அர்ச். அருளானந்தர் நவநாள் ஜெபம்

(திருநாள் : பிப்ரவரி 4)

சேசுகிறீஸ்துநாதருடையவும் இந்திய நாட்டினுடையவும் மகிமை நிறைந்த அப்போஸ்தலரே, வாக்கிலும், கிரிகையிலும் மகா வல்லப முள்ளவரே, எங்கள் மீதும், எங்கள் குடும்பங்கள் மீதும், எங்கள் உறவினர் மீதும், மற்றும் எல்லா மனிதர் மீதும் கிருபையாய் நோக்கியருளும். சர்வேசுரனுடைய ஏவுத லுக்குச் சதா செவிசாய்த்த உமது ஆச்சரியத்துக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பிரயாணங்களை மேற்கொள்ளவும், அநேகம் வேதனைகளையும் துன்பங்களையும், உபத்திரவங்களையும் சகிக்கவும் உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் முன்னிட்டு, உமது இருதயத்தில் பற்றியெரிந்த சிநேக அக்கினி எங்கள் இருதயங்களிலும் பற்றி எரியவும், அதனால் பிறர் ஆத்தும இரட்சணியத்துக்காகவும், விசே­மாய் அந்தகாரத்திலும் மரண நிழலிலும் இருக்கும் ஆத்துமங்களின் இரட்சணியத்துக்காகவும், எங்களையே நாங்களும் தத்தம் செய்யத் தயாராயிருக்கவும் எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

கடைசியாய், மகிமை நிறைந்த எங்கள் பாதுகாவலரே, உம்மால் இரட்சணியமடைந்த ஆயிரக்கணக்கான ஆத்துமங்களையும், உமது பரிசுத்த வீரச் செயல்களுக்காகச் சர்வேசுரன் உமக்களித்த மகிமையையும் பார்த்து, (இங்கே தங்களுக்கு வேண்டிய மன்றாட்டைக் கேட்கிறது)... சர்வேசுரனுடைய தோத்திரத்துக்கும் எங்கள் ஆத்தும நன்மைக்கும் உகந்ததாயிருந்தால் எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.

1 பர. 1 அருள். 1 திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, அர்ச். அருளானந்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! எங்கள் நாட்டில் சத்திய வேதம் பரவுவதற்காக வேதசாட்சியான அர்ச். அருளானந்தருக்கு வெல்லப்படாத மனத்துணிவைத் தந்தருளினீரே.  அவருடைய சிறந்த வெற்றியைக் கொண்டாடுகிற நாங்கள் எல்லோரும் அவருடைய விசுவாசத்தின் சுகிர்த மாதிரிகைகளை அனுசரிக்கும்படி அவருடைய வேண்டுதலையும் பேறுபலன்களையும் பார்த்து அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 

ஆமென்.