தேவமாதா

பிள்ளை தன் தாயை மறந்தாலும் தாய் ஒரு போதும் தன் பிள்ளையை மறப்பது கிடையாது. தேவமாதா ஒருவரே நம் எல்லோரையும் மோட்சம் அழைத்து செல்ல ஒரே வழியாக இருக்கிறார். ஏனெனில் அவர் தான் வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாக இருக்கிறார். சேசு நாதர் தம் தாயின் மூலமாக வரப்பிரசாதங்களை நமக்கு தருகிறார்.

தேவதாயை நாம் மறப்பதினால் தான் நாம் வெகு எளிதாக பாவம் கட்டிக் கொள்கிறோம். இன்று திருச்சபையில் தேவமாதா மீதான பக்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அனைவரும் பிரிவினைகாரர்களைப் போல் பைபிள் மூலமாக நாம் இரட்சிக்கப் படுவோம் என்று சொல்லுகிறார்கள். அன்பியம், போன்ற கூட்டங்களில் அனைவரும் சேர்த்து பைபிளை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் கூட்டங்களில் செபமாலை சொல்லுவது இல்லை.

ஒரு முறை ஞான தூதன் பத்திரிக்கையை வாசிக்க நேர்ந்தது. அதில் ஒரு பெண் எழுதி இருந்தது. "கோவிலில் தான் செபமாலை சொல்லுகிறார்களே ஏன் அன்பிய கூட்டங்களிலும் சொல்ல வேண்டும்." இத்தகைய அன்பிய கூட்டங்களினால் கோவிலில் செபமாலை சொல்லுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது வரக் கூடிய கத்தோலிக்க பத்திரிக்கைகள் எல்லாமே உலகம் சார்ந்த பத்திரிக்கைகளாகவே இருக்கின்றன. நம்முடைய ஞான வாழ்வுக்கு தேவையான எதையும் அவைகள் சொல்லுவதில்லை.

இப்போதைய காலகட்டத்தில் நமது தேவ அன்னையின் உதவி எவ்வளவு அவசியம் என்பதை உணரவும் அன்னை எவ்வளவு முக்கியம் என்பதை உலகுக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

தினம் ஜெபம் செய்வோம்; தினம் ஜெபமாலை சொல்வோம்.

நன்றி : திரு.ராபின் லூர்து