத் திருச்சபையில் சேசுநாதருக்கு அடுத்ததாக, ஓர் அளவற்ற தொலைவில், ஓர் இடத்தை மாமரி கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஏனெனில் சேசுக் கிறீஸ்துநாதர் கடவுளாகவும், நம் இரட்சணியத்தின் நிஜமான, நேரடியாக காரணராக இருக்கிறார். ஆனால் அவருக்கு அடுத்ததாக, நம் இரட்சணியத்திற்காக ஒத்துழைத்த இரண்டாந்தரக் காரணமாக அவருடைய தாயார் நிற்கிறார்கள். இந்தப் பரம இரகசியங்கள் நிறைவேற முன்பு மாமரி ஒத்துழைத்தார்கள் என்பதால் இது வெறும் ஏட்டளவிலான ஒத்துழைப்பாக மட்டுமின்றி, ஒவ்வொரு காரியத் திலும் திடமான ஒத்துழைப்பாக இருக்கிறது, ஏனெனில் தம்முடைய வேலைகளை நிறைவேற்றுவதில் கடவுள் பயன்படுத்துகிற மூல காரணிகள் காலத்திலும், இடத்திலும் நிரந்தரமானவையாகவும், தொடர்ச்சியாகவும், ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்விலும் செயல்படுபவையாகவும் இருக்கின்றன. ஆகவே, இதுதான் நம் இரட்சணியக் கட்டமைப்பில் மாமரியின் இடமாக இருப்பதால், அவர்களுக்காக ஓர் உண்மையான, ஏக்கமுள்ள, மட்டற்ற நேசத்தை நாம் உணர வேண்டும் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? சேசுநாதருக்கு அடுத்ததாக, அவர்களில் நம் முழு நம்பிக்கையையும், நம் நம்பிக்கைக்கான முழுக் காரணத்தையும் வைக்க வேண்டும் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அர்ச்சியசிஷ்டவர்களை எவ்வளவுதான் சங்கை செய்து, அவர்களுடைய பரிந்துரையில் குறிப் பிட்ட அளவு நம்பிக்கையை வைத்தாலும், யாரையும், அல்லது உண்மையில் அவர்கள் எல்லோரையும் மாமரியை நாம் பார்க்கும் முறையில் ஒருபோதும் பார்க்க முடியாதிருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அவர்களோ கடவுளின் திரு மாதாவாகவும், நம் சொந்த ஞானத் தாயாராகவும், சகல வரப்பிரசாதங்களையும் பகிர்ந்தளிப் பவர்களாகவும் இருக்கிறார்கள். கடவுள் அவர்களை நம் எல்லோருக்கும் மேலாக நம் மனங்களுடையவும், நம் சித்தத் தினுடையவும், நம் இருதயங்களுடையவும் இராக்கினியாக வைத்திருக்கிறார். நாம் மாமரிக்குரியதாகக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் அவர்களில் நாம் வைக்கும் இந்த நம்பிக்கை சர்வேசுர னுடைய திருச்சபைக்குவெளியே இருக்கும் மிகக் கொடிய நிர்ப்பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்களை நோகச் செய்கிறது, நோகச் செய்திருக்கிறது. ஆனால் கடவுள் செயல்படுத்தத் தேர்ந்துகொண்ட அமைப்பை அவர்கள் புரிந்துகொள்ளாதது நம் குற்றமா? அந்த அமைப்பில் மாமரி வகிகும் இடத்தை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் போவது நம் குற்றமா? கடவுளின் செயல்பாட்டின் சகல பரம இரகசியங்களைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவில்லை என்றால் அது நம் குற்றமா? கத்தோலிக்கத் திருச்சபையின் சாராம்சத்தையும், தன்மையையும் குணங்களையுமே உருவாக்குகிற, இரட்சணியத்தினுடையவும், காலத்திலும், இடத் திலும் அவற்றின் பரவலையும் பற்றிய எல்லாச் சிந்தனைகளையும் அவர்கள் இழந்து விட்டார்கள் என்றால்? மாமரி தாக்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தாவீதின் உப்பரிகை யாக இருக்கிறார்கள். ஓராயிரம் வட்ட வடிவக் கவசங்கள் அதிலிருந்து தொங்குகின்றன; எல்லாமே வீரமிக்கவர்களின் கவசங்கள். கடவுளின் கைவேலையின் முழு அமைப்பையும் தாக்காமல் நீ அவர்களைத் தாக்க முடியாது. முழு அமைப்பின் நல்லவிணக்கத்தையும் சிதைக்காமல் நீ அவர்களைத் தொட முடியாது. கத்தோலிக்க சத்தியத்தின் ஏதாவது ஓர் அத்தியாவசிய மான பகுதியை மறுதலிக்காமல், அவர்களுடைய ஒரே ஒரு வரப் பிரசாத சலுகையைக் கூட நீ மறுதலிக்க முடியாது. செயல்பாட்டின் சகல பரம இரகசியங்களைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவில்லை என்றால் அது நம் குற்றமா? கத்தோலிக்கத் திருச்சபையின் சாராம்சத்தையும், தன்மையையும் குணங்களையுமே உருவாக்குகிற, இரட்சணியத்தினுடையவும், காலத்திலும், இடத் திலும் அவற்றின் பரவலையும் பற்றிய எல்லாச் சிந்தனைகளையும் அவர்கள் இழந்து விட்டார்கள் என்றால்? மாமரி தாக்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தாவீதின் உப்பரிகை யாக இருக்கிறார்கள். ஓராயிரம் வட்ட வடிவக் கவசங்கள் அதிலிருந்து தொங்குகின்றன; எல்லாமே வீரமிக்கவர்களின் கவசங்கள். கடவுளின் கைவேலையின் முழு அமைப்பையும் தாக்காமல் நீ அவர்களைத் தாக்க முடியாது. முழு அமைப்பின் நல்லவிணக்கத்தையும் சிதைக்காமல் நீ அவர்களைத் தொட முடியாது. கத்தோலிக்க சத்தியத்தின் ஏதாவது ஓர் அத்தியாவசிய மான பகுதியை மறுதலிக்காமல், அவர்களுடைய ஒரே ஒரு வரப் பிரசாத சலுகையைக் கூட நீ மறுதலிக்க முடியாது.

மாமரி கடவுளின் தாயாராக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் அளவுக்கு மேலாக சங்கை செய்யப்படக் கூடாது? அத்தகைய சங்கையை நீ அவர்களுக்குத் தர மறுப்பாய் என்றால், அதன் காரணம் என்னவெனில், அவர்கள் எப்படி கடவுளின் தாயாராக இருக் கிறார்கள் என்பதை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான். இதன் காரணமாக, நீ மனிதாவதாரப் பரம இரகசியத் தையே தாக்குகிறாய், தேவ-மனிதனாகிய கிறீஸ்துநாதர் என்னும் கருத்தையே நீ அழிக்கிறாய். அது அழிக்கப்படுகிறது என்றால், பாவப் பரிகாரத்திற்கு என்ன ஆகும்? அவருடைய வரப்பிரசாதம், தேவத்திரவிய அனுமானங்கள், அவருடைய திருச்சபையின் தெய்வீகத் தொடக்கம் ஆகியவற்றின் நற்பயனுள்ள தன்மைக்கு என்ன ஆகும்? நம்முடைய இரட்சணியத்திற்கு அவசியமான வரப்பிரசாதங்களைச் சம்பாதிப்பதிலும், அவற்றைப் பகிர்ந்தளிப்பதிலும் ஒரு பங்கைக் கொண்டிருக்க கடவுளால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கும்போது, அவர்களுடைய திருச்சுதனுக்கு அடுத்ததாக நாம் ஏன் நம்முடைய நம்பிக்கையை எல்லாம் அவர்கள் மீது வைக்கக் கூடாது?

மாமரியின் இத்தகைய ஊழியத்தை நீ மறுதலிக்கிறாய் என்றால், கடவுளின் வேலைகளாகிய அமைப்பிலிருந்து, சிருஷ்டிக்கப்பட்ட முகமையாகிய மூல காரணியை, கடவுள் எவ்வளவோ சிரமமெடுத்து அறிமுகப்படுத்தி, மகிமைப்படுத்தியிருக்கிற சிருஷ்டிக்கப்பட்ட ஆளுமையாகிய மூல காரணியை நீ அகற்ற முயல்கிறாய். கடவளின் பரம இரகசியங்களை நீ தவறாகப் புரிந்துகொள்கிறாய்.

