பரிசுத்த ஆவியின் ஜெபமாலை.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

பரிசுத்த ஆவியின் ஜெபம்:

திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி! ஆமென்.

பரிசுத்த ஆவியே, தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர். ஆமென்.

பிதாவுக்கும்…
விசுவாசப்பிரமானம்…
பரலோகத்திலிருக்கின்ற…

(முதல் மூன்று மணியில் மூன்று முறை)

பரம பிதாவே பரிசுத்த ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே...

1. அர்ச்சிக்கும் தேவனாகிய பரிசுத்த ஆவி நம்மைப் புனிதத்தில், பரிசுத்தத்தனத்தில் உணர்ச்சியுறும்படி செய்யும் நன்மைக்கு நன்றி கூறுவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

2. உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேறச் செய்ததற்கு நன்றி செலுத்துவோம்

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

3. வார்த்தை மனுவுருவாகி மீட்புப் பணியை நிறைவேற்றியதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

4. பரிசுத்த ஆவி, தேவமாதாவின் பேரிலும், அப்போஸ்தலர்கள் பேரிலும் இறங்கியதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

5. பரிசுத்த திருச்சபையை விசுவாசத்திலும், பரம அன்பிலும் வழிநடத்திச் செல்வதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

6. திவ்விய பலி பூசை இவ்வுலகில் ஒவ்வொரு வினாடியும் நடைபெறும்படி செய்ததற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

7. பரிசுத்த திருச்சபையில் புனிதர் புனிதைகளை உருவாக்கும்படியாக மன்றாடுவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

ஜெபிப்போமாக.

சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே, அந்த பரிசுத்த ஆவியினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக. ஆமென்.

இஸ்பிரீத்துசாந்துவின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிபூரண நன்மையாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஓயாத பரம சஞ்சீசவியாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவ அக்கினிக் கொழுந்தாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அக்கினி நாக்கு ரூபமாய் அப்போஸ்தலர்கள் பேரில் இறங்கின இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவத்திரவிய பொக்கிஷமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தஞ்செய்கிற தீர்த்தமான இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திருச்சபைக்கு அலங்கார கிரீடமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பக்தி என்கிற ஆசைக்கு யோக்கியமாய் இருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விசுவாசம் என்ற மழையைப் பொழிகிற மேகமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நம்பிக்கை என்கிற பலத்தைத் தருகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தாழ்ச்சி என்கிற மவுனந் தருகிறவராயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தனிமையாயிருப்பவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இளைப்பாறுகிறவர்களுக்கு அமிர்த போசனமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

களைப்பாயிருப்பவர்களுக்கு நிழற்சோலையாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரதேசிகளுக்கு அண்ணலும், பாதுகாவலுமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பொறுமையுள்ளவர்களுக்குச் செல்வத்தின் ஊருணியாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

துக்கமாயிருக்கிறவர்களுக்கு சந்தோஷத்தை வருத்துவிக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கவிவாணருக்கு வித்தையின் திறமை கொடுக்கிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விசுவாசம் இல்லாதவர்களுக்கு அதை வருவிக்கிற உபாத்தியாயராயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தியானத்துக்குக் காரணரான இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இங்கிதமான ஞானக் கொடையாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கவியோகமாகி அழியாத மேக உருவாய் இருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பாவத்திலே அழுந்தியிருக்கிறவர்களை இரட்சிக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நரகத்திற்குப் போகிறவர்களைக் கை தூக்கி இரட்சிக்கிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புண்ணியம் என்னும் கனி விருட்சமாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தர்ம நடத்தையுள்ள பேர்களுக்கு வசீகரமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பூசிக்கிறவர்களுக்கு வேதமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனவல்லயம் என்கிற புஷ்பங்களைப் புஷ்பிக்கிற பூங்காவனமாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சுகந்தங்களைப் பார்க்க வசந்த நிழலாய் இருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அஞ்ஞானமென்கிற இருளை நீக்குகிற ஞானச் சூரியனான இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மிகவும் மதுரமான தேவ அமிர்தமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கருணை சமுத்திரமான இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சந்திரனைப் பார்க்க மிகவும் குளிர்ந்த பிரகாசமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தீர்க்கதரிசனத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தீர்க்கதரிசிகளுக்கு ஞானங்கொடுக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிரதான பிதாக்களுக்கு பிதாவாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளுக்குத் திடனான இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அப்போஸ்தலர்களுக்குக் குருவாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னியாஸ்திரீகளுடைய கன்னிமையைக் காக்கும் குருவாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுக்கு இறைவனாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சந்நியாசிகளுக்கு ஆபரணமாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் கிரீடமான இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜெபிப்போமாக.

அளவற்ற நன்மைத்தன்மையும், இரக்கத்தையுங் கொண்டிருக்கிற என் ஆண்டவராகிய சர்வேசுரா, உமது இஸ்பிரீத்துசாந்துவானவர் எங்களை ஆண்டு கற்பித்தருள அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுகளையெல்லாம் உம்மோடு ஏகருமாய் இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். பிதாவோடேயும், சுதனோடேயும், இஸ்பிரீத்துசாந்துவோடேயும் ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும், எப்பொழுதும், அநாதி சதாகாலமும் இருக்கக் கடவதாக.

ஆமென்.