முக்கியமான தருணம் வந்து விட்டது

எல்லாம் அமைதியாக இருந்தது. பங்குக் குருவும், வேதபோதகக் குருவும் மறுநாள் காலையில் பங்குக் கோயிலில் திவ்ய பலி பூசை நிறைவேற்றிய பிறகு, மடத்திற்குப போனார்கள். அங்கு ஒரு பெரிய அறையில் பேயோட்டத் தேவையான அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. திருச்சபையின் ஞான ஆயுதங்களைத் தரித்தபடி பேய்பிடித்திருந்த அந்தப் பெண்ணின் உடலை இறுகப் பற்றிப் பிடித்திருந்த சாத்தானின் பிடியை அவர்கள் தளர்த்தி அகற்றப் போகிறார்கள். இச்சடங்கு எவ்வளவு காலம் நீடிக்கும்? ஒரு கடுமையான போராட்டம் இல்லாமல் பசாசு தன் அடிமையை விட்டுப் போயவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இருளின் சக்திகள், ஒளியின் வல்லமைகளுக்குக் கட்டுப்படுவதற்கும், கிறீஸ்துநாதரால் இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமத்தைப பசாசுக்கள் விடுவித்து விட்டுப் நரகத்திற்குத் திரும்பிப் போவதற்கும் சில நாட்கள் பிடிக்கலாம். எந்த விதமான அசுத்த அரூபிகளின் படையுடன் தாங்கள போர்தொடுக்க வேண்டியிருக்கும் என்பது அப்போது பங்குக் குருவுககும், வேத போதக குருவுக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஓர் இரும்புக் கட்டிலின் மெத்தையின் மீது அந்தப பெண் உறுதியாக இருத்தப்பட்டாள். சுவாமி தியோபிலஸின் அறிவுரையின் படி அவளது ஆடையின் கைப்பகுதிகளும், உடையும் எவ்விதமான பேய்த் தந்திரங்களையும் தடுக்கும்படியாக இறுகக் கட்டப்பட்டன. ஏதாவது நடககும் பட்சத்தில் அநதப் பெணணைக் கட்டுப்படுத்துவதற்கு பலமிக்க கன்னியர்கள தேர்ந்தெடுக்கப்பட்டனர். சடங்கின் போது பசாசு பேயோட்டுபவரைத் தாக்க முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அப்படி அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அந்தப் பெண்ணைப் படுக்கையில் அசைய விடாமல் பிடித்துக் கொள்ளும் பொறுப்பு அந்தக் கன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருசசபையால் பரிந்துரைக்கப் பட்ட ஜெபங்கள் தொடங்கிய மாத்திரத்தில், மயிர்க் கூச்செரியச் செய்யும் ஒரு காரியம் நிகழ்ந்தது. மின்னல் வேகத்தில் பேய்பிடித்தவள் தன் படுக்கையிலிருந்தும், காவலாக நின்ற கன்னியர்களின் கரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். அவளது உடல் அந்தரத்தில் பறந்து, அறைக் கதவுக்கும் மேலாக உயர்ந்து, மேற்சுவரில் மிகப் பலமாக ஒட்டிக் கொண்டது. அங்கிருந்த அனைவரையும் ஒரு பயங்கர அச்ச நடுக்கமும் திகிலும் ஆட்கொண்டன. சுவாமி தியோபிலஸ் மட்டுமே அமைதியாக இருந்தார்.

“அவளைக் கீழே இழுங்கள். படுக்கைக்கு அவளைத் திரும்பவும் கொண்டு வர வேண்டும்.”

சுவரின் மீது அவள் இருந்த உயரமான நிலையிலிருந்து அவளைக் கீழே கொண்டு வருவதற்கு மிகுந்த விசையுடன் கால்களைப் பிடித்து இழுக்க வேண்டியிருந்தது. அவளால் சுவரில் ஒட்டிக் கொள்ள முடிந்தது எப்படி என்பதுதான் இதில் மர்மமான வி­யம்!

இப்போது மீண்டும் அவள் படுக்கையின் மீது இளைப்பாறியபடி இருந்தால். திருச்சபையின் ஜெபங்கள் தொடர்ந்தன. திடீரென ஒரு பலத்த அலறல் ஒலி காற்றை நிரப்பியது. அறையின் அந்த சத்தம் தொலைவில், எங்கோ ஒரு பாலைவனத்திலிருந்து வருவது போலக் கேட்டது. தன் தலையில் ஒரு தடியால் ஓங்கி அடிக்கப்பட்டவனைப் போல சாத்தான் ஊளையிட்டான். திடீரென கட்டவிழ்த்து விடப் பட்ட வனவிலங்குகளின் கூட்டம் எழுப்பும் ஒலியைப் போன்ற அச்சமூட்டும் கூக்குரல்கள் அந்தப் பெண்ணின் வாயினின்று உரத்த சத்தமாய் வெளிவந்தன. கூடியிருந்தவர்கள் தங்கள் எலும்பு மஜ்ஜையையும் ஊடுருவக் கூடிய ஒரு பயங்கர அச்சத்திற்கு உட்பட்டார்கள்.

“அமைதியாயிரு சாத்தானே! சத்தம் போடாதே இழிவான துஷ்ட மிருகமே!”

ஆனாலும், ஜன்னல்கள் எல்லாம் சார்த்தியிருந்தும், சுற்று வட்டாரத்தில் தன் கூக்குரல்கள் எதிரொலிக்கும் வகையில், அடித்து சித்திரவதை செய்யப்படுபவனைப் போல சாத்தான் தொடர்ந்து அலறிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் இருந்தான்.

பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் அங்குமிங்கும் இருந்து ஓடி வந்தார்கள். “என்ன வி­யம்? எனன நடக்கிறது? மடத்தில் உள்ள யாராவது கொலை செய்யப்படுகிறார்களா?” என்று அவர்கள் ஒருவரையயாருவர் கேட்டுக் கொண்டார்கள். வெட்டப்படுகிற பன்றி கூட இதைப் போல கிறீச்சிடும் ஓலங்களை எழுப்புவதில்லை.

மடத்தில் பேய் பிடித்த ஒரு பெண்ணிடமிருந்து பேயை விரட்ட அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல பங்கு முழுவதும் பரவியது. பங்கு மக்கள் கூட்டங் கூட்டமாக மடத்தை நோக்கி வந்து, தங்கள் சொந்தக் காதுகளால் உலகிற்கு அப்பாற்பட்ட அசுத்த அரூபிகளின் அலறல்களையும், ஊளைகளையும் கேட்டுத் திகிலால் நிரப்பப்பட்டார்கள். பாதாள லோகத்திலிருநது வெளிப்பட்ட தொடர்ச்சியான கோபவெறியை, கூட்டத்திலிருந்த பலவீனமான மக்களால் தாங்க இயலவில்லை. பேய்பிடித்தவளைச் சூழ்ந்திருந்தவர்களின் நிலையோ இன்னும் பரிதாபம்! தங்கள் கண்கள் முன்பாக நடந்து கொண்டிருந்த பயங்கரத்திற்கு அவர்கள் தங்கள் சொந்தக் கண்களினாலும், காதுகளினாலும் சாட்சிகளாக இருந்தார்கள். அந்தப் பெண்ணின் உடல் இருந்த நிலை மிகக் கொடூரமான காட்சியாக இருந்தது. அவளுடைய அவயவங்கள் முறுக்கிக் கொண்டிருந்த காட்சி தாங்கமுடியாததாக இருந்தது. கன்னியர்களாலும் பங்குக் குருவாலும் கூட அந்தக் காட்சியை அதிக நேரம் தாங்க முடியவில்லை. கொஞ்ச நேரம் சுத்தக் காற்றை சுவாசிக்கவும், மேற்கொண்டு இந்தப் பயங்கர முயற்சியில் பங்கு பெறப் போதுமான அவகாசம் வேண்டியும் அவர்கள் அறையை விட்டு வெளியே செல்ல வேண்டியதாயிற்று. இவ்வளவுக்குப் பிறகும் மிகுந்த மன தைரியத்தோடும், சுய கட்டுப்பாட்டோடும் இருந்தவர் சுவாமி தியோபிலஸ் மட்டுமே. முந்திய பேயோட்டும் அனுபவங்களின் மூலம் சாத்தானின் ஓலங்களுக்கும், பல குரல்களில் அவன் கடூரமாக உளறும் பேச்சுகளுக்கும் அவர் பழக்கப்பட்டிருந்தார். இத்தகைய கஷ்டங்களை எதிர்கொள்ளத் தேவையான விசே­ வரங்களையும், பண்புகளையும் சர்வேசுரன் அவருக்கு வழங்கியிருநததாகத் தோன்றுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், மேற்றிராணியாரின் அனுமதியுடன் ஒரு பரிசுத்த சிமிழில், தேவ வசீகரம் செய்யப் பட்ட திவ்ய அப்பத்தைத் தம் மார்பின் மீது சுமந்து கொண்டிருப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் உடல் காயங்களிலிருந்தும், பசாசின் நேரடித் தாக்குதல்களிலிருந்தும் அவரைக் காத்தது. (அதற்கு முன்) பல முறைகள் அவரது உடல் முறுக்கப் பட்டிருக்கிறது; சுழற்காற்றில் அகப்பட்ட காய்ந்த இலை போல அது நடுங்கியிருக்கிறது.

பூரண பரிசுத்தரின் பிரசன்னத்தில் ஒரு கணமேனும் இருக்க சாத்தான் துணிவானா, அவரது திவ்ய பிரசன்னத்தை அவனால் எப்படித் தாங்க முடியும் என்று சிலர் கேட்கலாம். சவுக்கடி பட்ட விலங்கைப் போல அங்கிருந்து அவன் ஓடி விட மாட்டானா? இதற்குப் பதிலாக நாம் நினைவுகூர வேண்டியதெல்லாம் இதுதான். வனாந்தரத்தில் உபவாசமிருந்த நம் ஆண்டவரை அவன் அணுகத் துணிந்தானே! யயருசலேமின் தேவாலயச் சிகரத்திற்கு திவ்ய இரட்சகரைத் தூக்கிக் கொண்டு போகவும் அவன் துணியவில்லையா? மேலும் ஓர் உயர்ந்த மலையுச்சிக்கும் அவன் அவரைக் கொண்டு போனான். இந்த அளவுக்கு சக்தியுள்ளவனாக அப்போது தன்னைக் காட்டிக் கொண்ட அவன், அதன் பிறகும் சற்றும் மாறவில்லை. மாறாக பேய்பிடித்தவனின் உடலில் வாழும் பேய்கள் பல விதத் திறமைகளையும் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. கெட்டுப் போன சம்மனசுக்களின் படையைச் சேர்ந்த பேய்கள் மற்றவைகளை விட உயர்நிலையில் இருப்பதற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. திவ்ய சற்பிரசாதத்தின் பிரசன்னத்தில் அவை தங்களை முறுக்கிக் கொண்டு வேதனையோடு ஊளையிடுகின்றன. சாட்டையின் வீச்சில் சிக்கி, வலியோடு முனகவும், ஊளையிடவும் செய்கிற விலங்குகளைப் போல அவை நடந்து கொள்கின்றன. உலகில் முன்பு மனிதர்களின் ஆத்துமங்களாக இருந்து, தங்கள் பாவகரமான வாழ்வால் நரகத்துக்குத் தீர்வையிடப் பட்ட பேய்கள் வித்தியாசமாக செயல்பட்டன. தங்களை அவை தைரியமானவையாகவும், பயமற்றவையாகவும் காட்டிக் கொண்டன. ஒவ்வொரு கணமும் தேவ அப்பமானவரைத் தாக்க விரும்புபவை போல அவை தோன்றினாலும். அப்படிச் செய்ய தங்களுக்குச் சக்தியில்லை என்பதை அவை உணர்ந்திருந்தன. பரிதாபத்திற்குரிய பேய் பிடித்த மனிதனின் வாய் வழியே சொல்ல முடியாத அசுத்தங்களைக் கக்கியும், நுரை தள்ளியும், உமிழ்ந்தும் பேய் ஓட்டுபவரின் வல்லமையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவை முயற்சி செய்யும். இங்கு பரிசுத்த சிமிழில் உள்ள திவ்ய நற்கருணை அப்பத்தைக் கறைப்படுத்த அவை முயன்றது தெளிவாகத் தெரிந்தாலும், பூரண பரிசுத்தரின் மீது நேரடியாகத் துப்ப அவை அனுமதிக்கப் படவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. சில சமயங்களில் உதவியற்ற அந்தப் பெண்ணின் குடல்களிலிருந்து தாரை தாரையாக அசுத்தங்களையும், எச்சிலையும் வாந்தியயடுப்பதன் மூலம் சர்வ பரிசுத்தராகிய தேவன் மீது தாங்கள் கொண்டிருந்த வெறுப்பை அவை வெளிப்படுத்தின.

தாரைகள் என்று சொன்னேன் இல்லையா? உண்மையில் அங்கு கூடியிருந்தவர்கள் பல பயங்கர அனுபவங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இரக்கத்துககுரிய அந்த ஜீவனிடம் இருந்து வந்த அனைத்தையும் காண்பது இருதயத்தைக் கசக்கிப் பிழிவதாக இருந்தது. அந்தக் கடினமான, வேதனை மிக்க அனுபவம் பெரும்பாலும் தாங்க முடியாததாகவே இருந்தது. அவளது வாயினின்று வெளிப்பட்ட அசுத்தங்கள ஒரு குடத்தை, அல்லது ஒரு பெரிய வாளியை நிரப்பும் அளவுக்கு இருந்தன. மேலும், அவற்றிலிருந்து மிக மிக அசாதாரணமானதும், அருவருப்புள்ளதுமான துர்நாற்றமும் வீசியது. இந்த அசுத்தங்களின் அளவு, மனித முறையில் பேசும்போது, ஒரு சாதாரண நிலையிலுள்ள மனித உடலின் கொள்ளளவை விட மிக அதிகமாக இருந்தது. மேலும் அந்தப் பரிதாப ஜீவன் பல வாரங்களாக ஏறத்தாழ எதையுமே சாப்பிட்டிருக்கவில்லை என்பதால், அவள் பிழைக்க மாட்டாள் என்று பயப்படப் போதுமான காரணம் இருந்தது. ஒரு தடவை அவள் வாந்தியயடுத்தது ஒரு கோப்பை நிறைய மக்கரோனி போன்ற வஸ்துவாயிருந்தது. வேறொரு சமயம், வெட்டப்பட்டு, அசைபோடப்பட்ட புகையிலை போன்ற தோற்றமுள்ள பொருள் இன்னும் அதிக அளவில் வெளி வந்தது. ஒரு நாளுக்கு சுமார் பத்திலிருந்து இருபது தடவைகள் வாந்தியயடுக்கும்படி இந்தப் பரிதாபத்திற்குரிய பெண் வற்புறுத்தப் பட்டாள். ஆனால் அவள் அதிகபட்ச உணவாக ஒரு தேக்கரண்டி தண்ணீர், அல்லது பாலை மட்டுமே உட்கொண்டிருந்தாள்.