இல்லை! மாமரி கடவுளின் மகா மகிமையுள்ள திருத்தாயார் என்ற முறையிலும், கடவுளின் பரம இரகசியங்களின் மத்தியஸ்தி யாகவும், நம் இரட்சணியப் பலியில் பெண்குருவாகவும், படைக்கப் பட்ட ஆளுமையின் பக்திக்குரியதும், மிக அதியற்புதமானதுமான வெளிப்பாடாகவும், ஒவ்வொரு சுபாவமான உத்தமதனத்தினுடை யவும் குவியலாகவும், ஒவ்வொரு சுபாவத்திற்கு மேற்பட்டதும் தெய்வீகமானதுமாகிய கொடையின் புதுமையும் அற்புதமுமாகவும், கடவுளின் மிகுந்த பக்திக்குரிய மகிமைப்படுத்தப்படுதலின் கருவி யாகவும், பிரபஞ்சத்தினுடையவும், சம்மனசுக்களினுடையவும், சகல மனிதர்களுடையவும் படைப்பு மற்றும் உயர்த்தப்படுதலின் கருவி யாகவும், அவர்களுடைய நித்திய இரட்சணியம் மற்றும் பேரின்பத்தின் இரண்டாந்தரக் காரணமாகவும், புதுப் பிறப் படையும் இஸ்பிரீத்துக்களின் தாயாராகவும் சங்கை செய்யப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டே ஆக வேண்டும். மீட்பரின் திருத்தாயா ராகவும், அவருடைய வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாகவும், ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்விலும், ஒவ்வொரு கொடை மற்றும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பகிர்ந்தளிப்பவர்களாகவும் நம் எல்லா நம்பிக்கையையும் அவர்களில் வைக்க நமக்கு முழுமையான காரணம் இருக்கிறது.

மாமரிக்கு வணக்கம் செலுத்த மறுப்பவர்கள் கடவுளையோ, கிறீஸ்துநாதரையோ, அவர்கள் நமக்காக நிறைவேற்றத் திருவுளங் கொண்ட அற்புதமான காரியங்களையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பிதாவையும் சுதனையும் அங்கீகரித் தாலும், அதே திருச்சுதனைக் கருத்தரித்துப் பெற்றெடுக்கும் மகிமையில் பிதாவானவர் தம்மோடு இணைத்துக்கொண்ட பக்திக்குரிய சிருஷ்டியை ஒதுக்குகிறார்கள் என்பதால், அவர்கள் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியான வரின் மிகக் கடுமையான வற்புறுத்தலின் கீழ், மிகுந்த பக்திக்குரிய நேசப் பரவசத்தில், ‘‘இதோ, இந்நாள் முதல் எல்லாத் தலைமுறை யாரும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்'' என்று மாமரி முன்பு கூறிய அந்தக் குடும்பத்தைச் சேராதவர்களாக அவர்கள் இருக் கிறார்கள். இது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் கீழ் உரைக்கப் பட்ட தீர்க்கதரிசனமாக இருந்தது. இதன் நிறைவை மாமரி அப்போதுதான் பெற்றிருந்தார்கள். மாமரியை பாக்கியவதி என்று அழைக்கிறவர்கள் யார்?

நிச்சயமாக அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான், பிதாவிடமிருந்தும், சுதனிடமிருந்தும் தாயாரை இவர்கள் பிரிப்பது இல்லை. அந்த ஈடிணையற்ற திருமாதாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய விசேஷ வணக்கம் தங்கள் உள்ளத்தில் பொங்கிப் பெருகி நிற்பதை அவர்கள் உயர்கிறார்கள். நிச்சயமாக கத்தோலிக்கத் திருச்சபைதான் அந்தக் குழந்தை. நிச்சயமாக எல்லாக் கத்தோலிக்கர் களும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

கடவுளாலும், தேவதூதரின் வாயாலும் அழைக்கப்பட்ட படியும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட அர்ச். எலிசபெத் தம்மாளால் அழைக்கப்பட்டபடியும் மாமரியைப் பாக்கியவதி என்று அழைக்க மறுக்கும் அனைவரும், கடவுளின் வீட்டாராக இல்லை, அவர்கள் மெய்யான விசுவாசத்திலிருந்து அந்நியப்பட் டிருக்கிறார்கள், அவர்கள் அந்நியராகவும், இலக்கின்றி அலைந்து திரிகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த மகிமையுள்ள தாயார் இவர்கள் அனைவரையும் ஒரே ஆட்டுப்பட்டிக்குள் கொண்டு வந்து சேர்ப்பார்களாக! அங்கே ஒரே மேய்ப்பரும், ஒரே மந்தையும் இருப்பார்களாக!