குடும்ப ஜெபமாலை!

இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல் போனதுதான். கடந்த 22 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள், அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான். கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும் மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை நின்றதுதான்.

முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில் நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே காப்பாற்றிக்கொண்டிருந்தது.

ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை. பரலோக மந்திரத்தில் “ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே “ 

 “ எங்கள் அனுதின உணவை “ “ எங்களை சோதனையில் விழவிடாதேயும்”  அருள் நிறை மந்திரத்தில் “பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக “என்றுதான் நாம் ஜெபிக்கிறோம். அப்படி ஜெபிக்கும் போது  நமக்காக மட்டும் அல்ல உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும் நாம் ஜெபிக்கிறோம். “ அதுதான் ஜெபமாலையின் சிறப்பு மற்றும் சக்தி.

ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள் நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள் வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.

24 மணி நேரமும் படங்கள், பாடல்கள், சீரியல்கள், ஆன்மாக்களைக் கெடுக்கும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள்.. இதெல்லாம் என்ன செய்யும்.ஆன்மாக்களை கெடுத்து குட்டி சுவராக்காதா? குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள் நிலையை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஆன்மாக்களில் விஷங்களை விதைக்கின்றன.குடும்ப உறவுகளை சீரழிக்கின்றன.

சாத்தான் வீட்டுக்குள்ளேயே கூடாரம் அமைத்து அமர்ந்துவிட்டான். நமது நேரங்களை எல்லாம் விழுங்கிவிட்டான். 90 சதவிகதம் டி.வி  நிகழ்ச்சிகள் மக்களுக்கு நல்ல விசயங்களைத் தருவது இல்லை என்பது கசப்பான உண்மை.

நம்  குடும்பங்கள் டி.வி.க்கு அடிமையானதால் குடும்ப ஜெபமாலை நின்று போனது.

சரி டி.வி. பாருங்கள். நல்ல நிகழ்ச்சிகள், செய்திகள், நல்ல படங்கள், நல்ல பாடல்கள் பாருங்கள். ஆனால் கடவுளுக்குண்டான நேரம் என்னவானது? நாளைக்கு நம்மிடம் கணக்கு கேட்க மாட்டார்.

நம் கத்தொலிக் குடும்பங்கள் நம் வரலாற்றை திரும்பிப்பார்க்க வேண்டும். அனுதின திருப்பலியில் பங்கேற்றல், மாலை ஜெபமாலையில் கலந்து கொண்டு ஜெபித்தல் இது தவிர குடும்ப ஜெபமாலை. தவக்காலத்தில் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கிறோம். எல்லாவற்றிலும் விதி விலக்கு, அசால்டுத்தனம், சோம்பேரித்தனம் வந்து விட்டது. காரணம் ஜெபமாலையை விட்டதுதான். Time Management –டாம் ஆனால் எல்லா உலக காரியங்களுக்கும் நேரம் உண்டு ஆனால் ஆன்மீக காரியங்களுக்கு நேரமில்லை. இது என்ன நியாயம்?

ஆனால் ஒரு சில இல்லங்களில் இன்னும் குடும்பஜெபமாலை ஜெபிக்கப்படுவது சிறிது ஆறுதல்.

இப்போது உங்கள் குடும்பங்களில் குடும்ப ஜெபமாலையை ஆரம்பித்துப்பாருங்கள். சில நாட்களில் மாதங்களில் உங்களுக்கே மாற்றம் தெறியும். நம் ஆன்மாவில் சந்தோசம் குடியேறும். ஜெபமாலையின் சுவையை, பாதுகாப்பை அனுபவித்தால்தான் தெறியும்.

அன்பான கத்தோலிக்க மக்களே ! கத்தொலிக்க குடும்பத்திற்கு ஜெபமாலை இன்றியமையாது அது தவிர நம்மையே அறியாமல் நம் வீட்டை, நாட்டை ஏன் உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிக்கொண்டே இருக்கும்.

மாதா காரணமில்லாமல் எதையும் கேட்க மாட்டார்கள். நம்மை காப்பற்றத்தான் கேட்கிறார்கள். நம் துன்ப வேளைகளில் அவர்களை அழைக்கத்தான் கேட்கிறார்கள். ஜெபமாலை சொன்னால்தானே அவர்கள் வருவார்கள் நம்மைக்காப்பாற்ற, “ இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளுங்கள் “ என்று கேட்டால்தானே வருவார்கள்”

தயவு செய்து குடும்ப ஜெபமாலை சொல்லுவோம்; நம்மையும், நம் குடும்பத்தையும், இந்த உலகத்தையும் காப்பாற்றுவோம். இதில் இன்றைய குழந்தைகளும் மிகவும் பயன்பெருவார்கள். அவர்களுக்கு ஞான வழிகாட்டியாக, நல்ல தாயாக இருந்து மாதா காப்பாற்றுவார்கள். வருங்கால தலைமுறை தப்பிக்கும். இல்லையென்றால் அழிவு உறுதி. அதுவும் சீக்கிரத்தில்..

ஜெபமாலை அக்டோபர் மாதம் மட்டும் ஜெபிக்கும் ஜெபமல்ல 365 நாட்களும் ஜெபிக்கப்பட வேண்டிய ஜெபம்.. நம்மையும், உலகையும் காப்பாற்றும் ஆயுதம்...

ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை; குடும்ப ஜெபமாலை தவறாமல் ஜெபிப்போம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !