இன்றைய காலகட்டங்களில் நம் ஆன்மாக்களை பாவத்திலிருந்து பாதுகாப்பது உண்மையிலேய சவாலான விசயம். ஆனால் கண்டிப்பாக பாதுகாத்துதான் ஆக வேண்டும்.

மது என்னும் சாத்தான் ஆன்மாக்களை வேகமாக நரகத்தில் தள்ளி வருகிறான்; என்றால் அவனை விட அசுர வேகத்தில் ஆன்மாக்களை நரகத்தில் தள்ளுபவன். ஆபாசங்கள் என்னும் வலை விரித்து அமர்ந்திருக்கும் விபச்சார சாத்தான். இவன் வலைத்தளங்களில் 1000க்கும் அதிகமான வலைகளை விரித்தும், சினிமா, சின்னத்திரைகளில் பல வலைகளை விரித்தும் உட்கார்ந்து இருக்கிறான்.

இந்த சாத்தான் எந்த அளவுக்கு கொடூரமானவன் என்றால் நல்ல படங்கள் நல்ல விசயங்களை கூகுளில் தேடினாலும் அங்கும் தீமையை ஆபாசம் என்ற கண்ணி வைத்துகாத்துக்கொண்டிருக்கிறான். இந்தக்கேட்டிலிந்து ஆன்மாக்களை எப்படி காப்பாற்றுவது..

ஜெப தவங்கள் அதிகம் தேவை. ஜெபங்கள் நம்மோடே இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசின் ஜெபங்களை நாம் தினமும் சொல்லவேண்டும்.காவல் தூதரின் ஜெபங்கள்; பரிசுத்த ஆவியானவரின் ஜெபங்கள் மேலும் ஜெபமாலை ஒரு 53 மணியாவது தினமும் சொல்லப்பட வெண்டும்.

ஜெபமாலை மற்றும் உத்தரிய பக்தியினால் இத்தகைய மோசமான எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இது ஒருபுறமிருக்க பெற்றோர்களின் கடமை அவர்கள் பிள்ளைகள் விசயத்தில் மிகவும் இன்றியமையாதது. தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது சிறு வயதிலிருந்தே கடவுளைப்பற்றிய ஞானத்தோடு வளர்க்க வேண்டும். பைபிள் கதைகள், புனிதர்கள் வரலாறு, மோட்சம், நரகம்,பற்றியெல்லாம் சொல்லிக்கொடுக்கவேண்டும். பாவம் பற்றிய விளிப்புணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்.

விசுவாசம், தெய்வபயத்தோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். இது தவிர படிப்பு விசயத்தில் எப்போதுமே “ படி படி “ என்று டார்ச்சர் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு புரியவைத்து அவர்களாகவே படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். எத்தனையோ திறமைகளை கற்றுக்கொடுக்கிறீர்கள். அதோடு எத்தனை திறமைகள் தன்னம்பிக்கை, சோதனைகளை எதிர்கொள்ளும் திறன், ஆளுமைத்தன்மை எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்மீகம் அதாவது இறைவன் இயேசுவோடு ஒன்றித்து வாழ்தல்.

கீழ்படிதல் உள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். கர்வம், ஆணவம் உள்ள பிள்ளைகளாக வளர்த்துவிடக்கூடாது. நற்பண்புகள், தனி மனித ஒழுக்கம், உதவி செய்யும் மனப்பான்மை இவைகளும் நம் குழந்தைகளுக்கு இன்றியமையாத பண்புகள் ஆவன.

தடுமாற தடம்பிரள எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. எதிரி நம் வீட்டிற்கு உள்ளே வந்து எட்டிப்பார்க்கிறான். அவனின் கண்ணி எங்கு இருக்கிறது என்று தெறியவில்லை. நம் கனினியிலும் கூட இருக்கலாம். கவணம்.. கவணம்.. எச்சரிக்கை...எச்சரிக்கை..

அவனிடம் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஜெபம், தவம், பரிகாரம் இருந்தால்தான் தாக்குபிடிக்க முடியும்...

வேறு ஒரு கட்டுரையில் சொல்லியதையே.. மீண்டும் சொல்கிறோம். விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்கள்... ஆன்மீக விசயத்தில் குறைட்டை விடுபவர்கள் கோட்டை விட்டவர்களாவார்கள்..

ஆபாசங்கள், அசிங்கங்கள், கற்புக்கு எதிரான பாவத்தில் வீழ்ந்து கிடப்பது சாவான பாவங்கள்..விழுந்தவர்கள் உடனே நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து இயேசுவிடம் விரைந்து வர வேண்டும். பார்டரில் இருப்பவர்கள் மற்றும் அவைகளிலிருந்து விலகி நல்லவர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து ஜெபத்தில் இருத்தல் அவசியம்.

நம் ஆன்மாவை இயேசுவின் சிலுவை மரத்தில் வைத்து கட்டிவிட வேண்டும்.அவர் திருஇரத்தம் நம்மை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும்.

இயேசுவின் இரத்தம் ஜெயம்; இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !