✠ திருச்சபைக் கட்டளைகள்

ஆசிரியர்: வில்லியம் ஜே. ரேமர்ஸ், 

Mr. Alfredo Salazar, Friends of the Cross, U.S.A.


ஆறு திருச்சபைக் கட்டளைகள்

ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.

வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.

சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.

விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவுமுறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது.  


கத்தோலிக்கத் திருச்சபை ஒரு பரிசுத்த சமுதாயமாக இருப்பதால், தனது உறுப்பினர்களது நித்திய நலன்களைப் பாதுகாக்கும்படி, அவர்களுடைய ஆன்ம நலனுக்காக சட்டங்கள் இயற்றுகிற உரிமையைக் கொண்டுள்ளது.  மேலும் அந்தத் திருச்சபையின் தெய்வீக ஸ்தாபகர், உலகமெங்கும் சென்று சகல ஜாதியாருக்கும் பிரசங்கிக்கும் படி கட்டளையிட்டார்.  மேலும் அவர், “பூலோகத்தில் நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ, அவை பரலோகத்திலும் கட்டப் பட்டிருக்கும்.  பூலோகத்தில் எவைகளைக் கட்டவிழ்ப்‡ பீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும்” (மத். 18:18) என்று அவர்களிடம் கூறி, சட்டங்கள் இயற்றுவதற்கான அதிகாரத்தை அவர்‡ களுக்கு வழங்கினார்.  எனவே, தேவ வழிபாடு, ஆத்துமங்களின் இரட்சணியம் ஆகிய காரியங்களோடு தொடர்புள்ள எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த அதிகாரம் கொண்டிருக்கிறது.  அது இஸ்பிரீத்து சாந்துவினால் வழிநடத்தப் படுகிறது. அவரே அதை ஆண்டு நடத்துகிறார்.  “கிறீஸ்துநாதர் திருச்சபையின் சிரசாக இருப்பது போல, இஸ்பிரீத்து சாந்துவானவர் அதன் ஆத்துமமாக இருக்கிறார்” என்று பாப்பரசர் பதின்மூன்றாம் சிங்கராயர் கூறுகிறார்.

சர்வேசுரனுடைய பத்துக் கற்பனைகளைக் கிறீஸ்தவர்கள் எவ்வாறு அனுசரிக்க வேண்டும் என்பதை மேலும் தெளிவாக விளக்குவதே திருச்சபைக் கட்டளைகளின் நோக்கமாயிருக்கிறது.  நித்திய இரட்சணியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பத்துக் கட்டளைகள் எவ்வாறு, எப்போது அனுசரிக்கப்பட வேண்டும் என்பதைத் திருச்சபையே தீர்மானிக்கிறது என்ற அளவில், தேவ கற்பனைகளுக்கும், திருச்சபைக் கட்டளைகளுக்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பு இருக்கிறது.  மேலும், இவை இரண்டிற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடும் உள்ளது: தேவ கட்டளைகள் நல்லொழுக்கக் கடமைகளையும் விசுவாசிகள் மீது சுமத்துவதால், அவை ஒருபோதும் மாற்றியமைக்கப் பட முடியாதவையாக இருக்கின்றன.  இவ்வாறு, உதாரணமாக ஒரு கத்தோலிக்கன் யாராவது ஒருவனைக் கொள்ளையிடுகிறான், அல்லது கொலை செய்கிறான் என்றால், அவன் தன்னிலேயே பாவமாக இருக்கிற ஒரு காரியத்தைச் செய்கிறான்.  ஆனால் ஒரு சுத்தபோசன நாளில் அவன் மாமிசம் உண்டாலோ, அல்லது ஒரு நியாயமான காரணம் இன்றி ஞாயிற்றுக் கிழமை பூசை காணாமல் இருந்தாலோ, அது தன்னிலேயே ஒரு பாவமாக இருக்கிறது என்பதற்காக அல்லாமல், திருச்சபையின் ஒரு சட்டபூர்வமான கட்டளைக்கு அவன் கீழப்படியாமல் இருக்கிறான் என்ற காரணத்தினால், அது அவனுக்கு சாவான பாவமாக இருக்கிறது.  இவ்வாறு சுத்தபோசனம், ஒருசந்தி ஆகிய கடமைகளிலிருந்து ஒருவனுக்கு விலக்கு அளிக்கத் திருச்சபை அதிகாரம் உள்ளதாக இருக்கிறது. ஆனால் திருடவோ, அல்லது விசுவாசத்தின் ஒரு பிரிவை மறுதலிக்கவோ யாரையும் அனுமதிக்க திருச்சபையால் ஒருபோதும் முடியாது.

உதாரணமாக, விசுவாசிகள் எவ்வாறு, எப்போது ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் அனுசரிக்க வேண்டும் என்பதையும், அவர்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படியாக எந்தெந்த நாட்களில் ஒருசந்தி, சுத்தபோசனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பனவற்றைப் பரிசுத்த திருச்சபையானது தனது கட்டளைகள் மூலம் தீர்மானிக்கிறது.  கிறீஸ்துநாதர் பச்சாத்தாபம், திவ்ய நற்கருணை ஆகிய தேவத் திரவிய அனுமானங்களை ஏற்படுத்தியிருக்க, அவற்றை வருடத்திற்கு ஒரு முறையாவது பெற்றுக் கொள்ளும் படி தனது பிள்ளைகளுக்கு உத்தரவிடுகிறது.  ஒரு தேவத் திரவிய அனுமான அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்ட மெய்விவாகம், திருச்சபையால் ஏற்படுத்தப் பட்ட நிபந்தனைகளின் பேரிலேயே கத்தோலிக்கர்களால் பெற்றுக் கொள்ளப் பட வேண்டும்.

அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்து, திருச் சபையின் மேய்ப்பர்கள் அநேக திருச்சபைச் சட்டங்‡ களை ஏற்படுத்தியுள்ளார்கள்.  அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப் பட்ட பிறகு, திரிதெந்தின் பொதுச் சங்கத்தின் ஆணைமடல்களும், அதற்குப் பின்வந்த பாப்பரசர்‡ களின் ஆவணங்களும் அதிக எளிதாகப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.  1904‡ஆம் ஆண்டில் அர்ச். பத்தாம் பத்திநாதர், திருச்சபைக் கட்டளைகளின் ஒரு முழுமை‡ யான தொகுப்பு உருவாக்கப் பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.  இந்தக் கடினமான பணி, கர்தினால்‡ மாரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த ஒரு ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டது.  1917‡ல்தான்  அந்தப் பணி முடிவடைந்தது.  அந்தத் தொகுப்பு புதிய திருச்சபைச் சட்டத் தொகுப்பாக (ஹிeழ ளீலிde லிக்ஷூ ளீழிஐலிஐ ஸிழிழ) அமல்செய்யப் பட்டது. இந்த விரிவான சட்டத் தொகுப்பில் இருந்து ஆறு கட்டளைகள் எடுக்கப் பட்டுள்ளன.  அவை குறிப்பாக பொது விசுவாசிகளின் அன்றாட ஞானக் கடமைகளைக் குறித்துக் காட்டுகின்றன.