கத்தோலிக்கர்களிடையே உத்தரியம் அணியும் பக்தி மிகவம் குறைந்து வருவது கவலை தருகிறது.
உத்தரியம் அணிபவர்களுக்கு நரகம் கிடையாது. இது தேவமாதாவே புனித சைமன் ஸ்டாக்கிற்கு 1251-ம் ஆண்டு ஜூலை 16-ல் கொடுத்த வாக்குறுதி.
“எனது அருமை மகனே, இவ்உத்தரியத்தைப் பெற்றுக்கொள். நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி”
பாருங்கள் இது எப்பேர்பட்ட வாக்குறுதி. அதாவது உத்தரியத்தை அணிந்தால் உடனடியாக சாத்தானுக்கும் நமக்கும் உள்ள உறவு துண்டிக்கப்படுகிறது.
அதற்கு மேல் எதிரிக்கு நம் மேல் அதிகாரம் இல்லை. மாதா எப்படியும் நம்மை மீட்டுவிடுவார்கள். உத்தரியம் அணிவதன் மூலம் நாம் கார்மேல் சபையில் இனைக்கப்படுகிறோம். உத்தரியம் கார்மேல் சபையின் யூனிபார்ம். கார்மேல் சபைத்துறவிகள் செய்யும் அனைத்து ஜெபதவங்களிலும் நமக்கு பலன் உண்டு.
நம்மை நித்திய நரகத்திலிருந்து காப்பாற்ற எத்தனையோ சலுகைகளை மாதா நம் ஆண்டவர் மூலமாக பெற்றுத் தருகிறார்கள். ஆனால் நாம் பயன்படுத்துவது இல்லை.
உத்தரியம் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. தங்க நகைகள் அணியும் போது இடையூராக இருக்கும் என்று பல காரணங்கள் சொல்லி உத்தரியம் அணிவதை தவிர்க்கிறார்கள். ஒரு பத்து ரூபாய் பக்திப்பொருளில் நரகம் இல்லை. நாம் மரிப்பதற்குள் நமக்கு மீட்பு உண்டு. எப்பேற்பட்ட சலுகைகளைத் தரும் உத்தரியத்தை விடலாமா?
ஆகவே, அன்பான கத்தொலிக்க மக்களே ! உடனடியாக உத்தரியத்தை வாங்கி அணிந்து கொள்ளுங்கள்.
முதல் முறை அணியும்போது ஒரு குருவானவர்தான் அதற்குரிய விஷேச ஜெபத்தை சொல்லி அணிவிக்க வேண்டும். அதன் பின் உத்தரியம் கிழிந்தாலோ, பழசானாலோ புதிய உத்தரியம் வாங்கி நாமே அணிந்து கொள்ளலாம். பழைய உத்தரியத்தை பக்தியுடன் எரித்தோ அல்லது புதைத்தோ விட வேண்டும்.
மாதா கடவுளிடம் நமக்காக பரிந்து பேசி நம்மை நரகத்திலிருந்து காப்பாற்ற எத்தனையோ எளிய வழிகளைத் ( உத்தரியம், தினமும் ஜெபமாலை ஜெபித்தல்) தருகிறார். ஆனால் நாம்தான் பயன்படுத்துவது இல்லை.
ஒரு கத்தோலிக்கர் நரகம் சென்றால் அதற்கு , திருச்சபையின் விசுவாச அறிக்கைக்கு கீழ்படியாத அவனேதான் காரணம்.
உத்தரியத்தை பக்தியுடன் அணிந்திருப்பதாலாயே அநேக மனந்திரும்புதல்கள், புதுமைகள் நடந்துள்ளன. உத்தரியம் ஒரு மாபெரும் மனந்திருப்பும் கருவியாக உள்ளது. ஜெபமாலைக்குப்பின் திருச்சபையால் கூடுதல் பலன்கள் அளிக்கப்பட்டுள்ள அருட்கருவி உத்தரியமே !
உத்தரியம் அணிபவர்கள் தினமும் செய்ய வேண்டிய பணி,
1. தினமும் 53-யாவது ஜெபமாலை ஜெபித்தல்..
2. அந்தஸ்துக்குரிய கற்புடன் வாழ்தல் ( இல்லறவாசிகள் அவர்களுக்குறிய கற்புடன் வாழ்தல், துறவறவத்தார் அவர்களுக்குறிய கற்புடன் வாழ்தல்)
(மேலே உள்ள விஷயத்திற்கு பயந்து கொண்டு உத்தரியம் அணியாமல் இருந்து விடாதீர்கள். அதைச் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து அணிந்து கொள்ளுங்கள்)
1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பாத்திமாவில் மிகப்பெரிய சூரிய அதிசயம் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் முன்னிலையில் நடந்த போது மாதா கார்மேல் அரசியாக தன் கரத்தில் உத்தரியத்தை ஏந்தியவாறு காணப்பட்டார்கள்..
உத்தரியத்தை கரத்தில் ஏந்தியவாறு மாதா காட்சி தந்ததேன்? என்று சகோதரி லூசியாவிடம் கேட்டதற்கு,
“ அது எனென்றால் எல்லோரும் உத்தரியத்தை அணிய வேண்டும் என மாதா விரும்புகிறார்கள் “ என்று பதிலளித்தாள்.
அதை விளக்கிக்கூறும்படி கேட்டதற்கு,
“ உத்தரியத்தை அணிந்திருக்க வேண்டும். எனென்றால் நாம் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதன் பொருள் இது “ என்று கூறினாள்.
(குறிப்பு : உத்தரியம் எப்போதும் அணிந்து இருக்கலாம். தூங்கும்போதும் அணியலாம். இல்லரவாசிகள் கழற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. குளிக்கும்போது கழற்ற வேண்டும் என்று விரும்புவர்கள் கழற்றிக்கொள்ளலாம். குருக்கள், அருட்கன்னியரும் உத்தரியம் அணியலாம்)
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க I