சதா சகாய மாதா நவநாள் ஜெபம்

சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும்.  இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும்.  பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம்  உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன்.  நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன்.  ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும்.  என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.

ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.  பசாசு என்னுடன் போர்   புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும்,  “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும். 

ஆமென். 

(அருள் நிறை மந்திரம்  9 முறை)

பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும்.  மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும்.  கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும்.  உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும்.

ஓ மாதாவே!  நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர்.

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே.  அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா. 

ஆமென்.

பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி.