நவவிலாச சம்மனசுகளுக்காக ஜெபம்

1-வது. பக்திச் சுவாலகருக்கு.

அர்ச்சியசிஷ்ட பக்திச் சுவாலகரே, நீங்கள் சர்வேசுரனுடைய அளவில்லாத நன்மைத்தனத் தைப் பார்த்து நேச அக்கினியால் எரிந்திருக்கிறபடி யால், அந்த அக்கினியிலே ஒரு பொறி என் இருதயத்திலே விழுந்து அதிலுள்ள சகல நேச பாசம் எரிந்து தேவ பக்திச் சுடராகும்படிச் செய்ய உங்களை மன்றாடுகிறேன்.  ஆமென்.

2-வது. ஞானாதிக்கருக்கு.

அர்ச்சியசிஷ்ட ஞானாதிக்கரே, நீங்கள் சர்வே சுரனுடைய அளவில்லாத வல்லமையையும், ஆச்சரியமான உன்னத இரகசியங்களையும் பிரத்தியட்சமாய்ப் பார்த்து ஞான சமுத்திரமாய்த் தெளிந் திருக்கிறதினால், உங்களுடைய ஒரு கதிர் என் மனதிலே விழுந்து சகல அஞ்ஞான இருளை நீக்கிச் சர்வேசுரன் பேரிலேயும், பரலோக விஷயங்களி னாலேயும் மனதைத் தெளிவிக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

3-வது. பத்திராசனருக்கு.

அர்ச். பத்திராசனரே, நீங்கள் சர்வேசுர னுடைய அளவில்லாத இராஜ நீதி தவறாமல் அதனால் வருகிற சகல துக்கத்தையும் சுகத்தையும் நல்ல மனதோடு கையேற்று நடக்கச் செய்யும் படிக்கு உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

4-வது. நாதகிருத்தியருக்கு.

அர்ச். நாதகிருத்தியரே, நீங்கள் சர்வேசுர னுடைய காரியங்களை அவர் அருளால் செய்கிறீர் களே.  அப்படிப்பட்ட வல்லமையால் என்னைத் திருத்தி என் சரீர இச்சையின்படியே நான் நடவாமல் தேவசித்தத்தை அறிந்து நடக்க என் மனதைத் தெளிவிக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

5-வது. சத்துவகர்களுக்கு.

அர்ச். சத்துவகரே, சுபாவ கிரமமாய்ச் செய்ய இயலாத காரியங்களை நீங்கள் தேவ பலத்தால் அற்புதமாய்ச் செய்கிறபடியால், என்னுடைய சரீர  துர்ப்பலத்தினால் நான் செய்யமுடியாத தர்ம வீரியங்களைத் தேவப்பிரசாத பலத்தால் செய்யும் படி என் மனதைத் திடப்படுத்த உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

6-வது. பலவத்தருக்கு.

அர்ச்.பலவத்தரே, நீங்கள் தேவகாரியங்களுக்கு பசாசு செய்கிற எதிரிடைகளைத் தள்ளுகிறதி னால், நான் செய்கிற தர்மக் கிரியைகளுக்கு வரும் விக்கினங்களை அகற்றும்படிக்கு உங்களை மன்றாடுகிறேன்.  ஆமென்.

7-வது. பிராதமிகருக்கு.

அர்ச். பிராதமிகரே, நீங்கள் இராஜ பிரதானிகளையும், அவர்களுடைய இராச்சியங்களையும் தற்காத்து நடத்தி வருகிறதினால், நான் வசிக்கிற நாட்டிலும், கிராமத்திலும் யாதொரு சத்துருவின் விக்கினம் வராமல் தற்காத்து, அரசரும், இராச் சியத்தாரும் தேவசித்தம் தவறாமல் நடக்கச் செய்யும்படி உங்களை மன்றாடுகிறேன்.  ஆமென்.

8-வது. அதிதூதர்களுக்கு.

அர்ச்சியசிஷ்ட அதிதூதர்களே, நீங்கள் பிரதானமான விசேஷங்களை உலகத்திலே அறிவிக்கத்தக்கதாகச் சர்வேசுரனால் அனுப்பப்படுகிறதினால், என் ஆத்தும ஈடேற்றத்திற்கு வேண்டிய காரியங்களை எனக்கு அறிவித்து அதற்கான கிரியைகளை நான் செய்து நாளைக் கழிக்க நல்வழியைக் காண்பிக்கும்படிக்கு உங்களை மன்றாடுகிறேன். ஆமென்.

9-வது. தூதர்களுக்கு.

அர்ச்சியசிஷ்ட தூதர்களே, நீங்கள் மனுஷருக்குக் காவலாளியாய்ச் சர்வேசுரனுடைய எந்தெந்தப் பணிவிடைக்கும் அனுப்பப்படுகிற தினால், எந்த வேளையிலேயும் என்னைக் கிருபா கடாட்சமாய்ப் பார்த்து, நல்ல வழியைக் காண்பித்து, என்னுடைய வேண்டுதலையும், கிரியைகளையும் சர்வேசுரனுக்கு ஒப்படைத்து, உங்களுடைய சித்தத்தின்படியே என்னை நடத்த உங்களை மன்றாடுகிறேன். 

ஆமென்.