பேய் பிடித்த பெண்

பரிதாபத்திற்குரிய இந்தப் பெண்ணைப் பறறி பங்குக் குருவுக்கு எதுவும் தெரியாது. அவள் இயர்லிங்கில் இருந்து சற்றுத் தொலைவில் வசித்து வந்தாள். அது வரை அவர் அவளைப் பற்றி எதுவும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவளது உண்மை நிலை என்ன என்பது பற்றி நம் கப்புச்சின் குரு அவருக்கு விளக்கிக் கூறியிருநதார். அவள் மிகுந்த பக்தியுள்ள, மரியாதைக்குரிய பெண்ணாக இருநதாள். தனது இளமைக் காலம் முழுவதிலும் அவள் குறறஞ் சொல்ல முடியாத பக்தியுள்ள கிறீஸ்தவ ஜீவியத்தை நடத்தி வநதாள். உண்மையில் தேவத் திரவிய அனுமானங்களை அவள் அடிக்கடி பெற்று வந்தாள். அவளது 14-ஆம் வயதிற்குப் பின் வழக்கத்திற்கு மாறான சில நடவடிக்கைகள் அவளிடமிருந்து வெளிப்படத் தொடங்கின. ஜெபிக்கவும், கோயிலுக்குப் போகவும், வழக்கம் போல திவ்ய நன்மை வாங்கவும் அவள் விரும்பினாள். ஆனால் ஏதோ ஓர் உள்ளார்ந்த இரகசிய சக்தி அவளது மேலான விருப்பங்களுக்கு இடையூறாக இருந்தது. ஞான வாழ்வில் வளர்வதற்குப் பதிலாக அவளது நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. அவள் எவ்வளவு துன்புற வேண்டியிருந்தது என்பதை வார்த்தைகளில் விளக்க முடியாது. திருச்சபையின் ஆறுதல்களைப் பெறுவதிலிருந்து அவள் தடுக்கப்பட்டாள். பலவந்தமாக அவற்றிலிருந்து அவள் விலக்கப்பட்டாள். தனக்குத் தானே எந்த உதவியும் செய்து கொள்ள அவளால் முடியவில்லை. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் பிடியில் தான் இருப்பதாக உணர்ந்தாள். அச்சமூட்டும் சில உள்ளார்ந்த குரல்களை அவள் தன்னுள் உணர்ந்தாள். மிக அருவருப்புக்குரிய காரியங்களை அவை அவளிடம் கூறிக்கொண்டே இருந்தன. மிகக் கேவலமான சிந்தனைகளை அவளது மனத்தில் எழுப்ப அவை முயன்று கொண்டே இருந்தன. சொல்லத் தகுதியற்ற செயல்களைச் செய்யும்படி அவை அவளைத் தூண்ட முயன்றதுடன், கொடிய அச்சத்தினுள் அவளை மூழ்கடிக்கவும் அவை முயன்றன. பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் உதவியற்றவளாக இருந்ததோடு தனக்குப் பைத்தியம் பிடித்து விடுமோ என்ற அச்சத்திற்கும் ஆளாகியிருந்தாள். பரிசுத்த தீர்த்தத் தொட்டியை உடைத்து நொறுக்க வேண்டும், தன் ஞான ஆலோசகரைத் தாக்கி அவரது கழுத்தை நெறிக்க வேண்டும் என்பது போன்ற உந்துதல்கள் அவளுக்கு ஏற்பட்டன. ஆம், சர்வேசுரனுடைய பரிசுத்த இல்லத்தையே நொறுக்கி விடும்படி அவளைப் பலவந்தப் படுத்திய தீய ஆலோசனைகளை அவள் தனக்குள் கேட்டாள்.

இத்தகை அனுபவங்களை விளக்க, மாயத் தோற்றங்கள், மனப் பிரமை, நரம்பு மண்டலக் குறைபாடு என்பன போன்ற எளிதான விளக்கங்களை இன்று அநேகர் பயன்படுத்துகிறார்கள். மெய்தான்: நரம்பு சம்பந்தமான, அல்லது மனப்பிரமை சார்ந்த நோய்களில் இத்தகைய காரியங்கள் நடக்கலாம். ஆனாலும் பல மருத்துவர்கள் இந்த நோயாளிக்கு பல வருடங்களாக மருத்துவ சிகிச்சை அளித்தார்கள். இறுதியாக இத்துறையில் மிகப் பிரபலமான விசே­ மருத்துவர்களால் இப்பெண் பரிசோதிக்கப் பட்டாள். ஆயினும் இந்தப் பெண்ணிடம் நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லை, அவள் இவ்வி­யத்தில் மிக இயல்பாக, எந்தக் குறைபாடுமின்றி இருந்தாள் என்பதை அவர்களது முழுமையான பரிசோதனைகள் நிரூபித்தன. உடல் ரீதியான நோய்கள் அவளிடம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மறுக்கப் பட முடியாத, அசாதாரணமான அவளது அனுபவங்களுக்கு எந்த விதமான விளக்கத்தையும் தர அவர்களால் இயலவில்லை. மருத்துவர்கள் அவளுக்கு உதவ முடியாததால், மற்றொரு துறையைப் பயன்படுத்திப் பார்ப்பது என்ற எண்ணம் அவளுடைய வீட்டாருக்கு உருவானது.

பல வருடங்கள் இப்படிக் கடந்தன. இறுதியாக திருச்சபையிடமும், குருத்துவத்தின் சுபாவத்திற்கு மேற்பட்ட வல்லமைகளிடமும் அவள் தஞ்சமடைந்தாள். ஆனாலும் திருச்சபையை உடனடியாக அணுக அவர்கள் தயங்கினார்கள். குறிப்பாக திருச்சபையின் பேயோட்டும் வல்லமையைப் பற்றி இறுக்கமானதும், நம்பிக்கையற்றதுமான ஒரு மனநிலை அவர்களுக்கு இருந்தது. இந்த மனநிலையில் மேலும் சில வருடங்கள் கடந்தன. தொடர்ந்து மருத்துவ ஆய்வுகளும், பரிசோதனைகளும் செய்யப்பட்டபடி இருந்தன. படிப்படியாக சில அசாதாரண சக்திகள் அவளிடம் செயல்படுவது தெளிவானது. அந்தப் பெண், முன்பு தான் ஒருபோதும் கேட்டோ, வாசித்தோ அறியாத மொழிகளை எளிதாகப் புரிந்து கொண்டாள். குருவானவர் திருச்சபையின் அதிகார மொழியாகிய இலத்தின் மொழியில் பேசி, அதே மொழியில் உள்ள ஜெபங்களைக் கொண்டு அவளை மந்திரித்த போதெல்லாம், உடனடியாக அவற்றின் பொருளை உணரவும், புரிந்து கொள்ளவும் அவளால் முடிந்தது. அந்தச் சமயங்களில் வாயில் நுரை தள்ளியபடி வெறி கொண்டவளாக அவள் நடந்து கொண்டாள். அவளுடைய சொந்த மொழியில் அவர் பேசிய போது அவளும் தன் பழைய, சாதாரண நிலைக்குத் திரும்பினாள். பரிசுத்த தீர்த்தத்தால் மந்திரிக்கப்பட்ட பொருட்களோ, அல்லது இரகசியமாக ஆசீர்வதிக்கப்பட்ட பொருட்களோ அவளிடம் கொடுக்கப்பட்ட போது, அவள் அதை உடனடியாகக் கண்டுபிடித்தாள். ஆனால் மந்திரிக்கப்படாத சாதாரண பொருட்கள் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சுருங்கக் கூறுவதானால், பல வருட துன்பம், மற்றும் நுட்பமான பரிசோதனைகளின் மத்தியில் அவள் தனது நாற்பதாம் வயதை அடைந்த போது, இது நிச்சயமாக பேய்பிடித்த நிலைதான் என்று திருச்சபையின் அதிகாரிகள் ஐயமின்றி நம்பினார்கள். இனி திருச்சபையானது இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தீயவனின் சக்திகளிலிருநது அந்தப் பரிதாபத்திற்குரிய ஜீவனை விடுவிக்க வேண்டும். பேய் பிடித்ததன் காரணம் எனனவென்று உறுதியாகக் கூறப்பட முடியவில்லை. இது வி­யத்தில் அநதப் பெண்ணால் கூட எந்த விவரத்தையும் தர முடியவில்லை. பிற்பாடு பேயோட்டும் சடங்கின் போதுதான் அந்தக் காரணம் அறியப்பட்டது.

சுவாமி தியோபிலஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பல வருடங்களாக தியானப் பிரசங்கங்கள் செய்து வந்தார். பேயோட்டும் நிகழ்ச்சிகளிலும் அவருக்கு நல்ல அனுபவம் இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஏற்கனவே பலரிடமிருந்து அவர் பேய்களைத் துரத்தியிருந்ததால், இந்தப் பிரச்சினையையும் ஆயர் அவரிடமே ஒப்படைத்தார். அப்பழுக்கற்ற அவரது கிறீஸ்தவ ஜீவியமும், பேயோட்டுவதில் அவர் பெற்றிருந்த எண்ணற்ற வெற்றிகளும் இக்காரியத்திற்கு மிகவும் பொருத்தமானவராக அவரைத் தனிப்படுத்திக் காட்டின. ஆனால் தாம் எதிர்கொண்ட பேயோட்டும் சம்பவங்கள் எல்லாவற்றிலும் இதுவே மிகக் கடினமானதாக இருக்கப் போகிறது என்பதையோ, அல்லது இத்தகைய காரியங்கள் தம்மைக் குழப்பமடையச் செய்யப் போகின்றன என்பதையோ, தமது உடல் ரீதியான தாங்குசக்திக்கே இது ஒரு பெரும் சவாலாக இருக்கப் போகிறது என்பதையோ அவர் அப்போது உணரவில்லை. இந்தக் கப்புச்சின் குருவானவர் தமது அறுபதாம் வயதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த போதும், இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக முடித்து வைக்க, கிடைக்கக் கூடிய எல்லா வித ஆதார வல்லமைகளும் அவருக்குத் தேவையாயிருந்தன.

அயோவா மாகாணத்தின் இயர்லிங்கில், மேற்றிராணியாரால் இந்தப் பேயோட்டும் சடங்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்ட நாளும் வந்து விட்டது. பங்குக் குருவையும் அவரது இல்ல மேற்பார்வையாளராக இருந்த அவரது சகோதரியையும், வணக்கத்திற்குரிய கன்னிகாஸ்திரீகளையும் தவிர அங்கே என்ன நடக்கப் போகிறது என்பது வேறு யாருக்கும் தெரியாது. இதை இரகசியமாக நடத்துவது என்று முன்கூட்டியே மிகக் கண்டிப்பான முறையில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் வெளிப்படையான முறையில் பேயோட்டுவது அந்தப் பெண்ணுக்குப் பிரச்சினைகளைக் கொண்டுவரும். இந்த வி­யம் வெளியே தெரிந்தால், மக்கள் அவளைச் சுட்டிக் காட்டி, “இதோ இவளைத்தான் முன்பு பேய் பிடித்திருந்தது” என்று பேசக் கூடும். அவள் இரயிலில் அந்தக் கிராமத்திற்கு வர வேண்டியிருந்ததால், அந்த இரயிலின் பணியாளர்களுக்கு இதுபற்றி தகவல் தருவது அவசியமாக இருந்தது. ஏனென்றால் வழியில் ஏதாவது நடந்தால், பேயின் பாதிப்பால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அப்போது அவர்களுடைய உதவி தேவைப்படும். ஆயினும் அந்தப் பிரச்சினை எத்தகையது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பரிதாப நிலையிலிருந்த அந்தப் பெண், திருச்சபையின் செயல் முறைகளுக்கு மனமுவந்து தன்னைக் கையளித்தாள். இதன் மூலம்தான் இந்தப் பயங்கரத்துக்குரிய அடிமைத்தனத்திலிருந்து தான் விடுபட முடியும் என்று அவள் உறுதியாக நம்பினாள். ஆயினும் தன்னைத் தானே போதுமான அளவு கட்டுப்படுத்திக் கொள்ள அவளால் முடியவில்லை. பசாசின் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர் அவள் இதைப் பிறருக்கு அறிவித்தாள். இதனால் இயர்லிங் இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த அந்த இரவிலேயே தன்னைச் சந்திக்கும்படி காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது அவள் எத்தகைய கோபவெறி கொண்டாள் என்றால், அவர்களைப் பற்றிப் பிடித்து, அவர்களுடைய குரல்வளையை நெறித்து, மூச்சுத் திணறடிக்க வேண்டுமெனத் துடித்தாள்.

அதே இரவில், வேறொரு வழியில் சுவாமி தியோபிலஸ் அங்கு வந்து சேரும்படி முன்னமே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பங்குக்குரு தமது சொந்தக் காரை எடுத்துக் கொண்டு, நிலையத்தில் அவரைச் சந்திக்கப் புறப்பட்டார். அநதப் புதிய கார் நல்ல வேகத்துடன் இயங்கக் கூடியது என்றாலும், இப்போது அது வழக்கமான வேகத்தை எட்ட முடியவில்லை. குருவும் தம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனாலும் அது மிக மெதுவாகவே நகர்ந்தது. இத்தனைக்கும், அதில் ஒரு சிறு பிரச்சினை கூட இல்லை. மிகக் குறைவான தூரமே என்றாலும் இரயில் நிலையத்திற்கு வந்து சேர அவருக்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. தாமதத்திற்காகவும், இத்தகைய ஏமாற்றத்திற்காகவும் அவர் தமது நண்பரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு சுவாமி தியோபிலஸ் மிக அமைதியாகப் பதிலளித்தார்: “இது நான் எதிர்பார்த்ததுதான். எல்லாமே சுமூகமாக நடந்திருந்தால்தான் நான் அதிக ஆச்சரியப்பட்டிருப்பேன். கஷ்டங்கள் எழும். அவை வரும் என்பதை எப்போதும் நாம் எதிர்பார்த்தே இருக்க வேண்டும். நம் திட்டங்களைச் சீர்குலைக்க பசாசு தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்யும். உங்களுக்காகக் காத்திருந்த போது, அசுத்த அரூபி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடக் கூடாது என்று நான் இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் உங்களை வரவிடாமல் தடுக்க அவன் முயல்வான் என்று நான் சந்தேகப் பட்டேன். ஆம், உங்கள் உடலைக் காயப்படுத்த அவன் முயல்வான் என்று நான் பயந்தேன்” என்றார் அவர்.

தம் கார் ஏன் சரியாக இயங்கவில்லை என்று இப்போது பங்குக் குருவுக்குப் புரிந்தது. நடக்கவிருந்த பல்வேறு வேதனையான நிகழ்ச்சிகளில் இது முதலாவதாக இருந்தது. இத்தகைய இடையூறுக்குப் பிறகு நம் வேதபோதகர் ஒரு வித சந்தேகத்துடனேயே காரில் ஏறியிருப்பார் என்ற எண்ணம் வாசகர்களுக்கு வரக் கூடும். ஆனால் அவர் சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். முதலில் காரை சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர்வதித்தார். பிறகு காரின் பின் இருக்கையில் ஏறிக் கொண்டார். பங்குக் குருவின் இல்லத்தை நோக்கிய சிறு பயணத்தில் பேயோட்டுதல் நடக்க விடாமல் தடுக்கும்படி, வழியில் ஏதாவது நடக்கலாம் என்ற சந்தேகத்துடன் அவர் அமைதியாக ஜெபமாலை ஜெபித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் மேற்கொண்டு எந்தப் பிரச்சினையும் இன்றி இரண்டு குருக்களும் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்தப் பெண்ணும் கன்னியர் மடத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்திருந்தாள். கடவுளுக்கு நன்றி! இவ்வாறு மறுநாள் காலையில் அவர்களுடைய கடினமான பணி தொடங்க எல்லாம் ஏற்பாடாயிற்று. ஆயினும், அந்த இரவிலேயே மனுக்குலத்தின் எதிரியானவன், தன் கொடிய முகங்களை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டான். தொடக்கத்திலேயே அந்தப் பெண் கஷ்டப்படத் தொடங்கி விட்டதாக மடத்திலிருந்து பங்கு இல்லத்திற்கு செய்தி போனது. சமையலறையில் இருந்த இனிய குணமுள்ள ஒரு கன்னிகை தட்டில் இருந்த உணவை அந்தப் பெண்ணுக்கு எடுத்துச் செல்வதற்கு முன் அதன் மீது பரிசுத்த தீர்த்தம் தெளித்தாள். ஆயினும் பசாசு ஏமாறுவதாக இல்லை. அது மந்திரிக்கப் பட்ட உணவு என்பதை அந்தப் பெண் உடனடியாகக் கண்டுபிடித்ததோடு, கோபவெறி கொண்டு, பூனை போல உறுமத் தொடங்கினாள். அவ்வுணவை அவள் உண்ணும்படி செய்ய யாராலும் முடியவில்லை. எனவே அந்த உணவு திருப்பி எடுத்துச் செல்லப் பட்டு, மந்திரிக்கப்படாத வேறு உணவு கொண்டுவரப்பட்டது. இல்லையயன்றால் சூப் கோப்பையும், தட்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டு, ஜன்னல் வழியாக வெளியே பறந்திருக்கும். எந்த ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட, அல்லது மந்திரிக்கப் பட்ட பொருளையும் கொண்டு அந்தப் பெண்ணை ஏமாற்ற சாத்தியமில்லாமலே போயிற்று. அத்தகைய ஒரு பொருள் அவளருகில் இருப்பதே கனன்று கொண்டிருக்கும் கொள்ளிகளின் மத்தியில் அடைக்கப்பட்டது போன்ற கொடிய வேதனைகளை அவளுக்கு வருவித்தது.