இறை இரக்கத்தின் ஜெபமாலை.

சகோதரி பவுஸ்தீனாவுக்கு சேசு கற்பித்த இரக்கத்தின் ஜெபமாலை.

✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே! ஆமென்.

பரலோக மந்திரம்.
பரலோகத்திலே இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக! உம்முடைய இராச்சியம் வருக! உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக! எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்! எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

அருள் நிறைந்த மந்திரம்.
அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

திரித்துவ தோத்திரம்.
பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்துசாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது, ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், அநாதி சதாகாலமும் இருக்கும்படியே. ஆமென் சேசு.

பாத்திமா அன்னை செபம்:
ஓ! என் சேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் மோட்சத்திற்கு சேர்த்தருளும். விசேஷமாய் உமது இரக்கம் யார்யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவி புரிந்தருளும். ஆமென்.

விசுவாசப்பிரமாணம்.
ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், சேசுக்கிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறேன். ஆமென்.

பிற்பகல் மூன்று மணி இறை இரக்கத்தின் செபம்:
சேசுவே நீர் மரித்தீர். உம் மரணத்திலிருந்து சீவியத்தின் சுனை ஆன்மாக்களுக்காகப் பொங்கிப் பாய்ந்தது. உலகம் முழுவதற்கும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது. ஓ சீவிய ஊற்றே! ஆழம் காணமுடியாத கடவுளின் இரக்கமே, உலகம் முழுவதையும் உன்னுள் பொதிந்து உன்னையே எம்மீது பொழிந்து வெறுமையாகி விடுவாயாக. சேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாகப் பொங்கிப் பாய்ந்த இரத்தமே, தண்ணீரே! உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன். ஆமென்.

செபமாலைத் தேவ இரகசியங்கள்:

I. பூங்காவனத்தில் வியர்வையாக சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியனிப்போமாக.
II. கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்டபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியானிப்போமாக.
III. முள்முடி சூட்டப்பட்டபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியானிப்போமாக.
IV. சிலுவை சுமந்து சென்றபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியானிப்போமாக.
V. சிலுவையில் அறையப்பட்டபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியானிப்போமாக.

செபமாலையின் பெரிய மணியில்:
நித்தியப் பிதாவே! உம்முடைய திருக்குமாரனும், எங்களாண்டவரும் இரட்சகருமாயிருக்கிற சேசுகிறீஸ்துவின் திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், எங்கள் பாவங்களுக்கும், உலகத்தார் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறேன்.

செபமாலையின் சிறிய மணியில்:
சேசுவின் மிகத் துயரமான பாடுகளைக் குறித்து, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும்.

செபமாலை முடிவில்:
பரிசுத்தரான சர்வேசுரா! பரிசுத்தரான எல்லாம் வல்லவரே! பரிசுத்தரான நித்தியரே! எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும்.
(3 விசை).

சேசுநாதருடைய இரக்கத்தின் பிரார்த்தனை:

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சகலமும் சிருஷ்டிக்கப்படக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

மகா பரிசுத்த திரித்துவ பரம இரகசியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

பரலோக சம்மனசுக்களை சிருஷ்டிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே,  என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நாங்கள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றிவரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

பாவச் சேற்றிலிருந்த எங்களை மீட்டுக் கைதூக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

மனித அவதாரத்தையும், பாடுகளையும், மரணத்தையும் ஏற்றுக்கொள்ளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சகல மனிதருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உமது வரப்பிரசாதங்களை முன்னதாகவே எங்களுக்கு அருளக் காரணமான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச் செய்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சத்தியத் திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

தேவ திரவிய அனுமானங்களின் கொடைகளை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

ஞானல்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

திவ்விய நற்கருணையிலும், குருத்துவத்திலும் இறை இரக்கத்தைத் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

பாவிகளை மனம் திருப்புவதில் இறைஇரக்கத்தை காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

அவிசுவாசிகள் ஒளிபெறுவதில் இறைஇரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நீதிமான்களின் அர்ச்சிப்பில் இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களை புனிதப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

இரக்கத்தின் தாயாக பரிசுத்த தேவமாதாவை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நோயாளிகளுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

இரட்சிக்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மரிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மரிப்புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மரிப்புருவையாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

ஆண்டவருடைய இரக்கம், அவருடைய சகல  சிருஷ்டிப்புக்கள் பேரிலும் உள்ளது. ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவோம்.

பிரார்த்திக்கக்கடவோம்:
மகா தயை நிறைந்த சர்வேசுரா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே! உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் பெரிய சோதனைகளிலும் உமக்கு பிரமாணிக்கமாய் இருக்க உமது இரக்கத்தின் வரப்பிரசாதங்களை எங்கள் மீது நிறையப் பொழிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதாகாலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுக்கிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.  ஆமென்.

பரிசுத்த ஜெபம்.

ஆண்டவரே,
நீர் ஒருவரே பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.
நீர் ஒருவரே உன்னதர், உன்னதர், உன்னதர்.
நீர் ஒருவரே தூயவர், தூயவர், தூயவர்.
நீர் ஒருவரே வல்லவர், வல்லவர், வல்லவர்.
நீர் ஒருவரே நல்லவர், நல்லவர், நல்லவர்.
நீர் ஒருவரே நீதிமான், நீதிமான், நீதிமான்.
நீர் ஒருவரே மருத்துவர், மருத்துவர், மருத்துவர்.
நீர் ஒருவரே ஆண்டவர், ஆண்டவர், ஆண்டவர்.
நீர் ஒருவரே வாக்குமாறாதவர், வாக்குமாறாதவர், வாக்குமாறாதவர்.
நான் உம்மை போற்றுகிறேன், புகழ்கிறேன், வாழ்த்துகிறேன், ஆராதிக்கிறேன், நன்றி செலுத்துகிறேன்.
ஏனெனில் நீர் உம்முடைய ஒரே மகனையே எங்களுக்காக கல்வாரியில் தியாகம் செய்தீர்.
அவருடைய பரிசுத்த இரத்தத்தின் நிமித்தமாவது இந்த உலகத்தின் மேல் இரக்கம் வையும்.
இயேசு கல்வாரியில் இன்றும் நமக்காக ஜெபிக்கிறார். இயேசுவின் பரிசுத்த இரத்தத்திற்கே வெற்றி! சாத்தானே அப்பாலே போ! ஆமென்.

✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே!

ஆமென் சேசு.