பரிசுத்த வேதாகமத்தில் மாதா! தொடர்ச்சி!

“ வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம். பழமொழி ஆகமம் 31 : 10

வல்லமையுள்ள இந்த பெண்ணான தேவ மாதாவைக் கண்டு பிடித்தவன் பிழைத்துக் கொள்வான்..

தேவ தாய்க்கு அப்படி என்னதான் பெரிய வல்லமை இருக்கிறது..

“ விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.” திருவெளிப்பாடு 12: 1

கப்பல் மாதா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?... அதுதான் சிந்தாதிரி மாதா.. அவர்கள்  நம் வேதாகமத்தில் இருக்கிறார்கள்…

“ தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகிற கப்பல் போலானாள். “- பழமொழி ஆகமம் ( நீதி மொழிகள் 31: 14) 

இப்போது நம் ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளைப் பார்ப்போம்…

“நானே ! வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு “ அருளப்பர் (யோவான்) 6 :41

வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு நம் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து என்றால் அந்த உணவை நமக்குப் பெற்றுத்தந்தவர் யார்… நம் தேவ மாதா.. தொலைதுரத்திலிருந்து உணவைக் கொண்டு வந்த கப்பல் நம் தேவ மாதாதான்.

மாதாவின் கன்னிமைக்கு வேதாகமத்தில் பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு சான்று,

“பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது.

அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்; எசேக்கியேன் 44:1-2

இப்போது புதிய ஏற்பாட்டில் ஒப்புமையை பார்ப்போமா?

“ அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.

இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். லூக்கா 1 : 30-31

மேலும் பழைய ஏற்பாட்டு சான்று மற்றும் முன்னறிவிப்பு,

“ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்; இசையாஸ் (ஏசாயா) 7 :14

மாதா கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவார் என்று கடவுளே சொல்லிய பிறகு பிரிவினையினரின் தப்பரைகள் தேவ தூஷனம்தானே..

மாதா கன்னி என்பதற்கு மேலும் வேதாகமச் சான்றுகள்..

“ பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ.” - உன்னத சங்கீதம் 4:12

மாதாவே நீர் வாழ்க…

மேலும் உன்னத சங்கீதத்தில் மாதா,

“ விடிவேளை வானம் போல் எட்டிப்பார்க்கும் இவள் யார்? நிலாவைப் போல் அழகுள்ளவள், கதிரவனைப் போல் ஒளிமிக்கவள், அணிவகுத்த படை போல் அச்சம் தருகிறாளே!"

உன்னத சங்கீதம் 6 : 9

மாதாவை நாமும் நேசிப்போம்… மற்றவர்களையும் நேசிக்க வைப்போம்..

குறிப்பு : மாதாவின் பெருமைகள், மாதா குறித்த விவிலிய விளக்கங்கள், ஜெபமாலையின் இரகசியம் மற்றும் தேவைகள், திவ்ய திருப்பலியின் இரகசியங்கள், கத்தோலிக்க திருச்சபையின் பெருமைகள் குறித்து உங்கள் பங்கில் தியானம் நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்…

சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், வாழும் ஜெபமாலை இயக்கம், சென்னை, Ph: 9094059059, 9790919203

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !