(பாதுகாவலரின் திருநாளுக்கு முன்)
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
இறைவா, உம் மக்கள் தங்கள் பாதுகாவலரின் திருநாளைக் கொண்டாடத் தயார் செய்திருக்கும் இக்கொடியை ✠ ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இக்கொடி உயர ஏற்றப்படுவதுபோல, இவர்களுடைய உள்ளங்களும் விண்ணகம் நோக்கி உயர்த்தப்படுவனவாக. இந்த நவநாட்களில் இக்கொடியைக் காண்போர் அனைவரும் உம் திருமகன் இயேசுவின் தூய இதயத்தை ................. (அல்லது) உம் அடியாளும், எம் தாயுமாகிய தூய கன்னி மரியாளை (அல்லது) எம் பாதுகாவலரான புனித .................. நினைவுகூர்ந்து, அவர்தம் முன் மாதிரியைப் பின்பற்றி, உமக்கு உகந்தவர்கள் ஆவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு கொடியின்மேல் தீர்த்தம் தெளிக்கிறார்.)