✠ ஏழு தலையான பாவங்கள்

Nihil Obstat: William J. Blacet, J.C.L., Censor Librorum.

Imprimatur: John P. Cody, S.T.D. Bishop of Kansas City -St. Joseph. July 16, 1959.


முன்னுரை: ஏழு தலையான பாவங்கள்

 ஆங்காரம்

உலோபித்தனம் அல்லது பேராசை

மோகம்

கோபம்

காய்மகாரம்

போசனப் பிரியம்

சோம்பல்

பாவத்தின் ஏழு வேர்கள்

சேசுநாதர், நம் முன்மாதிரிகை


    மாம்சத்தோடும், இரத்தத்தோடும், துரைத்தனங்களோடும், வல்லமைகளோடும், இந்த அந்தகார உலகாதிபதிகளோடும், ஆகாச மண்டலங்களிலுள்ள அக்கிரம அருபிகளோடும் நாம் போராட வேண்டியிருக்கிறது. இதின் நிமித்தம், பொல்லாத நாளிலே அவைகளை எதிர்த்து நிற்கவும், எல்லாக் காரியங்களிலும் நீங்கள் உத்தமராய் நிலைநிற்கவும் திராணியுள்ளவர்களாய் இருக்கும்படி சர்வேசுரனுடைய போராயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆதலால் நிலைமையாய் நின்று, சத்தியத்தில் உங்கள் இடையை வரிந்து கட்டுங்கள்; நீதியின் மார்க்கவசத்தைப் பூண்டு கொள்ளுங்கள். சமாதான சுவிசேஷத்துக்கு ஆயத்தமாகிய பாதரட்சையைத் தொடுத்துக் கொள்ளுங்கள். கொடுங்கொடியோன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை எல்லாம் அவித்துப் போடுவதற்கு வல்லவர்களாயிருக்கும்படிக்கு எல்லாக் காரியங்களிலும் விசுவாசக் கேடயத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இரட்சணியத்தின் தலைச் சீராவையும், தேவ வாக்கியமாகிய ஞான வாளையும் எடுத்துக் கொள்ளுங்கள். (எபே. 6:12-17).

மன அடக்கமும், விழிப்பும் உள்ளவர்களாயிருங்கள்; ஏனெனில் உங்கள் சத்துருவாகிய பசாசு கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாமோவென்று தேடி சுற்றித் திரிகிறது. ஆகையால் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய் அதற்கு எதிர்த்து நில்லுங்கள். உலகத்திலுள்ள உங்கள் சகோதரர்களுக்கும் இவ்விதத் துன்பங்கள் உண்டென்று அறிந்து கொள்ளுங்கள். கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சங் காலம் துன்பப் படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப் படுத்துவார். அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சிய பாரமும் உண்டாவதாக. ஆமென். (1 இரா. 5:8-11).


இன்று எனது பிரதிக்கினை

தீமையை எதிர்த்து நின்று, நன்மை செய்யவும்,

என் ஜீவியத்தின் அந்தஸ்திற்குரிய பொறுப்புகள் அனைத்தையும் பிரமாணிக்கத்தோடு நிறைவேற்றவும்,

என் அயலார்களோடு எனக்குள்ள அனைத்து தொடர்புகளிலும், உறவுகளிலும் இரக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்கவும்,

என் ஆத்துமத்தை முழுமையான பரிசுத்ததனத்தோடு காத்துக் கொள்ளவும் என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என்று இந்த நாளில் நான் பிரதிக்கினை செய்கிறேன்.

தீமை செய்யும் படி நான் சோதிக்கப் பட்டால், என் இருதயத்தில், எது சரியோ, அதைச் செய்; சரியாக இரு; மகிழ்ச்சியாயிரு என்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

இந்த எனது பிரதிக்கினைக்குப் பிரமாணிக்கமாய் இருக்க என்னால் இயலும்படி, என் சிருஷ்டிகராகிய சர்வேசுரனுடைய உதவியை இரந்து மன்றாடுவேன்.