புனித ஆரோபண அன்னை ஆலயம்
இடம்: பள்ளபாளையம், மங்கலம் வழி, 641663
மாவட்டம்: திருப்பூர்
மறைமாவட்டம்: கோயம்புத்தூர்
மறைவட்டம்: கருமத்தம்பட்டி
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருட்பணி. குழந்தை சாமி
குடும்பங்கள்: 250
ஞாயிறு திருப்பலி காலை 08:15 மணிக்கு
திங்கள் முதல் சனி வரை திருப்பலி மாலை 06:00 மணிக்கு
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. M. பங்கிராஸ், கோவை மறைமாவட்டம்
2. அருட்பணி. D. மரிய ஜோசப், கோவை மறைமாவட்டம்
3. அருட்பணி. A. பிரின்ஸ் ஜோசப், அமெரிக்கா
4. அருட்பணி. D. பிரான்சிஸ் ரொசாரியோ, கோவை மறைமாவட்டம்
5. அருட்பணி. B. ஹென்றி, கோவை மறைமாவட்டம்
6. அருட்பணி. ஸ்டேன்லி அலெக்சு, கிருஷ்ணகிரி
7. அருட்பணி. R. ஜானி சகாயராஜ், கோவை மறைமாவட்டம்
8. அருட்பணி. மரிய ஜோசப் (ஊட்டி மறைமாவட்டம்)
9. சகோதரர். வின்சென்ட் பெரர், பெங்களூர்
10. அருட்சகோதரி. பிரித்துவாழ் மேரி, (late)
11. அருட்சகோதரி. ஐரேனிஸ் மேரி, (late)
12. அருட்சகோதரி. மேரி லூசியா, (late)
13. அருட்சகோதரி. மேரி கார்னல், (late)
14. அருட்சகோதரி. லிட்வின் மேரி மதர், (late)
15. அருட்சகோதரி. வெரோனிகா, (late)
16. அருட்சகோதரி. மேரி பெர்னாடு, SJT (late)
17. அருட்சகோதரி. நிர்மலா, SJT
18. அருட்சகோதரி. மார்டின், SMMI
19. அருட்சகோதரி. லாரா, FSPM
20. அருட்சகோதரி. ரெஜி, FSPM
21. அருட்சகோதரி. புளோரா
22. அருட்சகோதரி. ஐவோ மேரி, SAT
23. அருட்சகோதரி. தோமினிக் மேரி, SAT
24. அருட்சகோதரி. லாம்பிஷ் மேரி, SAT
25. அருட்சகோதரி. பாக்கிய மேரி
26. அருட்சகோதரி. மேரி ஷைலா, FMM
27. அருட்சகோதரி. ஞானமணி, SAT
28. அருட்சகோதரி. நிர்மலா, FMM
29. அருட்சகோதரி. ஜெயா, SMMI
30. அருட்சகோதரி. பீலியா, FSPM
31. அருட்சகோதரி. கஷ்மீர் மரியா, FSPM
32. அருட்சகோதரி. லூசியா, FSPM
33. அருட்சகோதரி. பூல்ஜன்சியா, FSPM
34. அருட்சகோதரி. மேரி விக்டோரியா
35. அருட்சகோதரி. பிராங்க் மேரி, SAT
36. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி (டினா), F.M.M
37. அருட்சகோதரி.ஜெனிட்டா மேரி, F.M.M
வழித்தடம்: கருமத்தம்பட்டி -சோமனூர் -பள்ளபாளையம்
Location map: https://g.co/kgs/S5T1dL
வரலாறு:
பார் புகழும் பள்ளமா பகுதியின் வரலாறும், சீர் திகழ் சின்ன ரோமாபுரியின் சிறப்பும், பாசமிகு குருக்களின் பெருமுயற்சியாலும், அன்பு இறைமக்களின் அயரா உழைப்பாலும், இன்று வீரமுடன் எழுந்து நின்று காட்சிதரும் அருள்நிறை ஆரோபண அன்னை ஆலயத்தின் வரலாற்றை, இருள் நீங்க மனம் மகிழ்ந்து படித்து மகிழ்வோம் வாருங்கள்...
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருமத்தம்பட்டி பங்கின் கிளைப் பங்காக இருந்த பள்ளபாளையம் பிரிக்கப்பட்டு, சேடபாளையம், செம்மாண்டாம் பாளையம், பூமலூர், கோம்பக்காடு, புக்கிலிபாளையம், புதூர், முருகன்பாளையம், பெத்தாமுச்சிபாளையம், கண்ணம்பாளையம், வேட்டுவபாளையம் ஆகிய ஊர்களுடன் 1860 ஆம் ஆண்டு தனிப் பங்காக ஏற்படுத்தப் பட்டது.
ஆலயத் தோற்றம்:
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கருமத்தம்பட்டியில் திருமுழுக்கு பெற்று, மெய்மறையைத் தழுவிய சில கிறிஸ்தவ குடும்பங்கள் பள்ளபாளையத்தில் வந்து குடியேறியதால், இப்பங்கு உருவாக்கம் பெற்றது. 1860 ஆண்டுகளுக்கு முன்னர் ஊரின் வடபகுதியில் தற்போது பழைய உபதேசியார் என்றழைக்கப்படும் குடும்பத்தாரின் வீட்டை அடுத்து ஒரு சிற்றாலயம் இருந்து. அருட்பணி. பெரிய அருள்நாதர் மற்றும் கருமத்தம்பட்டி பங்கு குருக்களாகிய அருட்பணி. ஜெலிஸ், அருட்பணி. இரபேல் சுவாமிகள் ஆலோசனைகளுடனும், ஆதரவுடனும் தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1862 ஆம் ஆண்டு அருட்தந்தை. இரபேல் அடிகளார் (இறை ஊழியர் ஜோசப் லூயி இரபேல்) ஆலயத்தை கட்டி முடித்தார். அதுமுதல் சுமார் 70 ஆண்டுகள் பிரெஞ்சு நாட்டு குருக்களால் மிகச் சிறப்பாக பள்ளிபாளையம் வழிநடத்தப்பட்டு வந்தது.
இவ்வேளையில் இறை ஊழியர் ஜோசப் லூயி இரபேல் குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா....
இறைஊழியர் இரபேல் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியான ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள வலெரின் என்னும் கிராமத்தில் 24.08.1824 அன்று பிறந்து, கிறிஸ்துவை அறிவிக்க பாரிஸ் மறைபரப்பு பணியாளர் சபை (Mission Etrangers de Paris, MEP) -யில் சேர்ந்தார். 28.04.1848 அன்று இந்திய மண்ணில் காலடி பதித்து, கோவை மறைமாவட்டத்திற்காக பாலக்காடு, கருமத்தம்பட்டி, வெலிங்டன், குன்னூர், கோயம்புத்தூர் போன்ற பங்குகளில் 32 ஆண்டுகள் இறைப்பணியாற்றி, 31.01.1881 அன்று தமது இன்னுயிரை இறைவன் பதம் அர்ப்பணித்தார். இவர் கோவை பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை சகோதரிகள் சபையின் (FSPM) நிறுவனர். இறைஊழியரின் அருளாளர் மற்றும் புனிதர் பட்ட நிகழ்வுகளுக்காக ஜெபிப்போம்...
தூய லூர்து அன்னையின் புதுமை சுரூபம்:
1879 ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. டென்னிஸ் பெயரமால் அவர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து லூர்து அன்னை சுரூபம் வரவழைக்கப்பட்டு, பள்ளபாளையம் ஆலயத்தில் நிறுவப்பட்டது.
அன்னையின் புதுமை:
பள்ளபாளையம் மக்களின் மனதில் தனியிடம் பெற்ற அருட்பணி. கஸ்தானியர் சுவாமிகள் 1897-1907 வரையிலும், பின்னர் 1921-1932 வரையிலும் என இருமுறை பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். இவரது பணிக்காலத்தில் பள்ளபாளையத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களில் எல்லாம் பிளேக் என்னும் கொடிய நோயின் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த கொடிய நோய் இவ்வூர் மக்களை அணுகாமல் இருக்க, புதுமை நிறைந்த லூர்து மாதாவின் சுரூபத்தை எடுத்துக் கொண்டு பள்ளபாளையத்தை சுற்றிலும் எடுத்து வந்தார். ஆச்சரியமாக பிளேக் நோய் இவ்வூரை அணுகவேயில்லை. லூர்து அன்னையின் புதுமையை எண்ணி இறைமக்கள் வியப்பில் ஆழ்ந்து, நன்றி செலுத்தினர். அன்று தொடங்கிய அன்னையின் புதுமை இன்றும் தொடர்கிறது...
பங்கின் வளர்ச்சியும், பங்குத்தந்தையர்களும்:
அருட்தந்தை. ஜோவான்ஸ் (அருள்நாதர்) (11.02.1860 -28.11.1869):
இவரது காலத்தில் தான் தற்போது உள்ள ஆலயமானது அருட்பணி. இரபேல் சுவாமிகள் உதவியுடன் 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பகுதி மக்களின் கல்வித் தேவைகளை உணர்ந்து ஆடவர் ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினார். 16.07.1866 அன்று கார்மேல் உத்தரிய மாதா சபையை நிறுவி, கிறிஸ்தவ நல்லொழுக்கத்தில் மக்களை நடக்கச் செய்தார்.
அருட்தந்தை. லெமார்ஷாண்ட் (அம்புநாதர்) (28.12.1869 -23.04.1873): சாதிய வேற்றுமைகளை அகற்ற பாடுபட்டார்.
அருட்தந்தை. பிலேர்ஸ் சுவாமிகள் (23.04.1873 -25.03.1877):
1874 ஆம் ஆண்டில் சிறிய ஓலைக் கூரை பள்ளிக்கூடத்தை பெரிதாக்கி, அரசினர் அங்கீகாரமும், நிதியுதவியும் பெற வழிவகுத்தார். 1874 ஆம் ஆண்டு கன்னியர் மடத்தை நிறுவி, பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை நிறுவினார். வேட்டுவபாளையம் ஆலயத்தைக் கட்டினார். இவர் காலத்தில் தான் கண்ணம்பாளையம் இப்பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு சவேரியார்பாளையத்துடன் இணைக்கப் பட்டது.
அருட்தந்தை. டென்னிஸ் பெயரமால் (25.03.1877- 21.01.1883):
1878 ஆம் ஆண்டு பங்குத்தந்தை இல்லம் கட்டினார். 1879 ஆம் ஆண்டில் ஆலயத்திற்குள் லூர்து மாதா கெபியை அமைத்தார்.
அருட்தந்தை. சிலுவைநாதர் (1884-1885):
அருட்தந்தை. பிலாண்சாட் (1885-1890):
கொடிய வியாதிக்காரர்களையும் பரிவுடன் தொட்டு மருந்தளித்தார். இவர் காலத்தில் புக்குளிபாளையம் தனிப் பங்காக பிரிந்தது.
அருட்தந்தை. ஜே. தூர் (1891-1897): பள்ளியின் கூரையை அகற்றி
19.12.1893 அன்று பெரியதாக கட்டினார். 1894 ஆம் ஆண்டு மணிக்கூண்டு கட்டி, அதில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மணியை நிறுவினார். அருந்ததியருக்காக பல எதிர்ப்புகளையும் தாண்டி அடைக்கல மாதா ஆலயத்தைக் கட்டினார். பள்ளபாளையம் ஆலய பீடத்தையும் கட்டினார். ஜெபமாலை மாதா சபையை ஏற்படுத்தினார். பங்கு மக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப் படுத்தினார்.
அருட்தந்தை. கஸ்தானியர் (1897-1907):
1904 ஆம் ஆண்டு, லூர்து அன்னையின் சுரூபத்தை ஊரைச் சுற்றி எடுத்து வந்து பிளேக் நோய் இம்மக்களை தாக்காத வண்ணம் பாதுகாத்தார்.
அருட்தந்தை. இஞ்ஞாசியார் (1907-1909):
1908 ஆம் ஆண்டு கோம்பைக் காட்டில் ஆலயம் அமைத்து, சிலுவைப் பாதை படங்களையும் நிறுவினார்.
அருட்தந்தை. பிளான் சார்டு (1909-1915):
இவரது உடல் நிலை பாதிப்புக்குள்ளானதால் அருட்தந்தை. கொஷே சுவாமிகள் திருப்பலி நிறைவேற்ற வந்தார்.
அருட்தந்தை. பெத் (1915-1921): ஏழை எளியவர்களுக்கு அதிகமாக உதவி புரிந்தார்.
அருட்தந்தை. கஸ்தானியர் (1921-1932):
இரண்டாம் முறையாக பள்ளபாளையம் பங்குத்தந்தையானார். சேட பாளையம் ஆலயத்திற்கு அழகிய மணிமண்டபமும், மணிக்கூண்டு கட்டி மணியையும் நிறுவினார். 1925 ஆம் ஆண்டு பள்ளபாளையம் ஆலயத்திற்கு அழகிய பீடம் அமைத்து, அதில் மரவேலைப்பாடுகள் செய்து அழகூட்டினார்.
அருட்தந்தை. அம்புரோஸ் (1932-1936):
திருஇருதய சபையை புதுப்பித்தார். இளைஞர்கள் உதவியுடன் பங்குத்தந்தை இல்லத்தைச் சுற்றி தோட்டம் அமைத்தார். இவர் 1955-1973 வரை புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயராக பணியாற்றியது குறிப்பிடத் தக்கது.
அருட்தந்தை. ஜோசப் சுவாமிகள் (1936-1940):
ஆண்கள் பள்ளிக்கூடத்தை ஆலய பங்குத்தந்தை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.
அருட்தந்தை. சின்னப்பநாதர் சுவாமிகள் (1940-1943): இவரது பணிக்காலத்தில் திருஇருதய சபையின் 50 வது ஜூபிலி நினைவாக திருஇருதய கெபி கட்டப்பட்டது. மேலும் பள்ளிக்கூடம் புதுப்பிக்கப்பட்டது.
அருட்தந்தை. A. பிரான்சிஸ் (1943-1948):
22.07.1945 அன்று புதிய பள்ளிக்கூட கட்டிடத்தைக் கட்டி முடித்தார். மணியக்காரர் குடும்பத்தாரிடமிருந்து 75 சென்ட் நிலத்தை ஆலயத்திற்கு தானமாக பெற்றுத் தந்தார். சாதிய ஏற்றத்தாழ்வுகளை மாற்றினார்.
அருட்தந்தை. A. சவரிநாதர் (1949-1956): ஆலயத்தையும், அறைவீட்டையும் மின்சார விளக்குகளால் அலங்கரித்தார்.
அருட்தந்தை. S. M. அமலதாஸ் (1956-1960): ஆண்கள், பெண்கள் பள்ளிக்கூடத்தை 1956 ஆம் ஆண்டு ஒன்றாக இணைத்தார். பங்கு கிணற்றுக்கு மின்மோட்டார் அமைத்தார்.
அருட்தந்தை. A. முத்துசுவாமிநாதர் (1960-1961):
அருட்தந்தை. ஜான் சேவியர் (1961-1966): ஆலய முன்முகப்பு புதுப்பிக்கப்பட்டு 1962 ஆம் ஆண்டு ஆலய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. உத்திரிய மாதா ஆலயம் என்ற பெயர் மாற்றப்பட்டு, ஆரோபண அன்னை ஆலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆலய பீடத்தையும் மாற்றி அமைத்தார். மும்பை வாழ் பள்ளபாளையம் மக்களின் நிதியுதவியுடன் கொடிமரம் நிறுவப்பட்டது.
அருட்தந்தை. பாப்புநாதர் (1966-1967):
அருட்தந்தை. சிலுவைநாதர் (1967-1969):
அருட்தந்தை. A. ஜார்ஜ் (1969-1972):
அருட்தந்தை. ஜோசப் (1972-1976): பங்கின் பழைய ஏடுகளை புதுப்பித்தார். கடும் பஞ்சம் நிலவி போது பங்கு மக்கள் பட்டினியால் அவதிப்படாமல் பாதுகாத்தார்.
அருட்தந்தை. பிரான்சிஸ் ஜோசப் (1976-1977):
அருட்தந்தை. ஜோ. M. அடைக்கலம் (1977-1981): இவர் சோமனூர் பங்கின் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
அருட்தந்தை. P. இருதய சாமி (1981-1982): அருட்தந்தை. லூர்து இருதயராஜ், அருட்தந்தை. தோமினிக், அருட்தந்தை. ஜோசப் தனராஜ் ஆகியோரை துணையாக வைத்துக் கொண்டு பங்கை சிறப்பாக பணியாற்றினார்.
அருட்தந்தை. லூர்து (1982-1985): கிணற்றில் சைடு போரிங் செய்து தண்ணீர் காணச் செய்து மக்களை மகிழ்வித்தார். 1981 முதல் 1985 வரை அருட்தந்தை. ஜோசப் தனராஜ், அருட்தந்தை. தோமினிக், அருட்தந்தை. லூர்து இருதயராஜ், அருட்தந்தை. லூயிஸ் மரியபாப்பு, அருட்தந்தை. ஆர்.டி.இ. ஜெரோம் ஆகியோரை உதவிப் பங்குத்தந்தையர்களாகக் கொண்டு பணியாற்றினார்.
அருட்தந்தை. சதானந்த அடிகளார் (1985-1987):
அருட்தந்தை. தோமினிக் (1987-1993):
பங்கின் 125 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
ஆலயத்தில் மொசைக் தளம், கிரானைட் பீடம், வெளித்திடல் மேடை, கம்பீர நுழைவாயில், தூய ஆரோக்கிய மாதா கெபி ஆகியன சிறப்புற அமைக்கப்பட்டன.
பங்கு மக்களின் நிதி பங்களிப்புகளுடன் ஜூபிலி ஹால் கட்டப்பட்டது. மடத்து தோட்டத்தில் புனித அன்னாள் மருத்துவமனை கட்டப்பட்டது.
ஜூபிலி ஹால், காணிக்கை அன்னை சபை கன்னிர்களின் இல்லமாக மாற்றப் பட்டது. கிளைப் பங்கான பூமலூரில் புனித அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டது.
அருட்தந்தை. மரிய அல்போன்ஸ் (1993-1998):
தூய மரியன்னை மக்கள் மன்றத்திற்கு (S.M.C.H) மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் 08.09.1996 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் நிதிபங்களிப்புடன் கட்டப்பட்டு, 02.05.1997 அன்று மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அருட்தந்தை. பீட்டர் அடைக்கலம் (1998-2002):
ஆலய விரிவாக்கத்திற்கு 19.08.2000 அன்று மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஆலய திருப்பணி குழுவினரின் உதவியுடன், அழகிய ஆலயம் கட்டப்பட்டு 24.05.2002 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்தந்தை. மரியநாதர் (2002-2003): அறைவீட்டை புதுப்பித்தார்.
அருட்தந்தை. K. P. வின்சென்ட் (2003-2004)
அருட்தந்தை. ஜாய் ஜெயசீலன் (2004-2006): வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டது. கல்லறைத் தோட்டத்திற்கு மதிற்சுவர் அமைக்கப்பட்டு, கல்லறைக் கோயில் கட்டப்பட்டது. ஆலய வளாகத்தில் உள்ள புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளிக்கான புதிய கட்டிடம் அமையப் பெற்று, 07.01.2005 அன்று திறக்கப்பட்டது.
அருட்தந்தை. பால் சகாயராஜ் (2006-2010): பாடல் திருப்பலி நிறைவேற்றி, மக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப் படுத்தினார்.
அருட்தந்தை. அருள் உபகாரம் (2010-2013):
பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு 07.05.2011 அன்று மேதகு ஆயர் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. 150 ஆம் ஆண்டு ஜூபிலி நினைவாக ஆலய வளாகத்தின் சுற்றுச்சுவர் புதிதாக கட்டப்பட்டது. ஆலய முன்பகுதியில் புதிய விரிவாக்க மண்டபம், பீடம் புனரமைப்பு, ஆலயத்தைச் சுற்றி பேவர்ஸ் சிமெண்ட் கற்கள் அமைத்து, ஆலயத்திற்கு வர்ணம் பூசி மே மாதம் 25,26,27 ஆகிய தேதிகளில் 150 -வது ஆண்டு விழா ஜூபிலி சிறப்பாக கொண்டாடப் பட்டது.
அருட்தந்தை. இருதயராஜ் (2013-2018)
23.02.2014 அன்று புனித லூர்து அன்னைக்கு விழா எடுத்து, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் ஊரைச் சுற்றி லூர்து அன்னை சுரூபம் ஆடம்பரமாக பவனியாக எடுத்து வரப்பட்டது. இதன் நினைவாக ஜெபமலர் வெளியிடப்பட்டது.
முதல் வெள்ளிக்கிழமை இறைஇரக்க ஆண்டவர் பக்தி, முதல் சனிக்கிழமை ஆரோக்கிய மாதா கெபியில் நவநாள் திருப்பலி, அக்டோபர் மாதம் மாதாவுக்கு மகிமையாக, ஒவ்வொரு வீதியிலும் ஜெபமாலை ஜெபித்தல், நவம்பர் மாதத்தில் திங்கள் தோறும் கல்லறையில் ஆன்மாக்களுக்கு திருப்பலி என பல்வேறு பக்தி முயற்சிகளை மேற்கொண்டார்.
திருஇருதய சபைக்கு 125 ஆம் ஆண்டு ஜூபிலி 03.07.2016 அன்று கொண்டாடப்பட்டு, இதன் நினைவாக ஜெபமலர் வெளியிடப்பட்டது. பங்கு காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது. 52 வருடங்களாக குத்தகைக்கு விடப்பட்டு இருந்த 2 ஏக்கர் பூமியானது திரும்ப பெறப்பட்டு, மேதகு ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அருட்தந்தை. லூயிஸ் கனகராஜ் (2018-2021)
ஆலயம் மற்றும் தரை சீரமைப்பு பணிகளைச் செய்து. கொரோனா பெருந்தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார்.
அருட்தந்தை. குழந்தை சாமி (2021 முதல் தற்போது வரை.....)
பங்கின் முப்பெரும் விழாவை 22.05.2022 அன்று சிறப்புற கொண்டாட வழிவகுத்தார்.
அடைக்கல மாதா சிற்றாலயத்தை புதுப்பித்து 15.05.2022 அன்று மாலையில் திருப்பலி நிறைவேற்றி, மக்களின் ஆன்மீக பயணத்திற்கு உதவி புரிந்தார்.
பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள்:
1. திருஇருதய சபை
2. மரியாயின் சேனை
பங்கில் உள்ள நிறுவனங்கள்:
1. புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி
2. அன்னாள் மருத்துவமனை
3. SMCH திருமண மண்டபம்
பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லங்கள்:
1. புனித காணிக்கை அன்னை சபை கன்னியர் இல்லம்
2. புனித அன்னாள் சபை கன்னியர் இல்லம் (Luzern)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. குழந்தை சாமி அவர்களின் வழிகாட்டலில், அருட்சகோதரி. சாரா, FSPM அவர்கள்.