திவ்விய நற்கருணை செபமாலை.

திவ்விய நற்கருணை செபமாலை.

1 விசுவாச பிரமாணம்.
1 கர்த்தர் கற்பித்த செபம்.
1 அருள் நிறைந்த செபம்.
1 பிதாவுக்கும் சுதனுக்கும் செபம்.

முதல் தேவரகசியம்.

தேவ நற்கருணை முன்னடையாளம்.
(தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. யோவான்: 2: 1 - 11).

கடைபிடிக்க வேண்டிய புண்ணியம்: பங்கேற்பு, ஈடுபாடு.

1 கர்த்தர் கற்பித்த செபம்
1 அருள் நிறை
3 நித்திய துதிக்குரிய
1 பிதாவுக்கும்
ஆமென்.

இரண்டாம் தேவரகசியம்.

தேவ நற்கருணையை வாக்களித்தது.
(ஐந்து அப்பம் பலுகியது யோவான்: 6: 1 - 13)

கடைபிடிக்க வேண்டிய புண்ணியம்: பகிர்வு

1 கர்த்தர் கற்பித்த செபம்
1 அருள் நிறை
3 நித்தியதுதிக்குரிய
1 பிதாவுக்கும்
ஆமென்.

மூன்றாம் தேவரகசியம்.

தேவ நற்கருணையைநிறுவியது.
( கடைசி இராவுணவு மாற்கு : 14: 22 - 25)

கடைபிடிக்க வேண்டிய புண்ணியம்: சுய தியாகம்.

1 கர்த்தர் கற்பித்த செபம்
1 அருள் நிறை
3 நித்தியதுதிக்குரிய
1 பிதாவுக்கும்
ஆமென்.

நான்காம் தேவரகசியம்.

தேவ நற்கருணையைகொண்டாடியது
( எம்மாவு சீடர்கள். லூக்கா: 24: 13 - 35)

கடைபிடிக்க வேண்டிய புண்ணியம்: தோழமை.
1 கர்த்தர் கற்பித்த செபம்
1 அருள் நிறை
3 நித்தியதுதிக்குரிய
1 பிதாவுக்கும்
ஆமென்.

ஐந்தாம் தேவரகசியம்.

இன்று தேவநற்கருணையில் இயேசுவின் பிரசன்னம்.
(உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களோடுஇருக்கிறேன். மத்தேயு: 28: 16 - 20 )

கடைபிடிக்க வேண்டிய புண்ணியம்:சேவை

1 கர்த்தர் கற்பித்த செபம்
1 அருள் நிறை
3 நித்தியதுதிக்குரிய
1 பிதாவுக்கும்
ஆமென்.

இறுதி ஜெபம்:
நற்கருணை மாதாவே! ஆமென், உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று சொல்லி நற்கருணை நாதரை பெற்றுக் கொண்டவரே. காடு மலை என்று பாராமல் எலிசபெத் அம்மாளுக்கு உதவி செய்ய நற்கருணை நாதரை சுமந்துக் கொண்டு விரைந்து சென்றவரே. உலகம் மீட்பு பெறுவதற்காக நற்கருணை நாதரை ஈன்றவரே. காலமெல்லாம் நற்கருணை நாதரை தியானித்து கடவுளை புகழ்ந்து கல்வாரி மலையில் ஆண்டவர் இயேசுவோடு பலியாகி தேவ நற்கருணையாக மாறியவரே, நாங்களும் உயிருள்ள தேவ நற்கருணையாக வாழ எங்களுக்காக பரிந்து பேசுவீராக.

ஆமென்.