திருவெளிப்பாடு பரிசுத்த வேதாகம் பகுதி-10

கத்தொலிக்கர்கர்களுக்கு இப்போதைய சூழ்நிலையில் திருவெளிப்பாடு-12 மிக முக்கியமானது. ஆதியாகமம் 3:15 ல் தோன்றிய தேவமாதாவுக்கும், அலகைக்கும் உண்டான பகை (“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் " என்றார்) திருவெளிப்பாட்டில் தொடர்கிறது.

ஒரு கவிஞன் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது “ ஆதியும் அந்தமும் அவள்தான்; நம்மை ஆளும் நீதியும் அவள்தான் “

மாதாவைக் கடவுள் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள் “அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.

இதைவிட மாதாவின் தூய்மைக்கும், அவர்களின் அமல உற்பவ சத்தியத்திற்கும் சான்று தேவையில்லை. உச்சி வெயிலில் கதிரவனை நம்மால் பார்க்கக்கூட முடிவதில்லை.

அதே கதிரவனை ஆடையாக அணிவது என்றால் அது எப்பேர்பட்ட பரிசுத்தம், தூய்மை, துணிச்சல். மாதாவிற்கு நிகர் மாதாதான். மாதா பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தார்கள். அவற்றில் மூன்றில் ஒரு பகுதியை அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அரக்கப்பாம்பு இழுத்துப்போட்டது. அந்த மூன்றில் ஒரு விண்மீன்கள் எது ? அவர்கள்தான் கத்தொலிக்கத்தைவிட்டு வெளியே சென்ற முன்னால் கத்தொலிக்கர்கள். அதாவது பிரிவினை சபையினர். இழுத்து போட்டவன் யார்? பறவை நாகம் எனப்படும் சாத்தான். இப்போது அவர்கள் யார் மக்கள்? சரி அது ஒருபுறமிருக்கட்டும்

பின்பு போர் நடக்கிறது. அதில் மனுமகன் வெற்றி பெறுகிறார். எதிரியும் அதன் தூதர்களும் வெளியே தள்ளப்பட்டனர். இப்போது யாருக்கும் யாரும் சண்டை நடக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

திருவெளிப்பாடு தொடர்கிறது.

விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.

அவள் கருவுற்றிருந்தாள்; பேறுகால வேதனைப் பட்டுக் கடுந்துயருடன் கதறினாள்.

வேறொரு அறிகுறியும் விண்ணகத்தில் தோன்றியது. இதோ நெருப்பு மயமான ஒரு பெரிய பறவைநாகம் காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. தலைகளிலே ஏழு முடிகள் இருந்தன.

தன் வாலால் விண்மீன்களில் மூன்றிலொரு பகுதியை மண்மீது இழுத்துப்போட்டது. பேறு காலமான அப்பெண்முன் பறவைநாகம் நின்றது; அவள் பிள்ளையைப் பெற்றவுடன்.

அதனை விழுங்கிவிடக்காத்திருந்தது.

எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஓர் ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணையுள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பெண் பாலைவனத்திற்கு ஓடிப்போனாள்.

அங்கே ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் அவளைப் பேணும்படி கடவுள் ஓரிடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின் விண்ணகத்தில் ஒரு போர் உண்டாயிற்று. மிக்கேலும் அவருடைய தூதர்களும் பறவைநாகத்தோடு போர் தொடுத்தனர். பறவைநாகமும் அதன் தூதர்களும் போரிட்டனர்.

பறவைநாகமும் தோல்வியுற்றது. விண்ணகத்தில் அவர்களுக்கு இடமேயில்லாமல் போயிற்று. அப்பெரிய பறவைநாகம் வெளியே தள்ளப்பட்டது.

அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அதுவே ஆதியில் தோன்றிய பாம்பு; உலகனைத்தையும் வஞ்சிப்பதும் அதுவே. அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் அதன் தூதர்களும் தள்ளப்பட்டனர்.

திருவெளிப்பாடு 12 : 1-9