குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பித்தருளும்.
எல்: உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும்.
குரு: ஆண்டவரே, எம் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: எம் கூக்குரல் உம்மிடம் வருவதாக.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, மனுக்குலத்தின் மீட்பரே, உம்மீதும் கார்மேல் அன்னை கன்னிமரியாமீதும் கொண்ட அன்பினால் உம் ஊழியர் அணியப்போகும் இந்த உத்திரியங்களை உமது வல்லமையால் ஆசீர்வதித்தருளும். உம் அன்னையின் பரிந்துரையால் பகைவரிடமிருந்து பாதுகாக்கப்பட்டு இவர்கள் உமது அருளில் இறுதிவரை நிலைத்திருப்பார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
(உத்திரியங்கள்மீது தீர்த்தம் தெளித்த பின்னர் ஒவ்வொருவருக்கும் உத்திரியத்தை அணிலித்துக் கூறுவதாவது:)
குரு: உம் பகைவரிடமிருந்து உம்மைக் காப்பாற்றி முடிவில்லா வாழ்வுக்கு உம்மைக் கொண்டு சேர்த்திடத் தூய கன்னி மரியாவின் துணையை நம்பி இந்த உத்திரியத்தை அணிந்துகொள்ளும்.