“ஒரு முறை பாடுதல் நான்கு முறை ஜெபிப்பதற்கு சமம்” உங்கள் பணி மகத்தான பணி.. உங்கள் இசையும் பாடலும் பரலோக யாழிசைக்கு சமம். நீங்கள் ஒவ்வொரு திருப்பலியிலும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்பது நிதர்சமான உண்மை..
இப்போது ஒரு சில வேண்டுகோள்கள்..
1. முக்கியமான பாடல்களில் அதுவும் திருப்பலிக்கு வந்திருக்கும் அனைத்து மக்களும் ஆர்வத்தோடு பாடும் பாடல்களின் மெட்டுக்களை தயவு செய்து மாற்றாதீர்கள்.. அப்போது என்ன நடக்கிறது? உங்களுடைய புதிய ராகம் அவர்களுக்குத் தெரியாததால் உங்களைத் தவிர இறைமக்கள் யாரும் பாடுவதில்லை.. உங்களால் அவர்கள் பாடுவது தடைசெய்யப்படுகிறது.. குறிப்பாக “ ஆண்டவரே இரக்கமாயிரும், உன்னதங்களிலே, பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, தூயவர் கீதம் போன்ற பாடல்கள். ஆசீர்வாதத்தில் “ மான்புயர் கீதம் “. நித்திய ஸ்திக்குரிய பாடல்கள்.
2. வருகைப்பாடல், பதிலுரைப்பாடல், காணிக்கைப்பாடல், திருவிருந்துப்பாடல், நன்றிப்பாடல் அதிலெல்லாம் பின்னியெடுங்கள் உங்களை யார் கேட்கிறது.. சரிகமபதனிச எல்லாம் சேருங்கள்.. ஆனால் எல்லாரும் பாடும் வழிபாட்டுப்பொது பாடல்களிலும் சரிகமபதனிச- வை சேர்த்த்தால் நாங்கள் எப்படிப்பாடுவது.. கண்டிப்பாக நாங்கள் உங்கள் அளவுக்கு திறமைசாலிகள் அல்ல..
3. இசை இசைப்போரின் கரங்கள் சும்மாவே இருக்காது. குருவானவர் “இவர் வழியாக… இவரோடு.. இவரில் பாடும்போது அப்போதான் பின்னனி இசைகொடுப்பார்.. இது மிகவும் தவறானது.. ஆண்டவருக்கு செய்யும் அவசங்கை.. இது திருப்பலி ஒழுங்கிற்கு எதிரானது. மேலும் மக்கள் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருக்கும்போது இசைக்கருவியை சரி செய்வார்.. அது ஜெபமாலையின் இடையே மக்களின் கவனத்தை திசை திருப்பி விநோத இசையை எழுப்புவார்..
4. இப்போது நிறைய ஆலயங்களில் “ இவர் வழியாக.. இவரோடு..இவரில்" குருக்களோடு மக்களும் சேர்ந்து பாடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. சில இடங்களில் குருக்களே மக்களை பாடுமாறு சொல்கிறார்கள்.. இதுவும் திருப்பலி ஒழுங்குமுறைக்கு எதிரானது..
5. இறுதியாக ஒரே ஒரு வேண்டுகோள் நம் பழைய பாரம்பரிய பாடல்களை முற்றிலும் ஒதுக்கிவிடாதீர்கள்.. அவற்றில் ஒன்றிரண்டு பாடல்களையாவது சேர்த்து திருப்பலியில் பாடுங்கள்..
6. ஒரு நினைவூட்டல் ஒரு சில பாடல்கள் “வரம் கேட்டு வருகின்றேன் இறைவா”, “ நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ, தெய்வீக அன்பால்தானோ”, பலி பீடத்தில் வைத்தேன் என்னை, மனம் தரும் மலரில், செம்மரியின் விருந்துக்கு, மாதாவே துணை நீரே உம்மை, மாதாவே சரணம், இயேசுவே என்னிடம் நீ பேசு, உம் திருயாழில், சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, யாரிடம் செல்வோம் இறைவா, அன்பின் தேவ நற்கருணையிலே, நற்கருணை நாதரே… இன்னும் நீங்கள் யோசித்துப்பார்க்கும் பாடல்கள்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !