அர்ச். அந்தோனியார் செபமாலை.

இச்செபமாலை, ஒரு சுரூபம் 30 மணிகள் அடங்கியது. ஒரு சுருபமும் மும்மூன்று மணிகளாய்க் கோத்து இடையில் இடம் விட்டிருக்கிற செபமாலை. உனக்குப் புதுமைகள் வேண்டுமானால் squaeris என்ற செபத்தில் பின்வருமாறு இருக்கிற 13 செபங்களைச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் பின் ஒரு பர., அருள்., திரு. சொல்லுகிறது. அதற்குப் புனித பாப்பானவர்களால் அநேக பலன்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 1896 ஆம் வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி Sacred Congregation of Indulgences என்னும் பரிசுத்த பலன்கள் குழு 100 நாள் பலன் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

(புனித அந்தோனியாரின் அற்புதங்களைத் தியானித்துச் சொல்லத் தக்கது) Siavaries அற்புதங்கள் வேண்டுமானால் புனித அந்தோனியாரிடம் போ.

1. சாவை அகற்றுகிறார் - வாக்கால் இறந்தவர்களை உயிர்ப்பித்தவரான புனித அந்தோனியாரே! இப்போது மரண வேதனை யிலிருக்கிறவர்களும் மரணத்தையடைந்த சகல விசுவாசிகளுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.
ஒரு பர., அருள்., திரி.

2. தப்பறையை ஒழிக்கிறார் - புனித அந்தோனியாரே! சகல தப்பறைகளின்றும் எங்களைக் காப்பாற்றி, புனித பாப்பானவருக்காகவும் திருச்சபைக் காகவும் வேண்டிக் கொள்ளும்
ஒரு பர., அருள்., திரி.

3. ஆபத்துக்களை நீக்குகிறார் - புனித அந்தோனியாரே எங்கள் பாவங்களுக்குத் தக்க தண்டனையாக இறைவன் வரவிடுகிற பஞ்சம் படை கொள்ளை நோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்தருளும்,
ஒரு பர., அருள்., திரி.

4. குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறார் - புனித அந்தோனியாரே! எங்களாத்துமங்களைக் கறைப்படுத்துகிற அனைத்துப் பாவங்களிலின்றும் எங்கள் உடலை அருவருப்பாக்கிற பலவித பிணிகளி னின்றும் காப்பாற்றியருளும்.
ஒரு பர., அருள்., திரி.

5. அவரைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன - புனித அந்தோனியாரே! பேய்களைப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கின்ற அனைத்துத் தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும்.
ஒரு பர., அருள்., திரி.

6. நோய்களைக் குணப்படுத்துகிறார் - புனித அந்தோனியாரே, நோய் கொண்டு இறக்கிறவர் களையும் ஆத்துமத்திலும் உடலிலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டினுதவியால் குணப்படுத்தியருளும்
ஒரு பர., அருள்., திரி.

7. அவருடைய கட்டளைக்குக் கடல் அமைதியடைகின்றது - புனித அந்தோனியாரே பயணிக்கின்ற அனைவரையும் அவரவர்கள் சேரவேண்டிய இடத்திற்கு நலமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். பாவப்புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகாமல் எங்களைத் தற்காத்தருளும்.
ஒரு பர., அருள்., திரி.

8. சிறைச்சாலையில் அடைபட்டவர்களின் விலங்குகளைத் தாகர்க்கிறார் - புனித அந்தோனியாரே! சிறையில் அடைபட்டிருக்கிறவர் களுக்கு மன்றாடும். பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டருளும்.
ஒரு பர., அருள்., திரி.

9. உயிரற்ற உறுப்புகளுக்கு உயிரளிக்கிறார் - புனித அந்தோனியாரே! நாங்கள் ஆன்ம உடல் நலத்துடன் ஆண்டவருக்குப் ஊழியப்பணி செய்யும் படியாக திடீரென்று வருகிற எவ்வித ஆபத்து சிதைவு முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்தருளும்.
ஒரு பர., அருள்., திரி.

10. காணாமற் போன பொருளைத் திரும்பக் கண்டறியச் செய்கிறார் - புனித அந்தோனியாரே! காணாமற்போன பொருட்களைக் கண்டறியச் செய்கிறவரே! இழந்து போன ஆன்மீக உலகச் செல்வங்கள் உதவியருளும்.
ஒரு பர., அருள்., திரி.

11 அவர் வேண்டுதலால் சகல ஆபத்துகளும் விலகிப் போகின்றன - புனித அந்த தோனியாரே! எங்கள் ஆன்மாவிற்கும் உடலுக்கும் வருகிற எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைத் தற்காத்தருளும்!
ஒரு பர., அருள்., திரி.

12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு நொடியில் அவரால் நீங்கிப் போகின்றன - புனித அந்தோனியாரே! வறிவரை அன்பு செய்பவரே! எங்களுடைய அவசரங்களிலே எங்களுக்கு உதவி புரிந்து வேலையும் உணவின்றித் தவிக்கும் அனைவருக்கும் உதவி செய்தருளும்.
ஒரு பர., அருள்., திரி.

13. அவரது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் அவரை வணங்குவார்களாக - புனித அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற அனைத்து நன்மை களுக்காக அவரைப் போற்றுகிறோம். எங்களுடைய வாழ்விலும் சாவிலும் உமது ஆதரவில் வைத்து எக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
ஒரு பர., அருள்., திரி.

ஆமென்.