14 பரிசுத்த உதவியாளர்கள் நவநாள்

மு. பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்துவின் பெயராலே. 

து. ஆமென்.

பரிசுத்த உதவியாளர்களிடம் மன்றாட்டு

அர்ச். அல்போன்ஸ் லிகோரியாரால் எழுதப்பட்ட ஆயத்த ஜெபம்

மு. பரலோகத்தின் மாபெரும் இளவரசர்களே, உங்கள் உலக உடைமைகளையும், செல்வத்தையும், உயர் பதவிகளையும், உயிரையுமே கூட கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தவர்களும், நித்தியப் பேரின்பத்தையும், மகிமையையும் பாதுகாப்பாக அனுபவித்தபடி, பரலோகத்தில் இப்போது முடிசூட்டப் பட்டிருக்கிறவர்களுமாகிய பரிசுத்த உதவியாளர்களே.

து. இந்தக் கண்ணீர்க் கணவாயில், ஏழைப் பாவியாகிய என்மீது தயவாயிருந்து, நீங்கள் யாருக்காக சகலத்தையும் கைவிட்டு விட்டீர்களோ, யார் உங்களைத் தம்முடைய ஊழியர்களாக நேசிக்கிறாரோ, அந்த சர்வேசுரனிடமிருந்து, வாழ்வின் சகல துன்ப சோதனைகளையும் பொறுமையாகத் தாங்கிக்கொள்ளவும், சகல சோதனைகளையும் மேற்கொள்ளவும், இறுதி வரை தேவ ஊழியத்தில் நிலைத்திருக்கவும் தேவையான பலத்தை எனக்குப் பெற்றுத் தரும்படியாக உங்களை மன்றாடுகிறேன். இவ்வாறு ஒரு நாள், யாருடைய தேவ காட்சியை நீங்கள் அனுபவித்துத் திளைக்கிறீர்களோ, யாரை என்றென்றும் துதித்து மகிமைப்படுத்துகிறீர்களோ அந்த உன்னத ஆண்டவரைப் போற்றி மகிமைப்படுத்தும்படியாக, உங்கள் தோழமைக்குள் நானும் ஏற்றுக்கொள்ளப்படுவேனாக. ஆமென்;.

நவநாள் ஜெபம்

மு. ஓ மகிமையும் வல்லமையுள்ளவர்களுமான பரிசுத்த உதவியாளர்களே, நீங்கள் உலகிலிருந்தபோது, தாழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் கடவுளுக்கு ஊழியம் செய்தீர்கள். இப்போது பரலோகத்தில் அவருடைய தேவ காட்சியை அனுபவித்து மகிழ்கிறீர்கள்.

து. ஏனெனில் நீங்கள் மரணம் வரையிலும் நன்மையில் நிலைத்திருந்தீர்கள், அதனால் நித்திய ஜீவியத்தின் மகுடத்தைச் சம்பாதித்துக்கொண்டீர்கள். இந்;தக் கண்ணீர்க் கணவாயில் எங்களைச் சூழ்ந்துள்;ள ஆபத்துக்களை நினைவுகூர்ந்து, எங்கள் தேவைகளிலும், நிர்ப்பாக்கியங்களிலும் எங்களுக்காக மன்றாடுங்கள்.

(இங்கே சற்று நிறுத்தி உங்கள் தேவைகளைச் சொல்லவும்.)

மு.  ஓ பதினான்கு பரிசுத்த உதவியாளர்களே, கடவுளின் நண்பர்களைத் தேர்ந்துகொள்ளுங்கள்,

து. வல்லமையோடு பரிந்துபேசுபவர்களாகிய உங்களைப் போற்றித் துதிக்கிறேன், இந்த நவநாள் வழியாக நான் தேடுகிற நன்மைக்காக, என் தேவைகளில் நம்பிக்கையோடு உங்களிடம் வருகிறேன். 

மு. என் அநேக பாவங்களால் தூண்டப்பட்ட கடவுளின் நீதியுள்ள தேவ கோபத்தை சாந்தப்படுத்தும்படி உங்கள் பரிந்துரையால் எனக்கு உதவுங்கள்.

து. என் வாழ்க்கையைத் திருத்துவதிலும், தவம் செய்வதிலும் எனக்கு ஒத்தாசை செய்யுங்கள்.

மு. என் இவ்வுலக வாழ்வை முடித்தவுடன், தம்முடைய அர்ச்சியசிஷ்டவர்களில் அதிசயத்திற்குரியவராகிய சர்வேசுரனைப் பரலோகத்தில் என்றென்றும் போற்றித் துதிக்குமாறு, அங்கே உங்களோடு நானும் வந்து சேர்ந்துகொள்ளும்படியாக,

து. மனமொத்த இருதயத்தோடு அவருக்கு ஊழியம் செய்யவும், அவருடைய திருச்சித்தத்திற்கு அமைந்திருக்கவும், நிர்ப்பாக்கியத்தில் பொறுமையாயிருக்கவும், இறுதி வரை நிலைத்திருக்கவும் எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தை அடைந்து தந்தருளுங்கள். ஆமென்.

பதினான்கு பரிசுத்த உதவியாளர்களின் பிரார்த்தனை
(தனி உபயோகத்திற்கு மட்டும்)

மு. சுவாமி கிருபையாயிரும்.

து. கிறீஸ்துவே கிருபையாயிரும்.

மு. சுவாமி கிருபையாயிரும். கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

து. கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

மு. பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா,

து. எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

மு. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,

து. எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

மு. இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா,

து. எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

மு. பரிசுத்த தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,

து. எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளின் இராக்கினியாகிய பரிசுத்த மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல தேவைகளிலும் உதவி செய்பவராகிய அர்ச். சூசையப்பரே,

பதினான்கு பரிசுத்த உதவியாளர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கிறீஸ்துநாதருடைய வீரமுள்ள வேதசாட்சியாகிய அர்ச். ஜார்ஜியாரே,

பக்திப் பற்றுதலுள்ள மேற்றிராணியாரும், ஏழைகளின் உபகாரியுமான அர்ச். ப்ளேய்ஸே,

ஒடுக்கப்பட்டவர்களின் வல்லமையுள்ள பாதுகாவலராகிய அர்ச். எராஸ்முஸே,

சிநேகத்தின் அற்புத மாதிரிகையாகிய அர்ச். பாந்தலியோனே,

கற்பின் விசேஷ பாதுகாவலராகிய அர்ச். வீத்துஸே,

ஆபத்துக்களில் வல்லமையோடு பரிந்துபேசுபவராகிய அர்ச். கிறீஸ்டோபரே,

விசுவாசத்தினுடையவும், நம்பிக்கையினுடையவும் பிரகாசமுள்ள கண்ணாடியான அர்ச். டெனிஸே,

நரகத்தின் பயங்கரமாகிய அர்ச். சீரியாக்குஸே,

மரணத்தில் உதவியுள்ள பரிந்துரையாளராகிய அர்ச். ஆக்காஷியஸே,

நிர்ப்பாக்கியத்தில் பொறுமையின் மாதிரிகையாகிய அர்ச். யூஸ்டாஷியஸே,

உலகத்தைப் புறக்கணித்;தவராகிய அர்ச். ஜைல்ஸே,

விசுவாசத்தின் வீரநாயகியாகிய அர்ச். மார்கரீத்தம்மாளே,

விசுவாசத்தையும், பரிசுத்ததனத்தையும் வெற்றியோடு பாதுகாத்தவளாகிய அர்ச். கத்தரீனம்மாளே,

மரிக்கிறவர்களின் வல்லமையுள்ள பாதுகாவலியாகிய அர்ச். பார்பரம்மாளே,

சகல பரிசுத்த உதவியாளர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

சர்வேசுரனுடைய சகல அர்ச்சியசிஷ்டவர்களே,

விசுவாசத்திற்கெதிரான சோதனைகளில்,

நிர்ப்பாக்கியங்களிலும், துன்ப சோதனைகளிலும்,

கவலையிலும், தேவையிலும்,

ஒவ்வொரு போராட்டத்திலும்,

ஒவ்வொரு சோதனையிலும்,

சுகவீனத்தில்,

எல்லாத் தேவைகளிலும்,

பயத்திலும் பயங்கரத்திலும்,

இரட்சணிய ஆபத்துக்களில்,

உலக மதிப்பின் ஆபத்துக்களில்,

செல்வத்தின் ஆபத்துக்களில், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நெருப்பினுடையவும், தண்ணீருடையவும் ஆபத்துக்களில்,

மு. ஆண்டவரே, தயவாயிருந்து எங்களைக் காத்தருளும்.

து. ஆண்டவரே, தயவாயிருந்து எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

எல்லாப் பாவத்திலிருந்தும், எங்களை விடுவித்தருளும் ஆண்டவரே.

தேவரீருடைய கடுங்கோபத்திலிருந்து,

நிலநடுக்கத்த்தின் கசையிலிருந்து,

கொள்ளை நோயிலிருந்தும், பஞ்சத்திலிருந்தும், போரிலிருந்தும்,

மின்னலிலிருந்தும், புயல்களிலிருந்தும்,

திருச்சபையின் எதிரிகளிடமிருந்து,

தப்பறையிலிருந்தும், தேவத்துரோகத்திலிருந்தும்,

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களிடமிருந்து,

சகல சோதனைகளிலிருந்தும், தீமையிலிருந்தும்,

சாத்தானிடமிருந்தும், கெடுமதியுள்ள அவனுடைய தூதர்களிடமிருந்தும்,

எதிர்பாராத, ஆயத்தமில்லாத மரணத்திலிருந்து,

நித்திய அழிவிலிருந்து,

தேவரீருடைய பரிசுத்த மனிதாவதாரப் பரம இரகசியத்தின் வழியாக,

தேவரீருடைய பிறப்பு மற்றும் ஜீவியத்தின் வழியாக,

தேவரீருடைய சிலுவை மற்றும் திருப்பாடுகளின் வழியாக,

தேவரீருடைய திருமரணம் மற்றும் அடக்கத்தின் வழியாக,

தேவரீருடைய மகா பரிசுத்த திருமாதாவின் பேறுபலன்களின் வழியாக,

பதினான்கு பரிசுத்த உதவியாளர்களின் பேறுபலன்களின் வழியாக,

தீர்வையின் நாளில், ஆண்டவரே, என்னை விடுவித்தருளும்.

பாவியாகிய நாங்கள், உம்மை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தேவரீர் எங்களை விடுவிக்கும்படியாக, உம்மை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தேவரீர் எங்களை மன்னிக்கும்படியாக,

மெய்யான தவத்திற்கு தேவரீர் எங்களை மனந்திருப்பும்படியாக,

நிலத்தின் பலன்களைத் தந்து தேவரீர் எங்களைக் காத்தருளும்படியாக,

தேவரீர் உம்முடைய பரிசுத்த திருச்சபையைப் பாதுகாத்துப் பரப்பும்படியாக,

தேசங்களிடையே சமாதானத்தையும் இணக்கத்தையும் தேவரீர் பாதுகாக்கும்படியாக,

பிரமாணிக்கத்தோடு மரித்தவர்களின் ஆத்துமங்களுக்கு நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும்படியாக,

பரிசுத்த உதவியாளர்களின் பரிந்துரையின் வழியாக தேவரீர் எங்கள் உதவிக்கு வரும்படியாக,

மு. அர்ச். ஜார்ஜியாரின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் விசுவாசத்தில் எங்களைப் பாதுகாத்தருளும்.

அர்ச். பிளேஸியாரின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் நம்பிக்கையில் எங்களைப் பாதுகாத்தருளும்.

மு. அர்ச். எராஸ்மஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் உம்முடைய பரிசுத்த சிநேகத்தில் எங்களைப் பாதுகாத்தருளும்.

மு. அர்ச். பாந்தலியோனின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்களுக்குப் பிறர்சிநேகத்தைத் தந்தருளும்.

மு. அர்ச். வீத்துஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்கள் ஆத்துமத்தின் மதிப்பை எங்களுக்குக் கற்பித்தருளும்.

மு. அர்ச். கிறீஸ்டோபரின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்களைப் பாவத்திலிருந்து பாதுகாத்தருளும்.

மு. அர்ச். டெனிஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்களுக்கு மனச்சான்றின் அமரிக்கையைத் தந்தருளும்.

மு. அர்ச். சீரியாக்குஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீருடைய திருச்சித்தத்திற்கு அமைந்து நடக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.

மு. அர்ச். யூஸ்டாஷியுஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்கள் நிர்ப்பாக்கியத்த்தில் பொறுமையைத் தந்தருளும்.

மு. அர்ச். ஆக்காஷியுஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்களுக்கு மகிழ்ச்சியான மரணத்தைத் தந்தருளும்.

மு. அர்ச். ஜைல்ஸின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்களுக்குப் பிறர்சிநேகத்தைத் தந்தருளும்.

மு. அர்ச். மார்கரீத்தம்மாளின்; பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் நரகத்திலிருந்து எங்களைக் காத்தருளும்.

மு. அர்ச். கத்தரீனம்மாளின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் எங்கள் உத்தரிப்பின் காலத்தைக் குறைத்தருளும்.

மு. அர்ச். பார்பரம்மாளின் பரிந்துரையின் வழியாக,

து. தேவரீர் பரலோகத்தில் எங்களை வரவேற்றருளும்.

மு. சகல பரிசுத்த உதவியாளர்களின் பரிந்துரையின் வழியாக,

து. நாங்கள் எங்கள் ஜெபத்தில் மன்றாடிக் கேட்பதை எங்களுக்குத் தந்தருளும்.

மு. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே,

து. எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

மு. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே,

து. எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

மு. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே,

து. எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு. சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,

து. பதினான்கு பரிசுத்த உதவியாளர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

மு. ஜெபிப்போமாக.

சர்வ வல்லபரான சர்வேசுரா, தேவரீர் உம்முடைய அர்ச்சியசிஷ்டவர்களாகிய ஜார்ஜியார், பிளேஸியார், எராஸ்முஸ், பாந்தலியோன், வீத்துஸ், கிறீஸ்டோபர், டெனிஸ், சீரியாக்குஸ், யூஸ்டாஷியுஸ், ஆக்காஷியுஸ், ஜைல்ஸ், மர்கரீத்தம்மாள், கத்தரீனம்மாள் மற்றும் பார்பரம்மாள் ஆகியோரின்மீது உம்முடைய அசாதாரணமான வரப்பிரசாதங்களையும், கொடைகளையும் பொழிந்தருளினீரே. அவர்களுடைய பரிந்து பேசுதலை மன்றாடிக் கேட்கும் சகலருடைய விண்ணப்பங்களையும் தேவரீர் தயவாய்க் கேட்டருளும் படியாக உம்மை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக.

து.  ஆமென்.

மு. விசுவாசத்தை அறிக்கையிடுவதில் பதினான்கு பரிசுத்த உதவியாளர்களை அற்புதமான விதத்தில் திடப்படுத்தியவரான சர்வேசுரா, அந்த விசுவாசத்திற்கு எதிரான சகல சோதனைகளையும் மேற்கொள்வதில் அவர்களுடைய திடத்தை நாங்கள் கண்டுபாவிக்க எங்களுக்கு வரமருளும்படியாகவும், நாங்கள் இருதய பரிசுத்த தனத்திலும், சரீரக் கற்பிலும், உமக்கு ஊழியம் செய்யும்படியாக, சகல ஆத்தும சரீர ஆபத்துக்களிலும் அவர்களுடைய பரிந்துரையின் வழியாக எங்களைப் பாதுகாத்தருளும்படியாகவும் உம்மை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக. 

து. ஆமென்.

மு. பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமை உண்டாகக்கடவது.

து. ஆதியில் இருந்ததுபோல இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

மு. பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் பெயராலே, 

து. ஆமென்.