புனிதர்கள் பக்திக்கு இலக்கணம் தேவை!

நாம் புனிதர்கள் மேல் வைத்திருக்கும் பக்தி ஒரு வரையரைக்குள் இருக்க வேண்டும் இல்லையென்றால் அது அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய அவசங்கையாகிவிடும். அதில் மிக மிக கவனம் தேவை..

ஒரு முகநூலைப் பார்க்க நேர்ந்தது.. அந்த முகநூலின் பெயர்..

சூப்பர்ஸ்டார்அந்தோணிஹீரோஹீரோ சூப்பர்ஸ்டார்அந்தோணிஹீரோஹீரோ

இதை அந்தோணியார் பார்த்தால் என்ன நினைப்பார்; அந்த நபரை என்ன செய்வார்…?

நிறைய இடங்களில் ஊர்களில் புனிதர்கள் பக்தி எப்படி இருக்கிறது…?

1. ஆண்டவர் இயேசுவை மறந்துவிட்டு எனக்கு எல்லாமே புனிதர்தான் என்று வாழ்வது.

2. புனிதரை வெறும் காரிய பக்திக்காக மட்டும் பயன்படுத்துவது. எனக்கு அது வேண்டும். இது வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும். குழந்தை வரம் கிடைக்க வேண்டும்.

3. புனிதர் இயேசு சுவாமியை கண்டுகொண்டு அவருக்காக வாழ்ந்த வாழ்க்கையை, வாழ்க்கைப்பாதையை பின் செல்லாமல் அவரை ஒரு குறிப்பிட்ட வேண்டுதல்களுக்காக மட்டும் பயன்படுத்துவது.. உதாரணமாக அந்தோணியார் காணமல் போன சாவியைக் கண்டுபிடித்து கொடுப்பார்… நன்றாக பேயை ஓட்டுவார் இதற்கு மட்டுமே அவர்களை பயன்படுத்துவார்கள்.

4. புனிதர்களையோ, தேவ மாதாவையோ சப்பரத்திலோ, தேரிலோ வைத்து பவனி வரும்போது அவசங்கையாக நடந்து கொள்வது.. மது அருந்திவிட்டு சப்பரத்தை தூக்குவது.. தேரை இழுப்பது, புனிதர் சப்பர நகர்வலத்தில் வேடிக்கை பார்த்தல், கதை பேசிக்கொண்டு வருதல், பக்தியில்லாமல் கலந்துகொள்ளுதல், கிளார்னெட்டில் (இசைக்கருவி) சினிமா பாடல் இசைத்தல், ஆட்டம், பாட்டம் போன்ற பல இருக்கின்றன..

5. ஆண்டவர் இயேசுவை ஒதுக்கிவிட்டு புனிதரை மட்டுமே தூக்கிப் பிடித்தால் அது புனிதருக்கு செய்கிற மிகப்பெரிய  அவசங்கையாகிவிடும்.. “ ஆண்டவர் இயேசுதான் நம் கடவுள் “ நம் புனிதர் வழியில் ஆண்டவரைப் பின் சென்று கடவுளை அடைதல், தேவைகளைக் கேட்டல், புனிதருக்கு புகழ்பாடல் என்று இருந்தால் புனிதர் மகிழ்வார்; மன்றாட்டைக் கேட்பார்..

முக்கியமான புனிதர்கள் திருவிழாக்களில் நடக்கும் அவசங்கைகள் யார் சொல்லவும் அவசியமல்ல.. நமக்கே தெறியும்..

புனிதர்கள் பக்தி கண்டிப்பாகத் தேவை.. சாதாரன மனிதர்களாகப் பிறந்து ஆண்டவர் இயேசுவுக்காய் சாட்சிய வாழ்வு வாழ்ந்து அவருக்காய் இரத்தம் சிந்தி/தரித்திர வாழ்க்கை வாழ்ந்து/ ஒருத்தல் தவத்தோடு வாழ்ந்து/ பரித்தியாகவே வாழ்க்கையாய் வாழ்ந்து/ நோய்களை தாங்கி அவருக்கு ஒப்புக்கொடுத்து வாழ்க்கை முழுவதும் ஆண்டவர் இயேசுவுக்காய் வாழ்ந்து அவருக்காகவே இறந்து மொத்தத்தில் கடினமாக உழைத்து இந்த நிலையை அடைந்துள்ளார்கள்..

ஆனால் நாமோ வெறும் காரிய பக்திக்காக மட்டும் அவர்களை பயன்படுத்திக்கொண்டு நம் சவுகரீகத்திற்காக, நம் சந்தோசத்திற்காக அவர்கள் ஆலயங்களையும், அவர்கள் திருவிழாக்களையும் பயன்படுத்தினால் அது ரொம்பவே ஆபத்து..

புனிதர்கள் வாழ்க்கையை பின்பற்றி நாம் மனமாற வேண்டும், ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் வேண்டும்.. அவர்களிடம் ஆன்மீக உதவி கேட்கவேண்டும். பாவத்தை விட்டுவிட வேண்டும்.. இதுபோன்ற செயல்களை செய்யாமல் பெரும்பாலான முக்கிய திருத்தலங்களில் நடப்பது தொடர்ந்தால் அதுதான் நாம் செய்யும் அவசங்கை.. நாளைக்கு அவர்கள்தான் நமக்கு எதிராக சாட்சி சொல்லுவார்கள்..

மேலே அந்த நண்பர் சொன்னது போல புனித அந்தோணியார் சூப்பர்ஸ்டாராவோ, சூப்பர் ஹீரோவாகவோ இருக்கமாட்டார் அவர் அவருக்கு வில்லனாகத்தான் இருப்பார்..

அவசங்கைக்குட்படுத்தப்பட்ட புனிதர்கள் புனித அந்தோணியாரோ/ புனித சந்தியாகப்பரோ என்ன சொல்லுவார்கள் தெறியுமா?

“ ஆண்டவரே ! அவனை மோட்சத்திற்குள் விட்டுவிடாதீர்கள் அவன் செய்த அவசங்கைக்கு அவன் நரகத்திற்குத்தான் போக வேண்டும்… நானே அவனை அங்கே போய் போட்டுவிட்டு வருகிறேன் “ என்பார்கள்..

புனிதர்கள் பக்தி கண்டிப்பாக தேவை. புனிதர்கள் கண்டிப்பாக அற்புதங்கள் செய்வார்கள்… செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆண்டவரே சொல்லியிருக்கிறார் “ என்னைவிட பெரியன செய்வான்’ என்று… ஆனால் புனிதர் பக்தி ஆண்டவரை மறந்து, ஆண்டவருக்கு உள்ள முக்கியத்துவம் கொடுக்காமல் இலக்கணம் தவறினால் அதுவே அவர்களுக்கு எதிர்வினையாகிவிடும்..

புனிதர்கள் பக்தியில் இந்த எச்சரிக்கை உணர்வு கண்டிப்பாக தேவை..

குறிப்பு : தேர்பவனி, சப்பர பவனிகளில் ஜெபமாலை ஜெபித்து மாதா, புனிதர்கள், ஆண்டவர் பாடல் பாடிக்கொண்டு பக்தியாக அந்த பவனியை கடைபிடித்தால் அது மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும்… அல்ல என்றால் அதுவே சாபமாகிவிடும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !