புனித ஆசிர்வாதப்பர் ஆலயம்
இடம்: புத்தாநத்தம்
மாவட்டம்: திருச்சி
மறைமாவட்டம்: திருச்சி
மறை வட்டம்: மணப்பாறை
நிலை: பங்கு
கிளைப் பங்குகள்:
1. புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளையகவுண்டன்பட்டி
2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பொன்னுசங்கம்பட்டி
3. புனித செபஸ்தியார் அன்பியம், இடையப்பட்டி (ஆலயம் இல்லை)
4. புனித பிரான்சிஸ் அசிசியார் அன்பியம், சின்னகவுண்டன்பட்டி (ஆலயம் இல்லை)
5. புனித வேளாங்கண்ணி மாதா அன்பியம், மெய்யம்பட்டி (ஆலயம் இல்லை)
6. புனித அந்தோணியார் அன்பியம், கருமலைகவுண்டன்பட்டி (ஆலயம் இல்லை)
பங்குத்தந்தை அருட்பணி. K. அமல்ராஜ், SMM
குடும்பங்கள்: 68
அன்பியங்கள்: 6
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 07:30 மணி ஆராதனை, காலை 08:00 மணி திருப்பலி
நாள்தோறும் திருப்பலி: காலை 07:00 மணி
மாதத்தின் நவநாள்:
1.) முதல் சனிக்கிழமை மாலை 06:30மணி புனித ஆரோக்கிய அன்னை கெபி வளாகம்
2.) மாதத்தின் 11-ஆம் தேதி மாலை 06:30 மணி புனித ஆசிர்வாதப்பர், தேர்பவனி மற்றும் குணமளிக்கும் ஆராதனை
திருவிழா:
1.) ஜூலை மாதம் 11-ஆம் தேதி ( பங்கு ஆலயம்)
2.) செப்டம்பர் மாதம் 8- ஆம் தேதி பொன்னுசங்கம்பட்டி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
3.) செப்டம்பர் மாதம் 14 - ஆம் தேதி வெள்ளை கவுண்டன்பட்டி புனித வியாகுல வியாகுல அன்னை ஆலய திருவிழா
வரலாறு:
புனித ஆசிர்வாதப்பர் ஆலயமானது ஏறக்குறைய 1910- ஆம் ஆண்டிலிருந்து புனித ஆசிர்வாதப்பரின் திருநாமத்தில் திரு. சின்னப்பன் அவர்களுடைய குடும்பத்தினரால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. நாளடைவில் ஒரு சில கத்தோலிக்க குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய ஆன்மீக காரியங்களை வெளிப்படுத்தியதின் காரணத்தினால், அருகாமையில் இருக்கின்ற பங்கு பணியாளர்கள் முக்கியமாக மலையடிப்பட்டி, மணப்பாறை, பாலக்குறிச்சி, துவரங்குறிச்சி பங்கு பணியாளர்கள் புத்தாநத்தம் மக்களை வழிநடத்தி வந்தனர்.
அருட்பணி. பத்திநாதர் அவர்கள் தன்னுடைய பணி ஓய்வு காலத்தை புத்தாநத்தம் ஆலயத்தில் தங்கி, இங்குள்ள மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தார். மக்களின் ஆர்வத்தையும், வளர்ச்சியையும் பார்த்து மக்களுக்காக தற்போதைய ஆலய கட்டுமான பணிகளை சுமார் மூன்று வருடங்களில் கட்டி எழுப்பி, மேதகு ஆயர் கபிரியேல் D.D அவர்களால் 26.10.1994 அன்று அர்ச்சிக்கப்பட்டு, அதன் பிறகு அனைத்து ஆன்மீக காரியங்களுக்கும் ஆலயமானது பயன்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு அருட்தந்தை. பத்திநாதர் அவர்கள் விண்ணகம் சேர்ந்தார்.
அதன் பிறகு துவரங்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியராஜ் அவர்கள் சுமார் இரண்டு வருடங்களாக திருவருட்சாதனங்களை நிறைவேற்றி வந்தார். அதன் பிறகு,
10.06. 2012 அன்று புனித ஆசிர்வாதப்பர் ஆலயமானது, சிறிய பங்கு ஆலயமாக உயர்த்தப்பட்டு, மாண்ட்போர்ட் குருக்கள் சபைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, மேதகு ஆயர். அந்தோணி டிவோட்டா D.D அவர்களால் பங்கின் முதல் பணியாளராக அருட்பணி. சேசுராஜ், SMM அவர்களை நியமித்து பங்கு பொறுப்புகள் ஒப்படைத்தார்.
அருட்பணி. சேசுராஜ் அவர்கள் வீடுகளை சந்தித்து, தன்னுடைய ஆன்மீகப் பணியை மக்களோடு மக்களாக தங்கி, கல்வி, சிறப்பு குழுக்கள், ஆலயம் சீரமைப்புப் பணி போன்ற பல பணிகளை தொடங்கி நான்கு வருட காலங்கள் சிறப்புற பணிபுரிந்தார்.
அதன்பிறகு, பங்கு பொறுப்பை ஏற்றுக் கொண்ட அருட்பணி. மோசஸ், SMM அவர்கள் ஒரு வருட காலத்தில் ஆலய புதுப்பித்தல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, ஆலய தோற்றத்தை மாற்றினார். மேலும் ஆன்மீக காரியங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து அருட்பணி. ஜான் லாரன்ஸ், SMM அவர்கள் நான்கு வருட காலமாக பணியாற்றினார். முக்கியமாக பங்கு பணியாளர்கள் இல்லத்தை புதுப்பித்தார். அவர் பணியின் முடிவாக ஆலய கெபி வேலையை தொடங்கி வைத்தார்.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. K. அமல்ராஜ், SMM அவர்கள், முன்னாள் பங்குத்தந்தையர்கள் செய்த பணிகளை தொடர்ந்து செய்து மேலுமாக பங்கு நவநாள், மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்னை மரியாளின் கெபி முன்பாக சிறப்பு உபய திருப்பலி, வெவ்வேறு விதமான குழுக்கள் மற்றும் செயல்பாடுகளை துவக்கி வைத்து மக்களை ஆன்மிக வழிகளில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்.
ஆலயத்தின் வெள்ளி விழாவானது 11.09.2022 ஆம் அன்று திருச்சி மறைமாவட்ட மேதகு ஆயர். ஆரோக்கியராஜ் DD. அவர்களின் தலைமையில் மற்றும் மான்ஃபோர்ட் சபை மாநிலத் தலைவர்கள் மற்றும் இதர குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் மத்தியில் திருவிழா திருப்பலி மற்றும் புதிய கெபி மணிக்கூண்டு திறப்பு விழாவும் நடைபெற்றது.
மேலும் திருச்சபையின் விழாக்கள், அன்னை மரியாளின் விழாக்கள், புனிதர்களின் விழாக்களும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்கின் சிறப்பு பணியாக வீடு சந்திப்பு, அன்பிய சந்திப்பு, கிளைப் பங்குகளில் திருப்பலி, ஞாயிறு மறைக்கல்வி, விளையாட்டு போட்டிகள், கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகள், கிறிஸ்துமஸ் நாட்களில் வீட்டிற்கு ஒரு பாடல் என்று கிறிஸ்து பிறப்பு விழா நற்செய்தி அறிவிப்பு, தவக்காலத்தில் வீட்டிற்கு ஒரு ஸ்தலம் ( நிலை) என்று சிலுவைப் பாதையும், ஈஸ்டர் காலத்தில் வீடு மந்திரித்தல், கோடைகால விவிலிய பள்ளி வகுப்புகள் ( VBS) போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுயிறுக்கிறது.
சிறிய பங்காக இருந்தாலும் சிறப்புற ஈர்க்கும் இதன் செயல் வடிவம்! தோற்றம் எளிமையாக இருந்தாலும் அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஆன்மிகம், கிறிஸ்துவ குடும்பங்கள் குறைவாக இருந்தாலும் மனநிறைவோடு வாழ தூண்டும் ஆண்டவரின் பிரசன்னம், அன்னை மரியாளின் ஜெபம் மற்றும் புனித ஆசிர்வாதப்பரின் அற்புதம் என சிறப்பு பெற்று விளங்குகிறது புத்தநத்தம் புனித ஆசீர்வாதப்பர் ஆலயம்.
பங்கு பணியாளர்கள்:
அருட்பணி. பத்திநாதர்
அருட்பணி. சேசுராஜ், SMM
(முதல் பங்குத்தந்தை)
அருட்பணி.மோசஸ், SMM
அருட்பணி. ஜான் லாரன்ஸ், SMM
அருட்பணி. K. அமல்ராஜ், SMM
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
பங்குப்பேரவை
Rosary Boys
Gospel Girls
Benedict Youth
மரியாயின் சேனை
பாடகர் குழு
புனித வின்சென்ட் தே பவுல் சபை
பீடப்பணியாளர்கள்
வழித்தடம்: மணப்பாறை -துவரங்குறிச்சி வழித்தடத்தில் புத்தாநத்தம் அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/18ZZLc
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. K. அமல்ராஜ், SMM அவர்கள்.




