பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்

குவோ ப்ரிமும் தெம்ப்போரே

பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் - 1570.

திரிதெந்தீன் இலத்தின் திவ்விய பலிபூசையைக் கத்தோலிக்கத் திருச்சபையின் நித்திய பலியாக்கும்படி, பாப்பரசர் எழுதிய ஆணை மடல்.

நாம் பிரதான அப்போஸ்தலரான இராயப்பரின் ஆசனத்திற்கு உயர்த்தப்பட்ட தொடக்க நாளிலிருந்தே, ஒரு மாசற்ற தேவ வழிபாட்டைப் பாதுகாப்பது தொடர்பான காரியங்களை நோக்கி நம் மனதையும், ஆற்றல்களையும் திருப்பி, நம் சிந்தனைகள் முழுவதையும் அவற்றை நோக்கிச் செலுத்தினோம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும்படி, நம் வல்லமைக்கு உட்பட்ட ஒவ்வொரு வழியிலும், கடவுளின் உதவியோடு கடுமையாக உழைத்தோம். ஏனெனில், பரிசுத்த திரிதெந்தீன் பொதுச்சங்கத்தின் மற்ற உத்தரவுகளைத் தவிர்த்து, ஞான உபதேசம், பூசைப் புத்தகம் மற்றும் கட்டளை ஜெபப் புத்தகம் என்னும் புனித நூல்களைச் சீரமைத்துத் திருத்தித் தொகுக்கும்படியான வேண்டுகோள்கள் நமக்கு விடுக்கப்பட்டிருந்தன. கடவுளின் உதவியோடு, விசுவாசிகளின் போதனைக்காக வெளியிடப்பட்ட ஞான உபதேசத்தோடும், கடவுளின் தகுதியுள்ள புகழ்ச்சிக்காக முற்றிலுமாகத் திருத்தியமைக்கப்பட்ட கட்டளை ஜெபப் புத்தகத்தோடும், பொருத்தமான, முறையான விதத்தில் பூசைப் புத்தகமும், கட்டளை ஜெபப் புத்தகமும் உத்தம இசைவோடு இருக்கும் படியாக - ஏனெனில் திருச்சபையில் சங்கீதங்களை வாசிக்க ஒரே ஒரு பொருத்தமான முறையும், திவ்விய பலி பூசை நிறைவேற்றப்படுவதற்கு ஒரே ஒரு சடங்கு முறையும் இருப்பது மிகவும் தகுதியானதாக இருக்கிறது - இன்னும் செய்து முடிக்கப்படும்படி எஞ்சியிருக்கிற காரியத்தை நோக்கி நம் நேரடிக் கவனத்தைத் திருப்புவது அவசியம் என்று நாம் கருதினோம், கூடிய விரைவில் பரிசுத்த பூசைப் புத்தகத்தைத் திருத்தியமைத்துத் தொகுத்துத் தருவதே அந்தக் காரியமாகும்.

இதன் காரணமாக, நாமே தேர்ந்தெடுத்த அறிஞர்களிடம் இந்த வேலையை ஒப்படைக்க நாம் தீர்மானித்தோம். அவர்கள் நம் வத்திக்கான் நூலகத்திலுள்ள புராதனமான கைழுத்துப் பிரதிகளையும், வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட நம்பத் தகுந்தவையும், பாதுகாக்கப்பட்டவையும் அல்லது தொகுத்து வைக்கப்பட்டிருந்தவையுமான கையெழுத்துப் பிரதிகளையும் கொண்டு தங்கள் வேலை முழுவதையும் மிகுந்த கவனத்தோடு ஒன்றுசேர்த்து, ஒழுங்குற அமைத்தார்கள். இது தவிர, இந்த மனிதர்கள், இதே புனித சடங்கு முறைகள் தொடர்பாக, பண்டைய, அங்கீகரிக்கப்பட்ட நூலாசிரியர்கள் எழுதியுள்ள புத்தகங்களையும் ஆராய்ந்து, திவ்விய பலிபூசைப் புத்தகத்தைப் பரிசுத்த வேத பிதாக்களின் ஆதி வடிவத்திலும், ரீதியிலும் மீண்டும் ஸ்தாபித்திருக்கிறார்கள். இந்த வேலை எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்ப சரிபார்க்கப்பட்டு, மென்மெலும் முறையாகத் திருத்தப்பட்டு முடிந்த பிறகு, தீவிரமான ஆய்வுக்கும், சிந்தனைக்கும் பிறகு, இந்த உழைப்பின் கனிகளை அனைவரும் சுவைத்து மகிழும்படியாகவும், இவ்வாறு, இப்போது முதல் பூசைகளை நிறைவேற்றுவதில் தாங்கள் எந்த ஜெபங்களைப் பயன்படுத்துவது என்றும், எந்தச் சடங்குகளைத் தாங்கள் அனுசரிக்க வேண்டுமென்றும் குருக்கள் அறிந்துகொள்ளும்படி யாகவும், செய்து முடிக்கப்பட்டுத் தயாராகியுள்ள பூசைப் புத்தகம் முடிந்த வரை விரைவாக அச்சிடப்பட்டு, வெளியிடப்பட வேண்டும் என்று நாம் கட்டளையிட்டோம்.

அனைவரும் எல்லா இடங்களிலும், மற்ற சபைகளின் தாயும் ஆசிரியையுமான பரிசுத்த உரோமைத் திருச்சபையால் கையளிக்கப்பட்டிருப்பதை ஏற்று அனுசரிப்பார்களாக, நம்மால் வெளியிடப்பட்டிருக்கிற இந்தப் பூசைப் புத்தகத்திலுள்ள பூசைச் சடங்கு முறையைத் தவிர வேறு எந்த முறையிலும் பாடற்பூசைகளோ, செபப் பூசைகளோ நிறைவேற்றப்படாதிருக்கக் கடவது. இப்போது முதல், இப்பொழுதும் என்றென்றும் இந்த ஆணை கிறீஸ்தவ உலகின் சகல மாகாணங்களிலும், சகல பிதாப்பிதாத்துவ, மேற்றிராசன ஆலயங்களுக்கும், கேனன் குருக்களுக்குரிய ஆலயங்களுக்கும், பங்குக் கோவில்களுக்கும், அவர்கள் மேற்றிராசன குருக்களானாலும் சரி, ஆண் பெண் துறவற சபையினரானாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் - இராணுவ சபைகளுக்கும் கூட - மடங்களுக்குரிய பூசைகள், உரோமைத் திருச்சபையின் ரீதிகளுக்கும் வழக்கங்களுக்கும் ஏற்றபடி, பொதுவில் சத்தமாகப் பாடப்படுகிற, அல்லது தனிமையில் வாசிக்கப்படுகிற, குறிப்பிட்ட சபை எதுவுமற்ற ஆலயங்களுக்கும், சிற்றாலயங்களுக்கும் பொருந்தும். எல்லா ஆலயங்களிலும், அப்போஸ்தலிக்க அனுமதியாலோ, வழக்கத்தாலோ அல்லது சலுகையாலோ, அல்லது பரிசுத்த ஸ்தானத்தின் அதிகாரபூர்வ உறுதிப்பாட்டால் அல்லது ஆணையாலும் கூட, தங்கள் அங்கீகாரத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்களாலும், அல்லது வேறு எந்த வகையிலும் தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் அல்லது அதிகாரங்களைக் கொண்டுள்ளவர்களாலும் இந்தப் பூசைப் புத்தகமே பயன்படுத்தப்பட வேண்டும்.

குறைந்த பட்சம் 200 ஆண்டுகளுக்கு முன் அப்போஸ்தலிக்க ஸ்தானத்தின் வழியாக, திருச்சபையால் ஸ்தாபிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே வேறு விதமாகப் பூசை நிறைவேற்றும் வழக்கம் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், அல்லது 200 வருடங்களுக்குக் குறையாத காலத்திற்குத் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்திருக்கிற இதுபோன்ற ஒரு வழக்கம் இருந்து வந்திருந்தால் தவிர, மற்றப்படி இந்தப் புதிய வழிபாட்டு ரீதி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இப்படித் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்திருக்கிற வழக்கத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மேலே குறிப்பிடப் பட்டுள்ள சலுகை அல்லது வழக்கத்தை நாம் எந்த விதத்திலும் ரத்துச் செய்ய மாட்டோம். ஆயினும், வெளியிடப்படத் தகுதியுள்ளதாக நாம் கண்டிருக்கிற இந்தப் பூசைப் புத்தகம், இந்தப் பிந்தைய வகையினருக்கு அதிகம் உகந்ததாக இருக்குமானால், தங்கள் மேற்றிராணியார் அல்லது ஆயர்நிலையினரின், அல்லது தங்கள் முழுமையான பொதுக்குழுவின் சம்மதத்தோடு, இந்த ரீதிப்படி திவ்விய பலிபூசை நிறைவேற்ற நாம் அவர்களுக்கு அனுமதியளிக்கிறோம். இதற்கு மாறான வேறு எதற்கும் நம் அனுமதியில்லை. 

ஆயினும், மேலே குறிப்பிடப்பட்ட ஆலயங்களில் மற்ற எல்லாவற்றிற்கும், மற்ற பூசைப் புத்தகங்களைப் பயன்படுத்தும் உரிமை இதன் மூலம் மறுக்கப்படுகிறது. அவை முற்றிலுமாகவும், பரிபூரணமாகவும் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நம்முடைய இந்தப் பூசைப் புத்தகத்தில் எதுவும் சேர்க்கப்படக் கூடாது என்றும், அதிலிருந்து எதுவும் நீக்கப்படக் கூடாது என்றும், அதனுள் எதுவும் மாற்றப்படக்கூடாது என்றும், இவற்றை மீறுவது நம்முடைய வெறுப்பின் தண்டனைக்கு உட்பட்டிருக்கும் என்றும், இது முதல் இப்போதும், இனி என்றென்றும் செல்லத்தக்கதாக இருக்கப் போகிற இந்தத் தற்போதைய ஆணை மடலைக் கொண்டு நாம் ஆணையிட்டு உறுதிப்படுத்துகிறோம்.

நம்மால் இங்கு இணைக்கப்பட்டுள்ள ரீதி மற்றும் விதிமுறைப்படி பூசையைப் பாட அல்லது வாசிக்க, இனி, எவ்வளவுதான் பழமையாக இருந்தாலும், தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வந்த மற்ற பூசைப் புத்தகங்களிலுள்ள மற்ற எல்லாச் சடங்குகளையும், ரீதிகளையும் நிறுத்தி விடவும், முற்றிலுமாக அகற்றி விடவும் வேண்டுமென்று, நமக்குக் கீழ்ப்படிய அவர்களுக்குள்ள பரிசுத்த கடமையை முன்னிட்டு நாம் ஒவ்வொரு பிதாப் பிதாவுக்கும், நிர்வாகிக்கும், எத்தகைய திருச்சபை சார்ந்த பதவியையும் வகிக்கும் அனைவருக்கும், பரிசுத்த உரோமைத் திருச்சபையின் கர்தினால்மாருக்கும், அல்லது எந்த ஒரு பதவியை வகிப்பவர்கள் அல்லது மிக உயர் பதவிகளை வகிப்பவர்களுக்கும் நாம் தனிப்பட்ட முறையில் உத்தரவிடுகிறோம். பூசை நிறைவேற்றுவதில் புதிய சடங்கு முறைகளையோ, இந்தப் பூசைப் புத்தகத்தில் உள்ள ஜெபங்களைத் தவிர வேறு ஜெபங்களையோ அறிமுகப் படுத்தத் துணியக் கூடாது என்றும் அவர்களுக்கு உத்தரவிடுகிறோம்.

மேலும், இந்தச் சட்டத்தால், நம் அப்போஸ்தலிக்க அதிகாரத்தின் பலனாக, எந்த ஓர் ஆலயத்திலும் பூசையைப் பாடுவதற்கு அல்லது வாசிப்பதற்கு, இனி, எந்த விதமான மனச்சான்றின் உறுத்தலோ, எந்த விதமான தண்டனை, தீர்ப்பு அல்லது தணிக்கை பற்றிய பயமோ இன்றி, இந்தப் பூசைப் புத்தகம் பரிபூரணமாக அனுசரிக்கப்படவும், சுதந்திரமாகவும், சட்டபூர்வமாகவும் அது பயன்படுத்தப்படவும் நாம் நித்திய அங்கீகாரம் வழங்குகிறோம். எந்த வகையான பதவியையும் வகிக்கக் கூடிய (சபைகளின்/மடங்களின்) சிரேஷ்டர்களோ, நிர்வாகிகளோ கேனன் குருக்களோ, பரிபாலனக் குருக்களோ, மற்ற மேற்றிராசன குருக்களோ, அல்லது துறவிகளோ நம்மால் கட்டளையாகத் தரப்பட்டுள்ள பூசையைத் தவிர வேறு எந்தப் பூசையையும் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அவ்வாறே யாரும் இந்தப் பூசைப் புத்தகத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்படவோ, வற்புறுத்தப்படவோ கூடாது என்றும், பரிசுத்த ஸ்தானத்தின் முந்திய கட்டளைகள் மற்றும் ஆணை மடல்கள் மற்றும் மாகாண மற்றும் ஆயர்கள் சார்ந்த சங்கங்களின் எந்த ஒரு பொது அல்லது தனிப்பட்ட ஆணைமடல்கள் அல்லது உத்தரவுகளையும், மேற்கூறப்பட்ட சபைகளின் அனுசரிப்பு மற்றும் நீண்ட காலமாக அனுசரிக்கப்பட்டு வரும் வழக்கத்தையும் மீறி, இந்தத் தற்போதைய ஆவணம் மாற்றப்படவோ திருத்தப்படவோ கூடாது என்றும், மாறாக, அது எப்போதும் செல்லத்தக்கதாக நிலைத்திருக்கும் என்றும், அது சட்டத்தின் முழு வலிமையை எப்போதும் கொண்டிருக்கும் என்றும் நாம் பிரகடனம் செய்து உத்தரவிடுகிறோம்.

ஆகையால், இதுவே நம் சித்தமாயிருக்கிறது. இந்த ஆணைப் பத்திரத்தையும், பூசைப் புத்தகத்தின் பதிப்பையும் நாம் வெளியிட்ட பிறகு, உரோமை க்யூரியாவின் குருக்கள், முப்பது நாட்களுக்குப் பிறகு, அதன்படியே பூசையைப் பாட அல்லது வாசிக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்று நாம் உத்தரவிடுகிறோம். ஆல்ப்ஸ் மலைகளுக்கு அப்பால் உள்ளவர்கள் ஆறு மாதங்களுக்குள்ளோ, அல்லது இந்தப் பூசைப் புத்தகம் விற்பனைக்கு வந்ததில் இருந்தோ இதைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே.  இந்தப் பூசைப் புத்தகம் உலகம் முழுவதும் அழிவற்றதாகப் பாதுகாக்கப்படுமாறும், எந்த விதமான குறைகள் அல்லது தப்பறைகளிலிருந்தும் காப்பாற்றப்படுமாறும், இந்த விதிகளை அனுசரிக்காதவர்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் ஆளுகைக்கும், உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைக்கும் உட்பட்டவர்களுமான அச்சிடுவோருக்குரிய தண்டனை என்னவெனில் அவர்களுடைய புத்தகங்கள் தங்கள் உரிமையை இழப்பதும், இந்தக் காரணத்திற்காகவே அப்போஸ்தலிக்கக் கருவூலத்திற்கு நூறு பொன் தூக்காத் நாணயங்களை அபராதமாகச் செலுத்துவதுமாக இருக்கும். மேலும், உலகின் மற்ற பகுதிகளில் இருப்பவர்களைப் பொறுத்த வரை, தன்னிச்சையான திருச்சபை விலக்கம் அவர்களுக்குரிய தண்டனையாகும். இது போன்ற வேறு தண்டனைகளும் நம் தீர்ப்பின்படி சுமத்தப்படலாம்.  நம் அங்கீகாரம் மற்றும் சம்மதமின்றி, அல்லது, அந்தந்த இடங்களில் நம்மால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலிக்க ஆணையர்களின் நேரடிச் சம்மதமின்றி, இந்த வகையான புத்தகங்களை அச்சிடவோ, வெளியிடவோ, விற்கவோ, ஏற்றுக்கொள்ளவோ  துணியவும் தகாத் துணிவு கொள்ளவும் கூடாது என்று நாம் இச்சட்டத்தால் ஆணையிடுகிறோம். குறிப்பிடப்பட்ட அச்சிடுபவர் மாதிரி பூசைப் புத்தகம் ஒன்றைப் பெற்று, பிரமாணிக்கத்தோடு அதனுடன் இசைந்திருக்கவும் பெரிய வகையான உரோமைப் புத்தகத்திலிருந்து (secundum magnum impressionem) எந்த வகையிலும் வேறுபடாதிருக்கவும் வேண்டும்.

இதன்படி, இந்தத் தற்போதைய உத்தரவைக் கிறீஸ்தவ உலகமெங்கும் அனுப்புவதும், அடுத்தடுத்து எல்லா இடங்களிலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் கடினமாக இருக்கும் என்பதால், வழக்கம்போல, இது அப்போஸ்தலர்களின் இளவரசரின் (அர்ச். இராயப்பர்) பேராலயத்தின் வாசல்களிலும், அப்போஸ்தலிக்க நிர்வாக அலுவலகத்திலும், காம்ப்போ ஃப்ளோரா தெருவிலும் ஒட்டப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் உத்தரவிடுகிறோம். மேலும், பொதுப் பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு, திருச்சபையின் அதிகாரி ஒருவரால் வெளியிடப்பட்டு அதிகாரபூர்வமானதாக்கப்படும் இதே திருச்சட்டத்தின் அச்சிடப்பட்ட பிரதிகளும், நம் கையெழுத்துப் பிரதி வெளியிடப்படுவது போல, அதே சந்தேகத்திற்கு இடமற்ற செல்லுபடித்தன்மையை எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நாட்டிலும் கொண்டிருக்கும். ஆகவே, நம்முடைய இந்த அனுமதியும்,, விதியும், உத்தரவும், கட்டளையும், சட்டமும், அங்கீகாரமும், அனுமதியும், பிரகடனமும், உயிலும், ஆணையும், தடையுமான இந்தப் பிரசுரத்தை மாற்ற யாரும் அனுமதிக்கப்படக் கூடாது.  ஆயினும், இத்தகைய செயலைச் செய்ய எவனாகிலும் தகாத் துணிவு கொள்வானாகில், அவன் சர்வ வல்லபக் கடவுளுடையவும், பரிசுத்த அப்போஸ்தலர்களாகிய இராயப்பர், சின்னப்பருடையவும் கடுங்கோபத்திற்கு உள்ளாவான் என்பதை அறிந்திருப்பானாக.

நம் பாப்புத்துவத்தின் ஐந்தாம் ஆண்டாகிய ஆண்டவரின் மனிதாவதாரத்தின் 1570ம் ஆண்டு, ஜூலை மாதம் 14ம் தேதி அர்ச். இராயப்பர் பேராலயத்தில் தரப்பட்டது.

--------------------------------------------------------------------------------------------------------------

The First

Promulgating the Tridentine Liturgy

Pope Pius V - 1570

APOSTOLIC CONSTITUTION

From the very first, upon Our elevation to the chief Apostleship, We gladly turned our mind and energies and directed all our thoughts to those matters which concerned the preservation of a pure liturgy, and We strove with God’s help, by every means in our power, to accomplish this purpose. For, besides other decrees of the sacred Council of Trent, there were stipulations for Us to revise and re-edit the sacred books: the Catechism, the Missal and the Breviary. With the Catechism published for the instruction of the faithful, by God’s help, and the Breviary thoroughly revised for the worthy praise of God, in order that the Missal and Breviary may be in perfect harmony, as fitting and proper – for its most becoming that there be in the Church only one appropriate manner of reciting the Psalms and only one rite for the celebration of Mass – We deemed it necessary to give our immediate attention to what still remained to be done, viz, the re-editing of the Missal as soon as possible.

Hence, We decided to entrust this work to learned men of our selection. They very carefully collated all their work with the ancient codices in Our Vatican Library and with reliable, preserved or emended codices from elsewhere. Besides this, these men consulted the works of ancient and approved authors concerning the same sacred rites; and thus they have restored the Missal itself to the original form and rite of the holy Fathers. When this work has been gone over numerous times and further emended, after serious study and reflection, We commanded that the finished product be printed and published as soon as possible, so that all might enjoy the fruits of this labor; and thus, priests would know which prayers to use and which rites and ceremonies they were required to observe from now on in the celebration of Masses.

Let all everywhere adopt and observe what has been handed down by the Holy Roman Church, the Mother and Teacher of the other churches, and let Masses not be sung or read according to any other formula than that of this Missal published by Us. This ordinance applies henceforth, now, and forever, throughout all the provinces of the Christian world, to all patriarchs, cathedral churches, collegiate and parish churches, be they secular or religious, both of men and of women – even of military orders – and of churches or chapels without a specific congregation in which conventual Masses are sung aloud in choir or read privately in accord with the rites and customs of the Roman Church. This Missal is to be used by all churches, even by those which in their authorization are made exempt, whether by Apostolic indult, custom, or privilege, or even if by oath or official confirmation of the Holy See, or have their rights and faculties guaranteed to them by any other manner whatsoever.

This new rite alone is to be used unless approval of the practice of saying Mass differently was given at the very time of the institution and confirmation of the church by Apostolic See at least 200 years ago, or unless there has prevailed a custom of a similar kind which has been continuously followed for a period of not less than 200 years, in which most cases We in no wise rescind their above-mentioned prerogative or custom. However, if this Missal, which we have seen fit to publish, be more agreeable to these latter, We grant them permission to celebrate Mass according to its rite, provided they have the consent of their bishop or prelate or of their whole Chapter, everything else to the contrary notwithstanding.

All other of the churches referred to above, however, are hereby denied the use of other missals, which are to be discontinued entirely and absolutely; whereas, by this present Constitution, which will be valid henceforth, now, and forever, We order and enjoin that nothing must be added to Our recently published Missal, nothing omitted from it, nor anything whatsoever be changed within it under the penalty of Our displeasure.

We specifically command each and every patriarch, administrator, and all other persons or whatever ecclesiastical dignity they may be, be they even cardinals of the Holy Roman Church, or possessed of any other rank or pre-eminence, and We order them in virtue of holy obedience to chant or to read the Mass according to the rite and manner and norm herewith laid down by Us and, hereafter, to discontinue and completely discard all other rubrics and rites of other missals, however ancient, which they have customarily followed; and they must not in celebrating Mass presume to introduce any ceremonies or recite any prayers other than those contained in this Missal.

Furthermore, by these presents [this law], in virtue of Our Apostolic authority, We grant and concede in perpetuity that, for the chanting or reading of the Mass in any church whatsoever, this Missal is hereafter to be followed absolutely, without any scruple of conscience or fear of incurring any penalty, judgment, or censure, and may freely and lawfully be used. Nor are superiors, administrators, canons, chaplains, and other secular priests, or religious, of whatever title designated, obliged to celebrate the Mass otherwise than as enjoined by Us. We likewise declare and ordain that no one whosoever is forced or coerced to alter this Missal, and that this present document cannot be revoked or modified, but remain always valid and retain its full force notwithstanding the previous constitutions and decrees of the Holy See, as well as any general or special constitutions or edicts of provincial or synodal councils, and notwithstanding the practice and custom of the aforesaid churches, established by long and immemorial prescription – except, however, if more than two hundred years’ standing.

It is Our will, therefore, and by the same authority, We decree that, after We publish this constitution and the edition of the Missal, the priests of the Roman Curia are, after thirty days, obliged to chant or read the Mass according to it; all others south of the Alps, after three months; and those beyond the Alps either within six months or whenever the Missal is available for sale. Wherefore, in order that the Missal be preserved incorrupt throughout the whole world and kept free of flaws and errors, the penalty for nonobservance for printers, whether mediately or immediately subject to Our dominion, and that of the Holy Roman Church, will be the forfeiting of their books and a fine of one hundred gold ducats, payable ipso facto to the Apostolic Treasury. Further, as for those located in other parts of the world, the penalty is excommunication latae sententiae, and such other penalties as may in Our judgment be imposed; and We decree by this law that they must not dare or presume either to print or to publish or to sell, or in any way to accept books of this nature without Our approval and consent, or without the express consent of the Apostolic Commissaries of those places, who will be appointed by Us. Said printer must receive a standard Missal and agree faithfully with it and in no wise vary from the Roman Missal of the large type (secundum magnum impressionem).

Accordingly, since it would be difficult for this present pronouncement to be sent to all parts of the Christian world and simultaneously come to light everywhere, We direct that it be, as usual, posted and published at the doors of the Basilica of the Prince of the Apostles, also at the Apostolic Chancery, and on the street at Campo Flora; furthermore, We direct that printed copies of this same edict signed by a notary public and made official by an ecclesiastical dignitary possess the same indubitable validity everywhere and in every nation, as if Our manuscript were shown there. Therefore, no one whosoever is permitted to alter this notice of Our permission, statute, ordinance, command, precept, grant, indult, declaration, will, decree, and prohibition. Would anyone, however, presume to commit such an act, he should know that he will incur the wrath of Almighty God and of the Blessed Apostles Peter and Paul.

Given at St. Peter’s in the year of the Lord’s Incarnation, 1570, on the 14th of July of the Fifth year of Our Pontificate.