ஜெர்துருத்தம்மாளின் ஜெபமாலை.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்

விசுவாச மந்திரம்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறேன்.
ஆமென்.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்லுகிறது.
பரலோகத்தில் இருக்கிற...

பரிசுத்த கன்னியாஸ்த்ரீயாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிற வகையாவது:

பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
அருள் நிறைந்த...

சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ நம்பிக்கை என்கிற புண்ணியம் உண்டாகி வளரும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
அருள் நிறைந்த...

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ சிநேகம் என்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
அருள்  நிறைந்த...

பிதாவுக்கும் சுதனுக்கும்...
ஓ என் இயேசுவே...

பதக்கத்திலும், பெரிய மணிகளிலும் கர்த்தர் கற்பித்த செபத்தை சொல்லவும்.

ஒவ்வொரு சிறிய பத்து மணிகளிலும்:

"நித்திய பிதாவே உமது திருமகனின் விலையேறப் பெற்ற இரத்தத்தோடு, இன்று உலகெங்கிலும் நிறைவேற்றப்படும் சகல திருப்பலிகளை ஒன்றித்து, எங்கள் இல்லத்திலும், குடும்பத்திலும் திருச்சபையிலும் உலகெங்கிலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் சகல ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென்."

(ஒவ்வொரு முறை செபிக்கும் போதும் 1000 உத்தரிக்கிற ஆத்துமாக்களின் கடன் தீர்கிறது).

ஒவ்வொரு பத்து மணி முடிவிலும்:

இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே , பாவிகளின் இருதயங்களை தேவ பிதாவின் சத்தியத்திற்கும் ஒளிக்கும் திறந்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே பாவிகள் மனந்திரும்ப மன்றாடும். ஆமென்.

பிதாவுக்கும் சுதனுக்கும்...
ஓ என் இயேசுவே...

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.

ஆமென்.