சமீபத்தில் நடந்த மிகப்பெரிய ஜெபமாலைப் புதுமை

நான் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறேன். என்னுடன் என்னோடு வேலை பார்க்கும் இன்ஜினியர்களும் தங்கி உள்ளனர். நாங்கள் இருப்பது நான்கு மாடிகளைக் கொண்ட அப்பார்ட்மென்ட். இதே போல் நான்கு அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்கு பெரும்பாலும் இன்ஜினியர்களும், லேபர்களும்தான் தங்கியிருப்பார்கள். இங்கு பெரும்பாலும் குடும்பங்கள் வசிப்பதில்லை. ஒன்றிரண்டு குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். இதை பேஜ்ஜிலர்ஸ் அப்பாட்மென்ட்ஸ் என்று சொல்லலாம்..

அதிலும் நாங்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டும் அதன் அருகில் இருக்கும் அப்பார்ட்மெண்ட்டும் 100% பேஜ்ஜிலர்ஸ் மட்டும்தான். நாங்கள் இருப்பது நான்காவது மாடியின் கடைசி ரூம். தீடீரென்று ஒரு நாள் பார்த்தால் எங்கள் பக்கத்து ரூமை புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண்களுக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டார்கள். அதில் நார்த் இண்டியன் பெண்களும், நம் தமிழ்ப் பெண்களும் அடக்கம். அதில் முதல் சில நாட்களில் ஆண்கள் சத்தமும் கேட்டது.. அப்பெண்கள் என்ன செய்வார்கள் என்றால் அவர்கள் துணிமனிகளைத் துவைத்து வெளியில்தான் போடுவார்கள். அதுவும் அவர்கள் அறைக்கும் எங்கள் அறைக்கும் அருகில் உள்ள கிராதியில்தான் போடுவார்கள்.  நாங்கள் தினமும் அதைத்தாண்டிதான் வேலைக்கு செல்ல வேண்டும். அங்கு எல்லா வீடுகளும் மூன்று அறைகள், மற்றும் இரண்டு பால்கனி வசதிகள் உடையவை. 

அதனால் அவர்களின் செய்கை சரியாகப்படவில்லை. எதிரி தன் வேலையைக் காட்டிவிட்டான் என்று நினைத்தேன். ஆன்மாக்களை மோசம் செய்வதற்காகவே இப்படி செய்திருக்கிறான். கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னோடு இருப்பவர்களில் பசங்கதான் அதிகம்.. எங்களுக்கு சைட்டில் வேலைப்பளு அதிகம். அதனால் இரண்டரை மாதங்கள் போனதே தெரியவில்லை.

அந்த இடத்தின் சூழ்நிலை சிறிது மாறியது போல் தோன்றியது. ஒரு ஞாயிறு மதியம் ரூம் திரும்பினால், அவர்கள் ரூமிற்கு வெளியே ஒரு சகோதரி கண்ணியமில்லாத ஆடையோடு (casual dress) நின்றுகொண்டு இருந்தால் நான் கவனிக்காமலே என் அறைக்கு சென்றுவிட்டேன்.ஒரு நாள் இருபெண்கள் கீழே ஆடவரோடு சிரித்து பேசிக்கொண்டு நிற்கிறார்கள். ஒரு நாள் மூன்றாவது மாடியில் ஒரு பெண் நன்றாக ஆடை உடுத்தி பசங்களிடம் பேசிக்கொண்டு நிற்கிறாள்..

இதில் தவறுகள் இல்லாமல் கூட இருக்கலாம்.. ஆனால் சூழ்நிலை இருக்க இருக்க சரியில்லை என்பது மட்டும் நன்றாக புரிந்தது… 

இதற்கு இடையில் ஜெபமாலையில் அவர்கள் எப்படியாவது அங்கிருந்து காலி செய்து வேறு ரூமிற்கு குடும்பங்கள் வாழும் பகுதிக்கு சென்றுவிட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் பாதுகாப்பு அடுத்தவர்களுக்கும் பாதுகாப்பு…

சூழ்நிலை இன்னும் மோசமாகவே ஒரு நாள் நான் ஜெபமாலைப் போருக்கு தயாரானேன்…

ஜெபமாலையில் “ அம்மா ! நீங்க என்ன செய்வீங்களோ? ஏது செய்வீங்களோ ? எனக்குத் தெறியாது அங்கிருக்கும் பிசாசுகளை அடித்து  நொருக்கி விரட்டி விடுங்கள். ஜெபமாலை ஆயுதம் தானேம்மா அந்த ஆயுதத்தை பயன்படுத்துகிறேன்..

(நான் பிசாசுகள் என்று குறிப்பிட்டது அங்கிருக்கும் பெண்களை அல்ல ஆன்மாக்களை கெடுக்க வேண்டும் என்று சுற்றித்திரியும் தீய பிசாசுக்களை)

ஒரு ஐம்பத்து மூன்று மணிகள் ஒப்புக்கொடுத்தேன்… என்ன ஆச்சரியம் மறு நாள் காலையில் இருந்து அவர்கள் துணிகளை வெளியே காயவைப்பதை நிறுத்தினார்கள்.. முன்பு காலையிலும், இரவிலும் பார்க்கலாம். இப்போது இல்லை.. இதுவே ஜெபமாலைக்கு கிடைத்த முதல் வெற்றி…

ஜெபமாலை ஜெபித்து ஒன்றிரண்டு வாரத்திற்குள் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டே சென்று விட்டார்கள்… “ இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க ! “

இது எவ்வளவு பெரிய அற்புதம்.. ஜெபமாலை என்பது மிகப்பெரிய ஆயுதம் என்பது எந்த அளவுக்கு உண்மையாயிருக்கிறது பாருங்கள். இப்போது அந்த ரூமில் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டார்கள்.. மீண்டும் எங்கள் அப்பார்ட்மென்ட் பேஜ்ஜிலர்ஸாக காட்சியளிக்கிறது…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !