வாழ்த்துரை

உலக கிறித்தவ வரலாற்றில் தனிப்பெருஞ் சிறப்பிற்குரிய இயேசுசபையை நிறுவி புதிய சகாப்தம் படைத்தவர் தூய இக்காசியார் ஆவார். ஒரு மனிதரின் உள்ளத்தை செம்மைப்படுத்தி எண்ணங்களையும் வாழ்வையும் மடைமாற்றி வேறொரு பரிமாணத்தில் உயர்த்தக்கூடிய ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. 

"தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் ஆயுதம்" என்ற புத்தகம் குறித்த பொன்மொழியின் வரிகள் தூய இஞ்ஞாசியாரின் மனமாற்றத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

தூய இஞ்ஞாசியார் மனமாற்றம் அடைந்த 500ஆவது ஆண்டினை அகில உலகமும் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் தூய இஞ்ஞாசியார், தூய சவேரியார் இருவருக்கும் புனிதர் பட்டம் சூட்டப்பெற்ற 400ஆவது ஆண்டையும் சிறப்பிக்கும் விதத்தில் எம் தே பிரித்தோ மேனிலைப்பள்ளியின் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் நூலாக வெளியிடும் இம்முயற்சியை உளமாரப் பாராட்டி மகிழ்கிறேன்.

மறைக்கல்வி பயிலும் மாணவ - மாணவியர், இறையழைத்தல் பணியில் ஆர்வமுள்ளோர், ஆசிரியர்கள், இறைமக்கள் என அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தீஞ்சுவை நூல் விருந்தாகப் படைத்திருக்கும் இந்நூலின் பொறுப்பாசிரியர் எம் பள்ளியின் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களையும், அவரோடு துணைநின்று நூலாக்கப் பணிகளில் ஈடுபட்ட - 'ஆசிரியர் குழுவினர் திரு.ஜோ. ஜான் ஞானதீபன், திரு. அ. வேதமாணிக்கம், திரு. அ. பிலவேந்திர ராஜா ஆகியோரையும் மனம் நிறைய வாழ்த்தி மகிழ்கிறேன். மிகச்சிறப்பாக ஓவியம் வரைந்தளித்த ஓவிய ஆசிரியர் திரு.ஜா.பூண்டி ஜெயராஜ் அவர்களுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்.

இனிய வாழ்த்துகளுடன்,

அருட்பணி. ம.வின்சென்ட் அமல்ராஜ் சே.ச,

அதிபர் & தாளாளர், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை.