✠ அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் ஆற்றிய பிரசங்கம்

உங்கள் மரணத்தின் காலமும், நேரமும் உங்களுக்குத் தெரியாது; இயேசு கிறிஸ்து இந்தப் புகழ் பெற்ற பிரசங்கத்தை உடனே வாசித்து உங்கள் ஆத்துமத்தை இரட்சிக்க கேட்டுக் கொள்கிறார். “இதைப் படித்தால்தானே புரியும். சொன்னால்தானே தெரியும். யாராவது விளக்கிக் காட்டாவிட்டால் எவ்வாறு நம்மால் தெரிந்துகொள்ள முடியும்? (திருத்தூதர் பணி 8:31)

வெளியிடுபவர்: டாக்டர் A. ராஜா பிஞ்ஞேயிர


என்னுரை

அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் பற்றிய அறிமுகம்

இரட்சிக்கப்படுவோரின் மிகச் சிறிய எண்ணிக்கை

திருச்சபை தந்தையரின் போதனை

நரகத் தீர்ப்படையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட இரட்சிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதா?

பரிசுத்த வேதாகம சாட்சியங்கள்

பல்வேறு வாழ்வு நிலைகளில் இரட்சணியம்

பரிதாபத்திற்குரிய பாவசங்கீர்த்தன குருக்களே! 

கடவுளின் நன்மைத்தனம்

முடிவுரை



புனித போர்ட் மவுரீஸின் லியோனார்டின் இந்த அதியற்புதமான அவசியமான பிரசங்கம் எண்ணற்ற ஆன்மாக்களை இதுவரை இரட்சித்துள்ளது. இனியும் பலரை இரட்சிக்கும். புனித லியோனார்டின் பரலோகத் தன்மையுள்ள நாவன்மையைப் பற்றி கட்டளை செபத்தின் ஆறாம் பாடத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இதோ:

அவர் பேசுவதைக் கேட்பதன் காரணமாகவும், அவருடைய பிரசங்கத்தின் அதிசயத்திற்குரிய பலனுள்ள தன்மையின் காரணமாகவும், போதகரின் தகிக்கிற ஆத்தும தாகத்தின் காரணமாகவும் இரும்பாலும் வெண்கலத்தாலும் ஆன இருதயங்களும்கூட மனம் திரும்பி தவம் செய்யும்படி பலமான முறையில் தூண்டப்பட்டன.

வழிபாட்டு செபத்தில் நாம் ஆண்டவரிடம் இறுகிப்போன பாவிகளின் இருதயங்களை போதகப் பணிகளால் வளைக்க வல்லமை தாரும் என்று செபிக்கிறோம்.

புனித லியோனார்டின் இந்தப் பிரசங்கம், இந்த வேத போதகரை வெகுவாக நேசித்த பாப்பரசர் 14-ம் ஆசீர்வாதப்பரின் ஆட்சிக் காலத்தின்போது போதிக்கப்பட்டது.

புனித அந்தோணி மரிய கிளாரட்

புள்ளி விவரங்களின்படி, சராசரியாக 80,000 பேர் ஒரு நாளில் மரிக்கிறார்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் சாவான பாவத்தோடு இறந்து தண்டனைத் தீர்வை அடைகிறார்கள். உங்கள் வாழ்வு எப்படியோ, அப்படியே முடிவும் இருக்கும் 

புனித ஜான் மரிய வியான்னி

நாம் இரட்சிக்கப்படுவோமா? மோட்சம் போவோமா? இந்நாட்களில் இவ்வளவு அதிகமான ஆன்மாக்கள் நரகம் செல்வது கண்டு நான் நடுங்குகிறேன். பாருங்கள், குளிர்காலம் நெருங்கும்போது மரங்களிலிருந்து விழும் இலைகள்போல் அவர்கள் நரகத்தில் விழுகிறார்கள். 

புனித திருத்தந்தை பெரிய கிரகோரியார்

களத்து மேட்டிலிருந்து களஞ்சியத்திற்குக் கொண்டு செல்லப்படும் தானிய மணிகளின் அளவைவிட, நெருப்பில் சுட்டெரிக்கப்படும் வைக்கோல் போர்களின் அளவு மிகப் பெரியது. 

புனித ஆன்ஸ்லெம்

உன் இரட்சணியத்தைப் பற்றி நீ முழு நிச்சயத்தோடு இருக்க விரும்பினால், மிக மிக மிகச்சிலரில் ஒருவனாக இருக்கப் பாடுபடு. மனிதர்களில் பெரும்பான்மையினரின் பின் செல்லாதே. மாறாக, உலகத்தைத் துறந்தவர்களும், நித்தியப் பேரின்ப பாக்கியத்தை அடைந்து கொள்ளும்படி இரவும் பகலும் ஓயாது உழைத்து வருபவர்களுமான பரிசுத்தர்களைப் பின் செல்.

புனித லூயி மரிய மான்ட்போர்ட்

தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது. எவ்வளவு சிறியது என்றால், இது எவ்வளவு சிறியது என்பதை நாம் அறிந்து கொள்வோமானால், கடும் துக்கத்தினால் நாம் மயங்கி விழுந்து விடுவோம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு சிறியது என்றால், கடவுள் அவர்களை ஒன்று கூட்டுவார் என்றால், முன்பு தாம் செய்தது போல இறைவாக்கினர்களின் வாய்மொழியாக "ஒருவர்பின் ஒருவரும், அந்த அரசிலிருந்து ஒருவருமாக நீங்கள் ஒன்று கூடுங்கள்" என்று அவர்களை நோக்கி கூக்குரலிடுகிறார். 

புனித பெனடின்ட் ஜோசப் லாப்ரே

எளிதாகக் கட்டிக் கொள்ளப்படக்கூடிய ஒரேயொரு சாவான பாவத்தின் காரணமாக, நித்தியத்திற்கும் நீடிக்கப் போகிற நரகத்தின் பயங்கரங்களை தியானி. தெரிந்து கொள்ளப்பட்ட மிகச் சிலரில் ஒருவனாக இருக்க கடுமையாகப் பாடுபடு. நரகத்தின் நித்திய தீச்சுவாலைகளைப் பற்றியும், இரட்சிக்கப்படுபவர்கள் எவ்வளவு மிகச் சிலராக இருக்கிறார்கள் என்பதையும் தியானி. 

புனித மரிய அல்போன்ஸ் லிகோரியார்

மோட்சத்தில் ஒரு பக்தியுள்ள மோட்சவாசி தமக்கு ஊழியம் செய்வது போலவே குருக்களும் தமக்கு ஊழியம் செய்ய வேண்டுமென கடவுள் விரும்புகிறார். இல்லாவிடில் அவர் தமது வரப்பிரசாதங்களை அவர்களிடமிருந்து விலக்கிக் கொண்டு, ஞான வெதுவெதுப்பில் அவர்களை உறங்க விட்டு விடுவார். அதன்பின் பாவத்திலும், இறுதியாக நரகத்திலும் அவர்கள் விழ அவர் அனுமதித்து விடுவார்.

புனித வெரோணிக்கா ஜூலியானி

பரிசுத்த கன்னிகையான தேவதாய் நரகத்திலுள்ள மற்ற அனைத்தையும்விட அதிக வேதனையான ஏழு இடங்களையும், அவை யார் யாருக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், இதை அனைவருக்கும் நான் விளக்கிக் கூற வேண்டுமென்றும் என்னிடம் சொன்னார்.

முதலாவது இடம் சாத்தான்களின் தலைவன் லூசிபர் கட்டுண்டிருக்கிற இடமாகும்.

இரண்டாவது இடமானது பரிசுத்த திருச்சபையின் ஆயர் நிலையினரும், குரு நிலையினரும் இருக்கும் இடமாகும். ஏனெனில் மேன்மையிலும் பதவியிலும் அவர்கள் உயர்த்தப்பட்டிருந்தாலும், அவர்கள் விசுவாசத்தை மிகத் தவறான முறையில் பயன்படுத்தினார்கள். பல்வேறு மிகப்பெரும் பாவங்களைக் கொண்டு என் திருமகனாகிய இயேசுகிறிஸ்துவின் திரு இரத்தத்தை காலில் போட்டு மிதித்தார்கள்.

மூன்றாவது இடத்தில் ஆண், பெண் துறவிகளின் ஆன்மாக்கள் இருக்கிறார்கள்

நான்காம் இடத்தில் தங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்தவர்களின் ஆன்மாக்களைத் தவறான வழி நடத்தியதற்காக பாவசங்கீர்த்தன குருக்கள் அனைவரும் இருக்கிறார்கள்

ஐந்தாவது இடம் நீதிபதிகள் மற்றும் நீதியின் ஆளுநர்களின் ஆன்மாக்கள் இருக்கிற இடமாகும்

ஆறாவது இடம் மடத்துத் தாயார்கள், மடத்து தந்தையர்கள் உட்பட எல்லா துறவறத்தாருக்கும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது இடத்தில் தங்கள் சொந்த இஷ்டப்படி வாழ விரும்பியவர்களும், எல்லா வகையான பாவங்களையும் குறிப்பாக சரீரப் பாவங்களையும் கட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்

நெருப்பில் விழுந்து அமிழ்ந்து கொண்டிருக்கிற அநேக ஆன்மாக்களில் ஒவ்வொரு ஆன்மாவும் தனது வாதைக்குரிய சொந்த இடத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஆன்மாக்கள் பல்வேறு இனங்களையும், எல்லா வகையான அந்தஸ்துகளையும் அதாவது, கிறிஸ்தவர்கள், அவிசுவாசிகள், துறவிகள், குருக்கள் ஆகிய அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்கள். கடைசியில் சொல்லப்பட்டவர்கள் லூசிபருக்கு அதிக நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அதிகமாகத் துன்புறுகிறார்கள் என்றால் மனித மனத்தால் அதைப் புரிந்துகொள்ள இயலாது. இந்த ஆன்மாக்கள் வந்து சேரும்போது, நரகம் முழுவதும் அதைக் கொண்டாடுகிறது. ஒரு கண நேரத்தில் அவர்கள் கடவுளை நோகச் செய்ததற்காக சபிக்கப்பட்டவர்களின் எல்லா வாதைகளையும் அனுபவிக்கிறார்கள்.