மாதா இனை மீட்பர் – ஏன் ? : பகுதி 6

“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.” – ஆதியாகமம் 3 : 15

பிதாவாகிய சர்வேசுவனின் முதல் நேரடி தீர்க்க தரிசனம்தான் மேலே உள்ள இறைவார்த்தை. இந்த தீர்க்க தரிசன வார்த்தைக்கும் சிமியோனின் தீர்க்க தரிசன வார்த்தையான

“ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும் “ – (லூக் 2 : 35) என்பதற்கும் தொடர்பு உண்டு. அதை பின்னால் பார்ப்போம்..

அதற்கு முன்..

மோட்சம் ஏன் மனிதர்களுக்கு அடைக்கப்பட்டது..?

ஆதாமின் பாவத்தால்..

மோட்சத்திற்குள் மீண்டும் நுழைய வேண்டுமானால் நம்மிடம் என்ன இருக்கக் கூடாது..?

பாவம் இருக்கக் கூடாது..

நம்முடைய பாவத்தை கழுவ வேண்டுமானால் யாருடைய இரத்தம் தேவைப்படுகிறது?

இயேசு சுவாமியின் திரு இரத்தம்..

நாம் பாவத்திலிருந்து விடுபடுவதை என்னெவென்று சொல்லுகின்றோம்..?

“ மீட்பு “ என்று சொல்லுகின்றோம்..

மீட்பைக் கொடுக்க வேண்டுமானால் யார் வர வேண்டும்..?

“ மீட்பர் வர வேண்டும் “

மீட்பர் வர வேண்டுமானால் யார் மூலமாக வர வேண்டும்..?

“ மாதாவின் மூலமாக “

சரி இப்போதைக்கு இதோடு நிறுத்துவோம்..

பாவம் யார் மூலமாக நுழைந்தது ?

ஓரு பெண் மூலமாக..

அந்த பாவத்தைப் போக்கும் மருந்து, உணவு, கனி யார் மூலமாக வந்தது?

இன்னொரு பெண்ணின் மூலமாக வந்தது.

மனுக்குலத்தின் ஒரே எதிரி யார் ?

பிசாசு..

அவனை யார் ஒழிக்க வேண்டும்..

“கடவுள்” – அதில் சந்தேகமே இல்லை..

ஆனால் பிதா இங்கே என்ன சொல்கிறார்.. “ உன் தலையை நசுக்கப்போவது ஒரு பெண் “ என்கிறார்.. ஏன்? இங்கேதான் இருக்கிறது கடவுளின் திட்டம் (PLAN)..

இப்போது கடவுள் இப்படி சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.. “ உன் தலையை அவள் பிள்ளையான சுதனாகிய கடவுள் நசுக்குவார் “ என்று சொன்னால்..

பிசாசுக்கு எந்த பிரச்சனையும், எந்த அவமானமும் இல்லை.. அதான் தெரிஞ்ச விசயம்தானே என்று சொல்லிவிடும்..

ஏன் பிசாசை விட கடவுள் பெரியவர். அவர் கையால் அடி வாங்கினாலும், உதை வாங்கினாலும் நசுக்கப்பட்டாலும் எந்த பிரச்சனையும் அதற்கு இல்லை. ஆனால் ஒரு பெண் அவன் தலையை நசுக்கினால்.. அது அவனுக்கு மிகப் பெரிய அவமானம்..ஏன்? ஏனென்றால் வானதூதர்கள் மனிதப்படைப்பை விட உயர்ந்த படைப்பு என்று வேதாகமத்தில் காணலாம். புனித சின்னப்பர் திருமுகத்தில் (எபி 1: 7) அவரே குறிப்பிடுகிறார் வானதூதர்களை விட சற்று தாழ்ந்த படைப்பாக மனிதனைப் படைத்தார் என்று.. இங்கேதான் பசாசுக்கு சிக்கல்.. பிரச்சனை. மாதாவின் அவனுக்கு அதிகமாக கோபம் வருகிறது)

(அதனால்தான் அவன் கோபம் திருவழிப்பாடு 12 - ம் அதிகாரம் வரை தொடர்கின்றது.. )

பிதாவின் தீர்க்க தரிசனத்தில் இரண்டு உண்மைகள் இருக்கின்றன..

“ உனக்கும் பெண்ணுக்கும்… உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்” என்கிறார். அவள் வித்தான இயேசுவுக்கு பகைதான்.. ஆனால் இங்கே அப்பா சொல்கிறார்..” உனக்கும் பெண்ணுக்குமே பகை “ என்கிறார்..

இங்குதான் ஒரு வேத சத்தியம்.. நித்தியத்திற்கும் நிலைத்து நிற்கும் உண்மை.. விசுவாசப் பிரகடணத்தை பிதாவே அறிவிக்கிறார்.. அதுதான் “ மாதா அமல உற்பவி “ என்ற வேத சத்தியம்..

பிசாசோடும் பாவத்தோடும் நித்தியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாதவர்.. ஜென்ம பாவம் இல்லாதவர் மாதா என்கிற வேத சத்தியம்..

என் மகளுக்கும் உனக்கும் எக்காலமும் எந்த தொடர்பும் கிடையாது.. – இது பிதாவின் வாக்கு..

இதை யாராவது மறுத்தால் அவன் மாதாவின் எதிரி அல்ல.. கடவுளின் எதிரி..

இயேசுதான் கடவுள்.. இயேசுதான் பசாசை ஒழிப்பார்.. ஆனால் பிதா ஏன் அப்படி சொல்லுகிறார். இயேசுவோடு சேர்ந்து பசாசை ஒழித்துக்கட்டப்போவது தேவமாதாவான.. தன் பிரிய மகளான மரியம்மாள்தான் என்று. இதுதான் கடவுளின் திட்டம்.. இதில் இன்னொரு திட்டம் என்னவென்றால் அவனோடு சண்டை போடும் பொறுப்பு மாதாவுக்கு.. பின்னால் இருந்து மாதாவை ஜெயிக்க வைக்கும் பொறுப்பு கடவுளுடையது.. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதை வேறொரு பார்ப்போம்.

இப்போது அப்பா பேசுகிறார்..

"ஒரு பெண்ணை வைத்து நீ இந்த உலகில் பாவத்தை கொண்டுவந்ததால்.. என்னையும் மனுக்குலத்தையும் நீ பிரித்ததால்.. நான் ஒரு பெண்ணை வைத்துத்தான் உன் கதையை முடிப்பேன் என்கிறார்.."

இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால் தன் மகன் செய்யப்போவதை.. என் மகள் செய்வாள் என்று பிதாவே சொல்லும்போது அதற்கு என் மகளுக்கு தகுதி இருக்கிறது (கல்வாரி) என்பதும், இந்த மீட்புத்திட்டத்தில் என் மகளுக்கும் ஒரு பெரிய பெரும்பங்கை கொடுத்திருக்கிறேன் என்பதும், என் மகள் இல்லாமல் இந்த மீட்புத்திட்டம் நடைபெறவில்லை’ என்பதும் உறுதியாகிறது..

இப்போது நம் அப்பாவின் தீர்க்க தரிசனமும், சிமியோனின் தீர்க்க தரிசனத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை புலனாகிறது..

பிசாசின் தலையை என் மகன் நசுக்கினாலும், என் மகள் நசுக்கினாலும் இரண்டும் ஒன்றுதான்.. என் மகன் உடலால் வேதனை அனுபவிக்கும் வாளும் என் மகள் உள்ளத்தால் அனுபவிக்கும் வேதனை என்னும் வாளும் இரண்டும் ஒன்றுதான்..

இது பரிசுத்த வேதாகமம் கூறும் கூறும் உண்மை.. இதை வேறு யாரும் கூறவில்லை..

மாதா சேசுவோடு இனைந்து எல்லாவிதத்திலும் மீட்புக்காக பாடுபட்டார் என்பதே மாதா இனைமீட்பர்

இனை மீட்பர் என்ற சத்தியத்திற்கு காரணமாய் அமைகிறது..

நன்றி : ஆதியாகமம் 3:15 - க்கு விளக்கம் வாழும் ஜெபமாலை இயக்கம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !