ஜெபமாலை நம்மை பாதுகாக்கும் கருவி!

(இரு அனுபவ சாட்சியங்கள்)

கடந்த 19.04.2018- அன்று எங்கள் கம்பெனியின் டைரக்டர் மகள் திருமண வரவேற்புக்காக என்னோடு வேலை பார்க்கும் நண்பர்களோடு காரில் (குவாலிஸ்)  சாலிகிராமம் சென்றோம். வரவேற்பு முடிந்து அதேகாரில் திரும்பிக்கொண்டிருந்தோம். 9.00 மணி ஜெபமாலை ஞாபகம் வந்தது. அப்போது மணி பத்து. ஜெபமாலைக் கருத்துக்களை போட்டுவிட்டேன். போகும்போது இரண்டு மணி நேரம் பயணம் இப்போதும் பயணம். ஜெபமாலை ஜெபிக்க உடல் ஒத்துழைப்பு தரவில்லை. இருந்தாலும் பொறுமையாக மெதுவாக ஜெபிப்போம் எவ்வளவு நேரம் எடுத்தாலும் பரவாயில்லை என்று ஜெபமாலையை எடுத்து ஜெபிக்க ஆரம்பித்தேன். இரண்டு மூன்று பத்துக்கள் உற்சாகத்தோடு ஜெபித்தேன். நான்காவது பத்து ஜெபிக்கும்போது தூக்கம் வந்துவிட்டது. கையில் ஜெபமாலைப் பிடித்தவாறு அருள் நிறை மந்திரங்களை முனகியவாறு தூங்கிவிட்டேன்…

திடீரென்று வண்டியின் சவுண்ட் வித்தியாசமாக “ கிரீச்…” என்று ஒலிக்கவே விழித்துப்பார்த்தால் எதிரே பக்கத்தில் ஒரு லாரியை நோக்கி மோதச் சென்றுகொண்டிருக்கிறது.. பக்கென்று பயம் கவ்வியது. கண்டிப்பாக மோதப்போகிறார் விபத்துதான் என்று நினைக்கையில்.. எப்படித்தான் அன்  ந்த கொஞ்சம் விலகி பெரிய விபத்திலிருந்து மாதாவின் அருளால் ஜெபமாலையின் மகிமையால் தப்பினோம்…

அதே போல் தொலைதூர பயணம் 23.04.18 அன்று இரவு 12.00 மணிக்கு பத்து மணிகள் ஜெபித்து நானும் என் மனைவியும் பயணத்தை தொடங்கினோம் (நள்ளிரவு Train) மறு நாள் அதிகாலை ஒரு 53 ஜெபித்தேன்..அன்று இரவு எங்கள் கம்பாட்மென்ட்டுக்கு திடீரென வந்த காவலர்கள் உடனே அனைத்து கதவுகளையும் மூடச்சொன்னார்..காரணம் தெறியவில்லை. ஆனால் ஏதோ ஆபத்து என்று தெறிந்தது.பின்பு அமைதியாக பயணம் முடிந்து மறுநாள் டி.வியை ஆன் செய்தால் முதல் செய்தியே வேறு ஒரு இடத்தில் இரயில் தடம் புரண்ட செய்தியைத்தான் பார்க்க முடிந்தது…

நாம் செய்யும் ஜெபமாலை நம்மை மட்டுமல்ல நம்மோடு பயணம் செய்யும் அத்தனை பேரையும் காப்பாற்றும் அதுதான் ஜெபமாலை.. பயணங்களில் ஒரு 53 மணி ஜெபமாலை ஜெபிக்க ஒரு 20 நிமிடம்தான் ஆகும்.. எவ்வளவோ வெட்டியாக நேரங்களை செலவழிப்போம்… பேசிக்கொண்டும் பராக்குப்பார்த்துக்கொண்டும் அதற்கு முன் ஒரு 20 நிமிடங்களை உருப்படியாக ஜெபமாலைக்காக செலவிட்டால் பாதுகாப்பாக எவ்வித பயமுமின்றி நம் பயணத்தை தொடரலாமே…

ஜெபமாலை இராக்கினியாய் வந்து.. ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம்…ஜெபிப்போம் ஜெபமாலை….

வாழ்க தமத்திருத்துவம் ! வாழ்க ஜெபமாலை அன்னை !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !