இந்தச் சடங்கின் போது, பேயோட்டுபவர் எத்தனை பேய்களோடு போராட வேண்டியிருந்தது என்பதை அறுதியிட்டுக் கண்டுபிடிப்பது அவசியமாக இருந்தது. மேலும் பேய் ஓட்டுவதற்கு பேய்பிடித்தவளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவருக்கு அவசியமாக இருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்ணிடமிருந்து வேறுபட்ட குரல்கள் வெளிவந்தன. இது எண்ணிக்கை அறியாத அரூபிகள், இங்கு சம்பந்தப் பட்டிருப்பதைக் காட்டியது. சில குரல்கள் மூர்க்கமாகவும், வெறுப்பூட்டுபவையாகவும் இருந்தன. அவை இயல்புக்கு மாறானவையாகவும், எந்த மனிதனும் தன் குரலில் வெளிப்படுத்த முடியாத, விவரிக்க முடியாத துயரத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்தின. இன்னும் சில குரல்கள் முற்றிலும் மனிதக் குரல்களாக இருந்தன. கொடிய வேதனையும், மிகக் கசப்பான ஏமாற்ற உணர்வும் அவற்றில் வெளிப்பட்டன. இத்தகைய அனுபவங்களில் பொதுவாகக் காணப்படுவது போல, திருச்சபையின் உன்னதமான பேயோட்டும் சடங்கின் மூலமாக, பேசுமாறும், பதில் சொல்லுமாறும் சாத்தானைக் கட்டாயப்படுத்த பேயோட்டுபவரால் முடியும். மேலும் அவன் தொடக்கத்திலிருந்தே பொய்க்குத் தகப்பனாக இருந்தாலும், உண்மையை மட்டுமே பேசும்படி அவனை வற்புறுத்தவும் அவரால் முடியும். சாதாரணமாக, பேயோட்டுபவரைத் தவறான எண்ணங்களுக்குத் திருப்பி விடவும், அவரை அவரது தற்போதைய செயலிலிருந்து விலகிப் போகச் செய்யவும் அவன் முயலுவான். முதலில் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தந்திரமான, தர்க்கரீதியான பதில்களையும், நேரடியான பொய்களையும், சாதுர்யமான பாவனைகளையும் தந்து அவரை ஏமாற்ற முயல்வான் என்பதும் இதில் பொதுவான அனுபவமாகும்.
பேய்பிடித்த பெண்ணிடம் சாத்தானைத் தவிர வேறு தீய அரூபிகளும் இருக்கின்றனவா என்று சிலுவையில் அறையுண்ட இரட்சகராகிய சேசுநாதரின் திருநாமத்தினால் சாத்தானிடம் கேட்ட போது, அவன் வஞ்சகமாக, நம் வேதபோதகரை ஏமாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, பல பேய்கள் அவளிடம் குடிகொண்டிருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டான். சேசுநாதரின் திருநாமம் உசசரிக்கப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் வழியாக அவன் நுரை தள்ளவும், வெறி கொண்ட காட்டு விலங்கைப் போல ஊளையிடவும் தொடங்கினான்.
இந்த அருவருப்பான அலறலும், ஊளையிடுதலும் ஒவ்வொரு நாளும் நடந்தன. சில சமயங்களில் இது மணிக்கணக்கில் நீடித்தது. சில சமயங்கள் சிங்கங்கள் மற்றும் கழுதைப் புலிகளின் கூட்டமொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது போன்ற இரைச்சலும், வேறு சமயங்களில் பூனைகளின் ஒலியும், மாடுகள் கத்தும் சத்தமும், நாய்கள் குரைக்கும் சத்தமும் அந்தப் பெண்ணிடமிருந்து வெளிப்பட்டன. பலவகையான மிருகங்கள் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து உறுமும் சத்தமும் கூட சல சமயங்களில் கேட்டது. தொடக்கத்தில் இவை அங்கு கூடியிருந்தவர்களுக்கு எந்த அளவுக்குத் தாங்க முடியாத வேதனை தந்தன என்றால், அந்தப் பன்னிரண்டு கன்னியர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பசாசின் இந்த முற்றுகையைத் தொடர்ந்து எதிர்கொள்ளப் போதுமான பலத்தைக் கொண்டிருக்கவும், அவர்கள் தங்களுக்குள்ளாகவே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, முறை வைத்து, இந்தப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
பேயோட்டுபவர்: “சேசுகிறீஸ்து நாதரின் திவ்ய நாமத்தினாலும், அவரது மகா பரிசுத்த மாதாவும், அசுத்த சர்ப்பத்தின் தலையை நசுக்கியவர்களுமாகிய அமல உற்பவக் கன்னி மாமரியின் திருநாமத்தினாலும் என்னிடம் உண்மையைச் சொல். உங்களில் தலைவனாக, அல்லது அரசனாக இருப்பவன் யார்? உன் பெயர் என்ன?”
இந்தக் கேள்விக்கு ஒரு பசாசு, நரகத்தைச் சேர்ந்த ஒரு வெறிநாயைப் போலக் குரைத்தபடி, “பெயல்செபூப்” என்றது!
பேயோட்டுபவர்: “உன் பெயர் பெயல்செபூப் என்கிறாய். நீ பசாசுக்களின் அரசனாகிய லூசிஃபர் இல்லையா?”
பசாசு: “இல்லை. நான், அரசனும், முதன்மையானவனுமான லூசிபர் இல்லை. ஆனால் நான் நரகத் தலைவர்களில் ஒருவன்.”
பேயோட்டுபவர்: “எனவே நீ ஒரு மனித ஆத்துமம் அல்ல. மாறாக, சுய நல ஆங்காரத்துடன், கடவுளைப் போல ஆக விரும்பி, கெட்டுப்போன சம்மனசுக்களில் ஒருவன், இல்லையா?”
பசாசு, இளித்தபடி: “ஆம், அப்படித்தான், ஹா, அவரை (கடவுளை) எந்த அளவுக்கு நாங்கள் வெறுக்கிறோம் தெரியுமா?”
பேயோட்டுபவர்: “நீ பசாசுக்களின் அரசன் இல்லை என்றால், பெயல்செபூப் என்று உன்னை ஏன் அழைத்துக் கொள்கிறாய்?”
பசாசு: “போதும், என் பெயர் பெயல்செபூப்.”
பேயோட்டுபவர்: “செல்வாக்கிலும், அந்தஸ்திலும் நீ லூசிபருக்கு நெருக்கமான பதவியில் உள்ளவன் அல்லவா? அல்லது சம்மனசுக்களின் கீழ்நிலை விலாசமொன்றைச் சேர்ந்தவனா?”
பசாசு: “நான் முன்பு செராபின்களில் ஒருவனாக இருந்தவன்.”
பேயோட்டுபவர்: “ஒரு வேளை சர்வேசுரன், தமக்கு நீ செய்த துரோகத்திற்குப் பரிகாரம் செய்ய உனக்கு வாய்ப்புத் தந்தாரென்றால், நீ என்ன செய்வாய்?”
பசாசு (பேய்களுக்கேயுரிய ஆங்காரத்துடன்): “நீர் மெய்யாகவே ஒரு சிறந்து வேதசாஸ்திரிதானா?”
பேயோட்டுபவர்: “இந்தப் பரிதாபத்திற்குரிய பெண்ணை எவவளவு காலமாக நீ வதைத்துக் கொண்டிருக்கிறாய்?”
பசாசு: “அவளுடையபதினான்கு வயதில் இருந்து.”
பேயோட்டுபவர்: “கபடற்ற இந்தப் பெண்ணுக்குள் புகுந்து அவளை இப்படி வதைக்க நீ எப்படித் துணிந்தாய்?”
பசாசு, ஆங்காரத்துடன்: “ஹா! அவளுடைய சொந்தத் தந்தையே நாங்கள் அவளுக்குள நுழையும் படி ஏற்பாடு செய்து அவளைச் சபிக்கவில்லையா?”
பேயோட்டுபவர்: “ஆனால் பெயல்செபூபே, ஏன் நீ மட்டும் அவளைப் பிடித்துக் கொண்டாய்? உனக்கு அனுமதி தந்தது யார்?”
பசாசு: “முட்டாள்தனமாகப் பேசாதீர். சாத்தானுககுக் கீழ்ப்படிய வேண்டியது என் கடமையல்லவா?”
பேயோட்டுபவர்: “அப்படியானால் லூசிபரின் வழிகாட்டுதலின் பேராலும், கட்டளையின பேராலும்தான் நீ இங்கு இருக்கிறாய். அப்படித்தானே?”
பசாசு: “ஆம், இது வேறு எப்படி இருக்க முடியும்?”
சுவாமி தியோபிலஸ் ஆங்கிலம், ஜெர்மன், மற்றும் இலத்தின் மொழிகளில் பசாசுடன் உரையாடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பெயல்செபூபும், மற்ற பேய்களும் அவர் பேசியதைச் சரியாய்ப் புரிந்து கொண்டு, அதே மொழியில் பதிலளித்தன. இன்று பேசப்படுகிற எந்த மொழியையும் அவை புரிந்து கொண்டிருக்கும் என்பதும், அதே மொழியில் பதிலும் அளிக்கும் என்பதும் வெளிப்படை.
சுவாமி தியோபிலஸ் தமக்கிருந்த கடும் மனச் சோர்வினால், தமது இலத்தின் ஜெபங்களையும், பேயோட்டும் வார்த்தைகளையும் சற்றுத் தவறாக உச்சரித்த சந்தர்ப்பங்களும் அவ்வப்போது நிகழ்ந்தன. அச்சமயங்களில் பெயல்செபூப் உடனே குறுக்கிட்டு: “இன்னின்னது சரியில்லை, மூட மனிதரே, உமக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று ஓலமிட்டான்!
ஒரு முறை பசாசு முனகலான குரலில் பேசிய வார்த்தைகளை சுவாமி தியோபிலஸ் சரிவர கவனிக்கவில்லை. எனவே அவர் பங்குக் குருவிடம், “அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டார். ஆனால் அவருக்கும் பசாசு கூறியது புரியவில்லை. எனவே சுவாமி தியோபிலஸ் கன்னியர்களிடம் அதே கேள்வியைக் கேட்டார்.
ஒரு கன்னிகை, “இன்னின்னது என்று சொன்னான் என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்தாள். உடனே பசாசு அவர்களைப் பார்த்து, “நான் அப்படிச் சொல்லவில்லை. உண்மையை மட்டுமே பேசு” என்று கூச்சலிட்டது.
அந்தப் பெண்ணின் தந்தை தனது சொந்த மகளையே எதற்காக சபித்தான் என்று அறிய சுவாமி தியோபிலஸ் ஆர்வமாயிருந்தார். ஆனால் பசாசோ முரட்டுக் குரலில், “அவனிடமே அதைக் கேட்டுக் கொள்ளும். என்னை அமைதியாக இருக்க விடும்” என்று அலட்சியமாகக் கூறிவிட்டது.
பேயோட்டுபவர்: “அப்படியானால் இவளது தந்தையும் பேய்களோடு ஒருவனாக அவளைப் பிடித்திருக்கிறானா? எப்போதிருந்து?”
பசாசு: “என்ன ஒரு மடத்தனமான கேள்வி! அவன் நரகத்திற்கு சபிக்கப்பட்ட நாளிலிருந்தே எங்களுடன்தான் இருக்கிறான்!”
இந்தப் பதிலைத் தொடர்ந்து, கெடுமதியுடன் கூடிய போலியான சந்தோத்தை வெளிப்படுத்திய, பயங்கரமான, இழிவு மிக்க சிரிப்பு பசாசிடமிருந்து வெளிப்பட்டது.
பேயோட்டுபவர்: “அப்படியானால் நீ இந்தப் பெண்ணின் தந்தையை முன்னிறுத்தும் படியாகவும், அவன் எனக்குப் பதில்கூறும்படியாகவும், சிலுவையில் அறையுண்ட நாசரேத்தூர் இரட்சகரின் திவ்ய நாமத்தினால் நான் உனக்குக் கட்டளை யிடுகிறேன்.”
சில கணங்களுக்குப் பிறகு, ஓர் ஆழ்ந்த, முரட்டுக் குரல் தன்னை வெளிப்படுத்தியது. பெயல்செபூபின் குரலோடு அந்தக் குரலையும் அங்கிருந்தவர்கள் ஏற்கனவே கேட்டிருந்தார்கள்.
பேயோட்டுபவர்: “நீதான் சொநதக குழந்தையைச் சபித்த சாபத்திற்குரிய தகப்பனா?”
காதைச் செவிடாக்கும் உறுமலுடன்: “இல்லை.”
“அப்படியானால் நீ யார்? ”
“நான் யூதாஸ்!”
“என்ன, யூதாஸா? நீ முன்பு அப்போஸ்தலனாக இருநத யூதாஸ் இஸ்காரியோத்தா?”
உடனே “ஆ...ம், ஆ...ம், நான்தான்” என்ற திகிலூட்டுவதும், நீட்டி முழக்குவதுமான குரல் கேட்டது. மிக மிக அடித் தொண்டையிலிருந்து எழுந்த ஊளைச் சத்தமாக அது இருந்தது. அறை முழுவதையும் அக்குரல் நடுநடுங்கச் செய்தது. இதனால் அச்சம், திகில் ஆகியவற்றின் காரணமாக பங்குக் குருவும், சில கன்னியர்களும் வெளியே ஓடிப் போனார்கள். அதன் பின் யூதாஸ் தன் பலத்தையயல்லாம் திரட்டி, தன் ஆண்டவரும், எஜமானருமாக இருந்தவர் மீது உமிழ விரும்பியதைப் போலவோ, அல்லது தன் உட்கழிவுகளையும், அசுத்தங்களையும் அவர் மீது வெளியேற்ற எண்ணங் கொண்டதைப் போலவோ, அருவருப்புக்குரிய முறையில் அந்தப் பெண் துப்பவும், வாந்தியயடுக்கவும் தொடங்கினாள்.
இறுதியாக, “நீ இங்கு என்ன செய்கிறாய்?” என்று யூதாஸிடம் கேட்கப்பட்டது.
“அவள் தற்கொலை செய்யும்படி, தன்னைத் தூக்கில் இட்டுக் கொள்ளும்படியாக, இழப்பின் கடும் அச்சத்தை அவளிடம் மூட்ட முயல்கிறேன்! அவள் கயிற்றை எடுக்க வேண்டும், நரகத்திற்குப் போக வேண்டும்!”
“அப்படியானால் தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவரும் நரகத்திற்குப் போகிறார்கள் என்பது நிஜமா?”
“அப்படியில்லை.”
“ஏன் இல்லை?”
“ஹா! அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவும், நான் செய்ததைப் போல தூக்கிலிட்டுக் கொள்ளவும் அவர்களைத் தூண்டுவது பேய்களாகிய நாங்கள்தானே!”
“இத்தகைய வெறுப்புக்குரிய காரியத்தைச் செய்ததற்காக நீ வருத்தப்படவில்லையா?”
உடனே திகிலூட்டும் பயங்கர சாபம் ஒன்று அவனிடமிருந்து வெளிப்பட்டது. பிறகு, “என்னை விட்டு விடும். உங்கள் போலிக் கடவுளைக் கொண்டு என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அது என் சொந்தப் பாவம்” என்றான் யூதாஸ்! பிறகு பயங்கரமான முறையில் நீண்ட நேரமாக அவன் உறுமிக் கொண்டிருந்தான்.