தவறாது அனுகூலம் தரும் அர்ச். சவேரியாருடைய நவநாள் ஜெபம்

(திருநாள் : டிசம்பர் 3)

மிகவும் சங்கிக்கப்படத் தக்கவரும், தேவ சிநேக மிகுதியால் நிறைந்தவருமான அர்ச். சவேரியாரே, உம்மோடு கூட சாஷ்டாங்கமாக திவ்விய சந்நிதானத்தை ஆராதிக்கிறேன். சர்வேசுரன் உம்மை இவ்வுலகத்தில் அநேக வரங்களாலும், மரணத்துக்குப்பிறகு நித்திய கிரீடத்தாலும் அலங்கரித்தாரென்கிற எண்ணமானது, எனக்கு மகா சந்தோ­ம் வருவிக்கிறது.  அதற்காக அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்து, உமது வல்லபமுள்ள மன்றாட்டால் எனக்கு மகா  அவசியமான வரமாகிய நல்ல ஜீவியமும், நல்ல மரணமும், அதோடுகூட சர்வேசுரன் சித்தத்துக் கும் மகிமைக்கும் ஒத்திருக்குமாகில் (அவரவருக்கு வேண்டியதைக் கேட்கிறது) எனக்கு அடைந்தருள வேணுமென்று மன்றாடுகிறேன்.

(3 பர. 3 அருள். 3 திரி.)

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! அர்ச்சியசிஷ்ட சவேரியாருடைய ஞான போதகத்தினாலேயும், அவர் பண்ணின அற்புதங்களினாலேயும் சிந்து தேசத்திலுள்ள ஜனங்களைத் தேவரீருடைய திருச்சபையிலே அழைத்து உட்படுத்தச் சித்தமானீரே. அவருடைய பூச்சியமான புண்ணிய பலன்களைத் துதித்து வணங்குகிற நாங்கள் அவருடைய சுகிர்த மாதிரிகைகளை அனுசரிக்க அநுக்கிரகம் செய்தருளும்.  இந்த மன்றாட்டுக்களையெல்லாம் சேசு நாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். 

ஆமென்.