இயேசு ஆரம்பித்தது ஒரே ஒரு திருச்சபை. அதுவும் கத்தொலிக்கத்திருச்சபை. அந்த திருச்சபை போப் ஆண்டவரிலிருந்து நாடுகள், மறைமாவட்டங்கள், பங்குகள் மற்றும் துணைப்பங்குகள் வரை அது இனைக்கப்பட்டுள்ளது. அது ஒரே திருச்சபையாக திகழ்ந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் பங்கு மக்களை ஆன்மீக காரியங்களில் வழிகாட்ட பங்குத்தந்தையை தாய்திருச்சபை நியமித்துள்ளது. ஆலயங்களில் நாள்தோறும் திருப்பலிகள், ஜெபமாலைகள் நடைபெற்றுவருகின்றன. இயேசு நம் தாய் திருச்சபையைத்தவிர எதையுமே ஆரம்பிக்கவில்லை. புனித சின்னப்பர் (புனித பவுல்) தனியாக நற்செய்தி அறிவித்தபோது கூட இயேசு அவரை புனித ராயப்பரிடம் சென்று அவர் பணியை ரிப்போர்ட் செய்ய சொல்கிறார்.
இப்போது பார்த்தால் ஒரு ஊருக்கு குறைந்தது ஐந்து தியான மையங்களாவது இருக்கிறது. இப்படியே சென்றால் தெருவுக்கு ஒன்று, எத்தனை அன்பியங்கள் இருக்கிறதோ அத்தனை தியான மையங்கள் வந்துவிடும். பல இடங்களில் கத்தொலிக்க குருக்களே தியானமையங்கள் நடத்தி வருகின்றனர்.
இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது தெறியுமா? மக்கள் ஆலயம் செல்வது குறைந்து வருகிறது. தேவ திரவிய அனுமானங்களை பெறுவது குறைந்து வருகிறது. அதே வேளை செண்டர்களை தேடிச்செல்பவர்கள் கூட்டம் கூடி வருகிறது.
ஏன் செண்டர்களின் பெயர்களையும், அவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் பார்த்தால் அப்படியே டிட்டோ (-do-) பிரிவினை சபை போன்றே இருக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம். மாதாவின் போட்டோ இடம்பெறுகிறது. மாதாவின் பெயரையும், ஜெபமாலையையும் உபயோகித்தால் தான் மக்கள் வருவார்கள். அதுதான் அவர்களுக்கு அடையாளம்.
இதை பார்க்கும்போது பிரிவினை சபையினரின் ஜெபவழிபாட்டிற்கு நாம் அடிமையாகிவிட்டது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்களைப்போலவே ஜெபிக்க வேண்டும் என்ற ஜெபபோதை. மயக்கம் ஏன் ?
பங்கு ஆலயங்களில் அன்றாட திருப்பலி வழிபாட்டையும் மாலை ஜெபமாலையும் ஏன் ஏற்படுத்தியது நம் தாய் திருச்சபை?. “ அவர் ஜெபித்தால் நடக்கிறதாம். இவர் ஜெபித்தால் நடக்கிறதாம் “ என்கிறார்கள். அப்படியென்றால் திருப்பலி என்ன ஜெபம். திருப்பலி என்றால் என்ன? திருப்பலியில் ஜெபிக்கப்படும் உயிருள்ள ஜெபங்களின் பரிபூரன பலன்களில் நமக்கு பங்கு வேண்டாமா?
ஏன் இப்படி ஓடுகிறார்கள். கத்தி கூப்பாடு போட்டு அன்னிய பாசைகள் பேசித்தான் ஜெபிக்க வேண்டுமா?
என்ன பைத்தியமா பிடித்து விட்டது? மீண்டும் மீண்டும் சொல்கிறோம். மாதாவின் படத்தை போட்டாலோ, ஒப்புக்கு ஜெபமாலை செய்தாலோ நம்பிவிடாதீர்கள். நம்பி பின்னால் போய்விடாதீர்கள். பங்கு ஆலயம் இருக்கையில் அதே பங்கில் ஏன் செனடர் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் ?
கொஞ்சம் கொஞ்சமாக கத்தொலிக்த்தின் புனிதம், பாரம்பரியம் ஏன் கத்தொலிக்கமே அழிக்கப்பட்டு வருகிறது. அது Slow Poison ஆக இருப்பதால் அது நிறைய பேருக்குத்தெறிவதில்லை. கடைசியில் தெறிந்து எந்தப்பயனும் இல்லை.
(இது குறித்து அடுத்த கட்டுரையில் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்)
நம்மவர்களே இந்தக் கருத்தை எதிர்க்கத்தாயார் ஆனால் ஏற்கத்தயாரில்லை. நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் பார்க்கும் நேரமில்லை இது. எது உண்மை; எது சத்தியம்; என்பதை உணரவேண்டியது காலத்தின் கட்டாயம். திருப்பலியின் மகிமை குன்றிக்கொண்டேபோகிறது.
எங்குபார்த்தாலும் புற்றீசல் போல் தியானமையங்கள் பின் அதற்கு கட்டங்கள் எழும்புகிறது. அப்படியானால் பங்கு எதற்கு ? பங்கு ஆலயம் எதற்கு? ஆலயத்தை இழுத்து மூடிவிடுங்கள். தியான இல்லங்கள் என்ற பெயரில் கத்தொலிக்கத்தை துண்டு துண்டாக்கி இஷ்ட்டம்போல் சட்டம் இயற்றி, உங்கள் சவுகரீகத்திற்காக எல்லாவற்றையும் மாற்றிவிடுங்கள்.
கத்தொலிக்கத்தின் குட்டித்திருச்சபை என்ன தெறியுமா ? அது தான் குடும்பங்கள். குடும்பங்கள் வரை திருச்சபையாக அங்கீகரித்த கத்தொலிக்க தாய் திருச்சபை ஆளுக்கொரு தியான இல்லங்களை கட்டி மக்களை திசை திருப்புவதை ஒருபோதும் அங்கீகரிக்காது; மன்னிக்காது.
இனி உங்கள் இஷ்டம்.