அர்ச். சூசையப்பர் செபமாலை.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரின் ஏழு வியாகுலங்களையும், ஏழு சந்தோஷங்களையும் குறித்துக் கேட்கும் மன்றாட்டு.

1. முதல் வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் கன்னி மரியாயின் கெற்பத்துக்குக் காரணமறியாமல் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் காரணத்தை சம்மனசினாலறிந்து நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

2. இரண்டாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! சேசுநாதர் மாட்டுக்கொட்டிலில் பிறந்ததைக் கண்டு நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் அவர் சம்மனசுக்களாலும், மனிதர்களாலும் ஆராதிக்கப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

3. மூன்றாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! திவ்விய குழந்தை விருத்த சேதனப்பட்டதைக் கண்டு நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் அவருக்கு சேசுவென்னும் திருநாமம் தரிக்கப்படுவதைக் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

4. நான்காவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! திவ்விய குமாரனுடைய பாடுகளையும், அவருடைய திருத்தாயாருடைய வியாகுலங்களையும் சிமியோன் முன்னறிவிக்கக் கேட்டு நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் மனுக்குலத்தின் இரட்சண்ணியத்தை அவர் முன்னறிவிக்கக் கேட்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

5. ஐந்தாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் எகிப்து தேசத்துக்கு ஓடிப்போனதைப் பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் நீர் திவ்விய இரட்சகரைக் காப்பாற்றினதைப் பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

6. ஆறாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எகிப்து தேசத்தினின்று திரும்பி வருகையில் நீர் பட்ட பயத்தைப் பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் சம்மனசின் காட்சியால் தேறுதல் அடைந்ததைப் பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

7. ஏழாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! சேசுநாதர் காணாமல் போனதினால் நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் அவரை மறுபடியும் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
ஆமென்.

 சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்:
சர்வேசுரா சுவாமி, உம்முடைய மிகவும் அர்ச்சியசிஷ்ட திருமாதாவுக்கு பரிசுத்த பத்தாவாக முத்தரான அர்ச்சியசிஷ்ட சூசையப்பரை மனோவாக்குக்கெட்டாத பராமரிப்பால் தெரிந்துகொள்ளத் திருவுளமானீரே! பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர், பரலோகத்தில் மனுப்பேசுகிறவராய் இருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே!

ஆமென்.