தொடக்க ஜெபம்:
அர்ச்சியசிஷ்ட யூதா ததேயூவே! மாட்சிமைமிக்க திருத்தூதரே! இறைமகன் இயேசுவின் பிரமாணிக்கம் உள்ள ஊழியரும், நண்பரும் ஆனவரே. அர்ச்சியசிஷ்ட தாய் திருச்சபை உம்மை கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராக அறிவித்துள்ளது. எங்கள் அவசரங்களிலும், இக்கட்டுகளிலும், தேவைகளிலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறுதி நாளில் எங்களுக்கு ஆறுதலையும் மோட்ச பாக்கியத்தையும் கட்டளையிட்டருள எங்களுக்காக இறைவனை மன்றாடும். குறிப்பாக (தேவைகளை கேட்கவும்) இந்த மன்றாட்டுக்களை எங்களுக்கு அடைந்து தந்தருளும். அதனால் நாங்கள் இறைவனின் மாட்சிமையையும் பாவிகள் எங்கள் மேல் அவர் கொண்டுள்ள பரிவையும் கண்டு அவரை என்றென்றும் புகழ்ந்து பாடுவோமாக. ஆமென்.
அருள் நிறைந்த...
புனித யூதா ததேயுவே! திருத்தூதரே, மறைசாட்சியே! இயேசு மேரி சூசையின் நெருங்கிய உறவினரே! எங்களுக்காக மன்றாடும். ஆமென். (9)
இறுதி செபம்:
இயேசுவின் மதுரமான திருஇருதயம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் அன்பு செய்யப்படுவதாக.
இயேசுவின் மதுரமான திருஇருதயம் இன்றும் என்றும் எக்காலத்திலும் புகழ்ந்து மகிமைபடுத்தபடுவதாக.
அர்ச்சியசிஷ்ட யூதா ததேயுவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவின் திரு இருதயம் என்றும் ஆராதிக்கப்படுவதாக.
மரியாயின் மாசற்ற திரு இருதயம் என்றும் வணங்கப்படுவதாக.
அர்ச்சியசிஷ்ட யூதா ததேயு என்றும் வாழ்த்தப்படுவாராக.
ஆமென்.