கானாவூர் திருமன நிகழ்வு நமக்கு தரும் செய்தி : மாதா எப்படி நம் மன்றாட்டுக்களை அவர் மகனிடம் எடுத்துக் கூறி நமக்கு பெற்றுத் தருகிறார் என்பதற்கு இதைவிட மிகச் சிறந்த சம்பவம் தேவையில்லை.

“யார் என் தாய்?” என்று இயேசு கேட்டுவிட்டார். அவர் தாயை மதிக்கவில்லை (அவர் எப்படி மதிக்காமல் இருப்பார்? பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக என்று கட்டளை கொடுத்தவர் அவர்தானே ) என்று கூறுபவர்களுக்கு எந்த விளக்கமும் தராமல் விளங்கும் சம்பவம் இது.

மூன்றாவது இயேசு சுவாமி ஏன் தன் தாயாரை தன் மரணத்திற்கு சற்று முன் நமக்கும் தாயாக தாரை வார்த்தார் என்று எல்லோரையும் அறிய வைக்கும் சம்பவமாக இச்சம்பவம் இருக்கிறது.

தன் தாயாரின் கேள்வியற்ற கீழ்படிதல் என்ற புண்ணியத்தை அவர் மகன் இயேசு சுவாமி ஒரு சிறு கேள்வி கேட்டுவிட்டு கீழ்படிவதை பார்க்கின்றோம். அவர் தாய் கேட்டால் மறுக்கமுடியாத நிலையில் இருக்கிறார் மகனான சுதனான கடவுள். ஏன் தன் தாயார் கேட்டால் நியாமானவைகளைத்தான் கேட்பார் என்று அவருக்குத்தெறியும். மேலும் கடவுளின் இந்த மகத்தான மீட்புத்திட்டம் அவர் தாயாரின் மூலமாகத்தானே நிறைவேறியது. நாம் எல்லோரும் கடவுளுக்கு நன்றிக் கடன்பட்டவர்கள். ஆனால் கடவுள் நன்றிக்கடன் பட்ட ஒரே ஆள் நம் பரிசுத்த தாயார் தேவ மாதா மட்டும்தான்.

ஆகையால் அவர் கேட்டால் எதுவுமே மறுக்கப்படுவதில்லை. அதனால்தான் பாவிகள் நரகத்தில் விழாமல் இருக்க ஜெபமாலையும், உத்தரியம் போன்ற சலுகைகளையும் கேட்டு நமக்காகப் பெற்றுத் தந்துள்ளார், (ஜெபமாலையில் ஆயிரமாயிரம் புண்ணியங்கள் அடங்கியுள்ளது. உத்தரியத்தில் நம் பாதுகாப்பு அடங்கியுள்ளது)

பரிசுத்த வேதாமத்தின் முதல் தீர்க்கதரிசனமாக பிதாவே நம் அன்னையை குறித்து கூறி உள்ளார். பிற்காலத்தில் எப்போதோ பிறக்க இருக்கும் அவள்தான் உன் எதிரி; அவள்தான் உன் தலையை நசுக்குவாள் “ என்று ( ஆதியாகமம் 3:15)

( ஆனால் அன்னை எப்போதோ பிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இதற்கும் கூட நம்மிடம் ஒரு பாடல் இருக்கிறது.

" பூலோகம் தோன்றும் முன்னே.... .. ஒ பூரண தாயே... மேலோனின் உள்ளம்தன்னில் நீ வீற்றிருந்தாயே...)

அதனால்தால் நம் பரிசுத்த மாதாவுக்கும், அலகைக்கும் என்றுமே பகை. மாதாவின் பிள்ளைகள் இருக்கும் இடம் வேறு மாதாவைப் பிடிக்காதவர் இருக்கும் இடம் வேறு.

அதனால்தான் நாம் பாடுகிறோம்.

“மாசில்லாக் கன்னியே.. மாதாவே உன் மேல் நேசம் இல்லாதவர் நீசரே ஆவார் “

நீசரென்றால் பேய்கள் என்றும் ஒரு அர்த்தம் வரும்...

ஆதியாகமம் 3: 15- ( தொடக்க நூல் 3:15) தான் இந்தப்பாடல்.

நற்செய்திக்கு செல்லலாம்...

மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய் அங்கு இருந்தாள். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்.

திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

அவருடைய தாய் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

என்றார். யூதரின் துப்புரவு முறைமைப்படி ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும்.

இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்"என்றார்.அவர்கள் அவற்றை வாய்மட்டும் நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்பொழுது முகந்து பந்திமேற்பார்வையாளனிடம் எடுத்துச்செல்லுங்கள்" என்றார்.

அவர்கள் அப்படியே செய்தனர். பந்திமேற்பார்வையாளன் திராட்சை இரசமாய் மாறின தண்ணீரைச் சுவைத்தான். இத் திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியாது. -ஆனால் தண்ணீரைக் கொண்டுவந்த பணியாட்களுக்குத் தெரியும். -

அவன் மணமகனை அழைத்து, "எல்லாரும் முதலில் நல்ல இரசத்தைப் பரிமாறுவர். நன்றாய்க் குடித்தபின் கீழ்த்தரமானதைத் தருவர். நீரோ நல்ல இரசத்தை இதுவரை வைத்திருந்தீரே"என்றான்.

இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் முதலாவது. இது கலிலேயாவிலுள்ள கானாவூரில் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் நமது மாட்சிமையைவெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர். அருளப்பர் 2:1-11

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !