சந்தோஷ தேவ இரகசியத் தியான செபமாலை.

1-ம் சந்தோஷ தேவ இரகசியம்: கபிரியேல் தூதர் தேவ மாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போமாக. 
பரலோக மந்திரம்.

ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார். அவர் தாவீது குலத்தவராகிய சூசை என்பவருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள். (லூக் 1-26, 27)
அருள் நிறை மந்திரம்

தூதர் அவளது இல்லம் சென்று, "அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே என்றார். (லூக்.118)
அருள் நிறை மந்திரம்

இவ்வார்த்தைகளைக் கேட்டு அவள் கலங்கி, இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தாள். (லூக் 1:29)
அருள் நிறை மந்திரம்

அப்போது வானதூதர் அவளைப் பார்த்து 'மரியே அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர். (லூக். 1:30)
அருள் நிறை மந்திரம்

இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு யேசு என்னும் பெயரிடுவீர். (லூக். 1:31)
அருள் நிறை மந்திரம்

அவர் மேன்மை மிக்கவராய் இருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோப்பின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். (லூக் 1:32:33)
அருள் நிறை மந்திரம்

மரியாள், தூதரிடம் ''இது எங்ஙனம் ஆகும். நானோ கணவனை அறியேனே'' என்றாள்?'' (லூக். 1:34)
அருள் நிறை மந்திரம்

அதற்கு வானதூதர், ''பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம் மேல் நிழலிடும்'' (லூக். 1:35)
அருள் நிறை மந்திரம்

ஆதலின் பிறக்கும் திருக் குழந்தை கடவுளின் மகன் எனப்படும். (லூக். 1:36)
அருள் நிறை மந்திரம்

மரியாளோ, "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" (லூக். 1:38)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

2-ம் சந்தோஷ தேவ இரகசியம் தேவ மாதா எலிசபெத்தம்மாளை சந்தித்ததைத் தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

அந்நாட்களில், மரியாள் புறப்பட்டு யூதா மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று, சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.
அருள் நிறை மந்திரம்

மரியாயின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே அவள் வயிற்றினுள்ளே குழந்தை துள்ளியது. (லூக் 1:41)
அருள் நிறை மந்திரம்

எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்று “பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே. (லூக். 1:42)
அருள் நிறை மந்திரம்

ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசவசித்தவள் பேறு பெற்றவளே'' என்று உரக்கக் கூவினாள். (லூக்.1:45)
அருள் நிறை மந்திரம்

அப்போது மரியாள் உரைத்ததாவது: 'என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களி கூருகின்றது. ஏனெனில், தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். (லூக்.1-49)
அருள் நிறை மந்திரம்

இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும், என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே. ஏனெனில் வல்லமை மிக்கவர் எனக்கு அரும் பெரும் செயல் பல புரிந்தார். (லூக் 1- 49)
அருள் நிறை மந்திரம்

அவர் தம் பெயர் புனிதமாமே. அவர் தம் இரக்கம் அவரை அஞ்சுவோருக்குத் தலைமுறை தலைமுறையாய் உளதாமே. (லூக்1-15)
அருள் நிறை மந்திரம்

அவர் தம் கைவன்மையைக் காட்டினார். நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். (லூக் 1-51)
அருள் நிறை மந்திரம்

வலியோரை அரியணையினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார் (லூக். 1:52)
அருள் நிறை மந்திரம்

பசித்தோரை நலன்களினால் நிரப்பினார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார். (லூக் 1:53)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஆராதனை
ஓ என் சேசுவே
ஆமென்.


3-ம் சந்தோஷ தேவ இரகசியம் கர்த்தர் பிறந்ததை தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

அவர்கள் அங்கிருந்த பொழுது, அவளுக்குப் பேறு காலம் வந்தது. (லூக். 2:6)
அருள் நிறை மந்திரம்

அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். (லூக். 2:7)
அருள் நிறை மந்திரம்

ஏனெனில் சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்க வில்லை (லூக். 2:7)
அருள் நிறை மந்திரம்

அதே பகுதியில் இடையர் வெட்ட வெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். ஆண்டவரின் தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்துக் கொண்டது. (லூக் 2. 8:10)
அருள் நிறை மந்திரம்

"அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். (லூக். 2:10)
அருள் நிறை மந்திரம்

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா. (லூக். 2:11)
அருள் நிறை மந்திரம்

''உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமையுண்டாகும். உலகிலே அவர் தயவு பெற்றவர்க்கு அமைதி ஆகுக" (லூக்2:14) அருள்நிறை மந்திரம் ஞானிகள் கீழ்த் திசையிலிருந்து எருசலேமுக்கு வந்து, வீட்டிற்குள் போய் பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர் (மத்.2:11)
அருள் நிறை மந்திரம்

தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப் போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர். (மத்2:11)
அருள் நிறை மந்திரம்

மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருந்திச் சிந்தித்து வந்தாள் (லூக். 2:19)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓஎன் நேசயேசுவே
ஆமென்.

4-ம் சந்தோஷ தேவ இரகசியம் கர்த்தரை நாற்பதாம் நாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததைக் தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

திருச்சட்ட முறைப்படி யெருசலேமில் சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு, (ஆண்டவரே, இப்போது உம் அடியாளை அமைதியாகப் போகவிடும். ஏனெனில் உமது வாக்கு நிறைவேறிற்று, மக்கள் அனைவரும் நீர் ஆயத்தம் செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன) இதுவே புறவினத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி. இதுவே உம் மக்கள் இஸ்ராயேலை ஒளிர்விக்கும் மாட்சிமை' என கடவுளைப் போற்றினார். (லூக் 2:32)
அருள் நிறை மந்திரம்

அப்போது யெருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நீதிமான். கடவுள் பக்தர் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர். (லூக் 2:25)
அருள் நிறை மந்திரம்

ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்கு முன் தாம் சாவதில்லை என்று பரிசுத்த ஆவியால் அறிவிக்கப்பெற்றிருந்தார் (லூக். 2:26)
அருள் நிறை மந்திரம்

அவர் தேவ ஆவியின் ஏவுதலால் கோவிலுக்கு வந்தார். திருச்சட்டப்படி குழந்தைக்குச் செய்ய வேண்டியதை நிறைவேற்றுவதற்குப் பாலன் இயேசுவை பெற்றோர் கொண்டு வந்த போது, சிமியோன் குழந்தையைக் கையிலேந்தி, கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தார். (லூக். 27:28)
அருள் நிறை மந்திரம்

"ஆண்டவரே, இப்போது உமது அடியானை அமைதியாகப் போக விடும். (லூக் 2:29)
அருள் நிறை மந்திரம்

மக்கள் அனைவரும் காண நீர் ஆயத்தம் செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு விட்டன். (லூக் 2,30-31)
அருள் நிறை மந்திரம்

இதுவே புறவினத்தாருக்கு இருள் அகக்றும் ஒளி. இதுவே உம் மக்கள் இஸ்ராயேலை ஒளிவிர்க்கும் மாட்சிமை (லூக்.2-32)
அருள் நிறை மந்திரம்

சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, மரியாளைப் பார்த்து, இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான். எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான். (லூக்,2:34)
அருள் நிறை மந்திரம்

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும். இதனால் பலருடைய உள்ளங்களினின்று எண்ணங்கள் வெளிப்படும். (லூக்.2-35)
அருள் நிறை மந்திரம்

அவர்கள் நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள். பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார். ஞானம் நிறைந்தவராக இருந்தார். கடவுள் அருளும் அவர் மீது இருந்தது. (லூக் 2-39)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஆராதனை
ஓ! என் நேச யேசுவே
ஆமென்.

5-ம் சந்தோஷ தேவ இரகசியம். காணாமல் போன கர்த்தரைக் கோவிலில் கண்டு களி கூர்ந்ததைத் தியானிப்போமாக
பரலோக மந்திரம்

அவருக்குப் பன்னிரெண்டு வயது நடக்கும் போது திருவிழாவின் முறைப்படி யெருசலேமுக்குச் சென்றனர். (லூக்.2:42)
அருள் நிறை மந்திரம்

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கி விட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது. (லூக்2, 45-46)
அருள் நிறை மந்திரம்

அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார். (லூக் 2:46)
அருள் நிறை மந்திரம்

மரியே கேட்டவர் அனைவரும் அவருடைய மறுமொழிகளில் விளங்கிய அறிவுத் திறனைக் கண்டு திகைத்துப் போயினர். (லூக் 2:47)
அருள் நிறை மந்திரம்

மகனே ஏன் எங்களுக்கு இப்படிச் செய்து விட்டாய்? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக் கொண்டிருந்தோமே! என்றாள். (லூக் 2:48)
அருள் நிறை மந்திரம்

அதற்கு அவர், ''ஏன் என்னைத் தேடினீர்கள்! என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். (லூக். 2:49)
அருள் நிறை மந்திரம்

அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை . (லூக். 2-51)
அருள் நிறை மந்திரம்

பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார். (லூக்2-51)
அருள் நிறை மந்திரம்

இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன் மேலும் உகந்தவரானார்.
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஆராதனை
ஓ! என் நேச யேசுவே
ஆமென்.