போர் வீரரான விமாணியை காப்பாற்றிய ஜெபமாலை!

ஒரு முறை ஐந்து போர் விமானங்கள் ஆள் நடமாட்டமில்லா அடர்ந்த காட்டில் விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த ஐந்து போர் வீரர்களும் விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நம்பப்பட்டது.  அந்த வீமானத்தையும், அவர்கள் சடலத்தையும் தேடும் பணி துதிரிதப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் அந்த இடத்தை அடைந்தார்கள். ஐந்து விமானங்களும் நொறுங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் அவர்களுக்கு காத்து இருந்தது. ஒரே ஒரு போர்வீரர் விமானி மட்டும் உயிருடன் இருந்தார். மற்ற நான்கு வீரர்களும் இறந்திருந்தனர். அவர்கள் ஆச்சரியம் மிகுந்தது. எப்படி இந்த ஆள் இல்லா அடந்த காட்டில் தண்ணீர், உணவு இல்லாமல் எப்படி உயிர் வாழ்ந்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்தான் அதிலும் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..

“நான் இவ்வளவு நாட்கள் உயிரோடு வாழ்ந்ததிற்கு நான் சொல்லிய ஜெபமாலையே காரணம். எனக்கு இங்கே நீரும் இல்லை. உணவும் இல்லை. ஆனாலும் நான் விடாமல் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு ஜெபமாலையே நீரும் உணவுமாகியது. நான் இடைவிடாமல் சொல்லிய ஜெபமாலையே என்னை இவ்வளவு நாட்கள் உயிரோடு காப்பாற்றியது. உங்களையும் இங்கே அழைத்து வந்தது” என்று சொல்லி ஜெபமாலை இராக்கினியான மாதாவுக்கு நன்றி சொன்னார் அந்த போர்வீரர் மற்றும் விமாணியான டாம் ஹெர்மன்.

அவர் சொல்லிய இன்னொரு விசயம் அவர்களை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது. நான் இதுவரை மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான ஜெபமாலை ஜெபித்திருக்கிறேன் என்பதுதான்.

நன்றி : அருட் தந்தை, வேளாங்கண்ணி மாதா திருத்தலம்.

சிந்தனை : அருள் நிறை மந்திரத்தில் மாதாவிடம் நாம் என்ன கேட்கிறோம்? “ பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிகொள்ளுங்கள்” என்றுதானே. அப்படியானால் இப்போதும் மாதா நமக்காக ஜெபிக்கிறார்கள். நம்முடைய மரண நேரத்திலும் ஜெபிக்கிறார்கள். அப்படியானால் கண்டிப்பாக மரண நேரத்தில் நமக்காக பரிந்து பேச வருவார்கள்தானே..

மேலே உள்ள சம்பவத்தைப் போல ஜெபமாலையை தொடர்ந்து விடாமல் சொல்லும் மாதாவின் பிள்ளைகளை மாதா ஆபத்தான மரண நேரங்களில் வந்து அவர்களைக் காப்பாற்றிய நிறைய சம்பவங்கள் உள்ளன. அதே போல் அவர்களின் நிறைய பிள்ளைகளுக்கு  மரண நேரத்தில் வந்து உதவி அவர்களின் பயத்தைப் போக்கி நல்ல மரணம் கொடுத்து அவர்களை இயேசு சுவாமியிடம் அழைத்துச் சென்ற சம்பவங்களும் உள்ளது..

இதில் சாதாரண மக்களும் உள்ளனர். நிறைய புனிதர்களும் உள்ளனர்.

“ பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் !” - ஆமென்

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி ! நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ்!  மரியாயே வாழ்க !