கிறிஸ்தவக் கடமைகளைத் தன் தாயிடமிருந்தும், மரியன்னை பக்தியை தன் பங்குக்குருவிடமிருந்தும் கற்றார் சாவியோ..
குளிர்கொட்டும் அதிகாலையில் எழுந்து தந்தை வயலுக்கு செல்வார். 5 வயது தனயன் தேவாலயம் செல்வார். ஆலயக்கதவு திறக்கும்வரை வாசலில் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பார்.
உரிய பருவத்தில் தகுந்த தயாரிப்புடன் புது நன்மை உட்கொண்டார். இவரைப்பற்றி இவர் தாயும், பங்குக்குருவும் சக்ரீஸ்தியில் உரையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவர்கள் மத்தியில் வந்து நின்று,
“ சாமி, இயேசுவைத் தந்த உங்களுக்கு நன்றி. இயேசுவும், மரியன்னையும் இனி என் பாதுகாப்பாளர்கள். பாவத்தை விட சாவை ஏற்கிறேன் என்று இயேசுவிடம் தீர்மானம் கொடுத்தேன் “ என்றெல்லாம் கூற அவர்கள் மனம் மகிழ்ந்தனர்.
சக மாணவர்களுடன் ஒரு சமயம் குளிக்கச் சென்றார். அப்போது கெட்ட வார்த்தைகள் தண்ணீர் போல பரிமாறப்பட்டன. சாவியோ வெறுப்பைக்காட்டினார். “ நாம் வளர்ந்த பிள்ளைகள். இவ்வாறு பேசுவதால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை “ என்றான் ஒருவன். அதற்கு சாவியோ, “ நாம் குழந்தைகளல்ல. அது போல் கொழுத்த பன்றிகளுமல்ல. உங்களது கெட்ட வார்த்தைகள் எனக்குப்பிடிக்கவில்லை “ என்றாரே பார்க்கலாம்…
இவர் புனித தொன்போஸ்கோவின் மாணவன். போஸ்கோவின் ஆரட்டரியில் சேர்ந்து புனிதரின் கண்கானிப்பிற்கு வந்தபின்,
“ தந்தையே, என் ஆன்மாவைக் காத்து விரைவில் என்னைப் புனிதராக்குங்கள் “ என்று அடிக்கடி கேட்டு ஜெபிப்பார்..
ஆரட்டரியில் வாழ்ந்த வேளையில் மரியன்னையின் புண்ணியங்களை பின்பற்ற “ அமல உற்பவக்குழு “ ஒன்றை மாணவர்களுக்கு ஏற்படுத்தி அதற்குரிய ஒழுங்கு முறைகளுக்கு புனித தொன்போஸ்கோவின் இசைவையும் பெற்றார். இக்குழு வழியாக மாதா பக்தி சலேசிய சபையில் இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது..
தன் இறுதி நாட்களில் அநேக பரவசக்காட்சிகள் இவருக்கு அருளப்பட்டன. ஒரு சமயம் தொடர்ந்து ஆறு மணி நேரம் நற்கருணைப் பேழைமுன் பரவசத்தில் மூழ்கினார்.
காது, நாக்கு, சிந்தனை போன்றவற்றை தன்னடக்கத்திற்குள் கொண்டு வாழ்வதே புனித வழி என்ற புனித போஸ்கோவின் வாக்குக்கேற்றபடியும், ஜெப தவ ஒறுத்தல்களை கொஞ்சம் அதிகமாகவே அனுசரித்து 15 மரித்து வயதில் புனிதரானார்..
நன்றி : நூல் - தேவனின் திருச்சபை மலர்கள், எழுதியவர்கள் அருட்தந்தை பால் பீட்டர், அருட்தந்தை M. டொமினிக்.
மேலே உள்ள பகுதியில் இரண்டு புனிதர்களைக் காண்கிறோம்.. இருவருமே திவ்ய நற்கருணை ஆண்டவரையும் நம் அன்னையையும் நேசித்தவர்கள்.. மாதா பக்தி நம்மை நற்கருணை ஆண்டவருக்குள் அடக்கும் என்பது புனிதர்கள் வாழ்வின் உதாரணங்கள்….
இன்னும் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு புனித தொன்போஸ்கோவின் வாழ்க்கையில் உண்டு.
புனித தொமினிக் சாவியோ மரித்த பின் ஒரு முறை புனித போஸ்கோவிற்கு காட்சி கொடுத்தார்… அவர் எத்தகைய பிரகாசத்தோடு காட்சி கொடுத்தார் என்றால் புனித தொன்போஸ்கோவால் அவரைப்பார்க்க முடியாமல் கண்கள் கூசின… ஏன் இத்தகைய பிரகாசம் என்று கேட்டதற்கு புனித தொமினிக் சாவியோ அளித்த பதில்,
“ பிரகாசமா,,, இதுவா… நான் மோட்சத்தில் இதைவிட பல மடங்கு பிரகாசமாயிருப்பேன்.. உங்களால் தாங்க முடியாது என்பதால் கடவுள் என் பிரகாசத்தைக் குறைத்து அனுப்பினார்.. இந்த பிரகாசத்தின் இரகசியம் தெரியுமா தந்தையே ! நான் மாதாவின் மேல் வைத்திருந்த பக்தியே என் பிரகாசத்தின் இரகசியம் “
வாழ்க மாமரியே….. ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !