வினா-விடைகள் 51 முதல் 100 வரை.

51. பின்னாளில் கத்தரீனா இளவரசியை மணந்துகொண்டவர் யார்?

போர்த்துக்கல் நாட்டு மன்னர் மூன்றாம் ஜான். 

52. அரவெலோ, மாட்ரிகால், ஒல்மெடா நகரங்களை அரசி ஜெர்மேனுக்கு விட்டுக்கொடுக்குமாறு வெலாஸ்குவெசிற்கு அறிவுறுத்தியவர் யார்?

முதலாம் சார்லஸ். 

53. இளவரசர் சார்லஸின் ஆணைக்கு இணங்காமல் போர் தொடுக்க முயன்றதால் வெலாஸ்குவஸிற்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு?

160 இலட்சம் வெள்ளி. 

54. ஏற்கனவே துயரிலிருந்த வெலாஸ்குவசிற்கு, அவரது மூத்த மகன் இறந்த வேதனையும் சேர்ந்து வருத்த எப்போது காலமானார்?

1517. 

55. யூவான் வெலாஸ்க்குவெஸ் மறைவு யாருடைய ஆடம்பர வாழ்க்கையையும் பாதித்தது?

இஞ்ஞாசியாரின். 

56. அரவெலாவிலிருந்து நவார் நகர ஆளுநர் டோன் அந்தோனியோ மன்ரீக் பிரபுவைச் சந்திக்குமாறு அனுப்பிவைத்தவர் யார்?

யூவான் வெலாஸ்க்குவெஸ் மனைவி மரிய தெ வெலாஸ்கோ. 

57. பெர்டினாண்ட் அரசர் பிரான்சு நாட்டிடமிருந்து எந்த நகரைக் கைப்பற்றி டோன் அந்தோனியோ மான்ரீக் பிரபுவை அதன் ஆளுநராக நியமித்தார்?

நவார் நகர். 

58. நவார் நகர் எங்கு அமைந்திருந்தது?

ஸ்பெயின்- பிரான்சு நாடுகளின் எல்லையில். 

59. நவார் நகரை எந்தெந்த நாடுகள் மாறி மாறி கையகப்படுத்தி வைத்திருந்தன? 

பிரான்சு, ஸ்பெயின் நாடுகள். 

60.பெர்டினாண்ட் அரசர் எப்போது காலமானார்?

1516.

61. பெர்டினாண்ட் அரசருக்குப் பின் அரியணையேறிய அரசன் யார்?

பெர்டினாண்ட் அரசரின் மகன் ஐந்தாம் கார்லூஸ். 

62.வெலாஸ்குவெஸின் மனைவி அனுப்பிய ஓலையைப் பெற்றுக்கொண்ட டோன் அந்தோனியோ என்ன செய்தார்? 

இஞ்ஞாசியாரைத் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

63. 1520 இல் கஸ்டீல் மாகாண அரசருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்களை அடக்குவதற்கு டோன் அந்தோனியோ யாரை அனுப்பி வெற்றி கண்டார்?

இருஞாசியாரை. 

64. 1521 இல் குப்புஸ்கா நீதிபதியாக நியமிக்கப்பட்டவரை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டோரின் வழக்கை விசாரிக்க ஆளுநர் டோன் அந்தோனியாவால் அனுப்பப்பெற்று நடுவுநிலைமையோடு தீர்ப்பு வழங்கியவர் யார்? 

இஞ்ஞாசியார். 

65. நவார் நகரிலிருந்த பாம்பலூனா கோட்டையை பிரெஞ்சுப்படை உதவியுடன் அழைத்துவந்து முற்றுகையிட்டவர் யார்?

ஹென்றி தெ ஆல்ப்ரே. 

66. பாம்பலூனா கோட்டையைக் கைப்பற்ற பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகளுக்கிடையே போர் மூண்டது எப்போது?

20.05.1521. 

67. கோட்டையைக் கைப்பற்ற போரில் சண்டையிட்ட பிரான்சு நாட்டுப் படைவீரர்கள் எத்தனை பேர்?

ஏறத்தாழ 13 ஆயிரம் பேர். 

68. பிரான்சு படை வீரர்களிடமிருந்து கோட்டையைக் காப்பாற்றப் போரிட்ட ஸ்பெயின் நாட்டுப் படைவீரர்கள் எத்தனை பேர்?

ஏறத்தாழ 1000 பேர். 

69. கஸ்டீல் மாகாணத்தலைவரிடம் போருக்கு வேண்டிய படைகள் சேகரிப்பதற்காகத் தான் சென்று திரும்பும்வரை பாம்பலூனா கோட்டையைக் காக்கும்படி ஆளுநர் டோன் அந்தோனியா யாரிடம் சொல்லிச் சென்றார்? 

படைத்தலைவர் பிரான்செஸ் தெ போமோன்ட்டிடம். 

70. போருக்கு வேண்டிய படைகள் சேகரிப்பதற்காகத் தான் சென்று திரும்பும்வரை படைத் தலைவருக்கு உதவியாகப் போர்புரியுமாறு ஆளுநர் டோன் அந்தோனியா யாரிடம் சொல்லிச் சென்றார்?

இஞ்ஞாசியாரிடம். 

71. ஆளுநர் இல்லாததால் நவார் நகர மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடப் படைவீரர்களுடன் கோட்டையைவிட்டுக் கிளம்பிச் சென்றவர் யார்?

படைத்தலைவர் பிரான்செஸ். 

72. பாம்பலூனா கோட்டையைக் காப்பாற்ற இஞ்ஞாசியாருக்கு உதவியாக ஐம்பது போர்வீரர்களைத் திரட்டி வந்தவர் யார்? 

இஞ்ஞாசியாரின் சகோதரர் மார்ட்டின் கார்சியா.

73.“புறம்காட்டி ஓடுவதைவிட சண்டைக்குச் சென்று சாவதே மேல்" என்ற உறுதியோடு சண்டையிட்டவர் யார்? 

இஞ்ஞாசியார். 

74. போர்க்களத்திலிருக்கும்போது கிறித்தவ வீரர்கள் யாரிடம் பாவ அறிக்கை செய்து கொள்வார்கள்? 

சக வீரர்களிடம். 

75. இஞ்ஞாசியார் தன் படைவீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கியபோது வீரத்தோடு போரிட்டு மரணத்தை எதிர்கொள்ளும்வேளையில் யாரிடம் பாவ அறிக்கையிட்டார்? 

சக போர்வீரனிடம். 

76. பிரான்சு படைவீரர்களின் பீரங்கிக்குண்டு இஞ்ஞாசியாரின் எந்தக் காலில் காயமுண்டாக்கியது?

வலது கால் முழங்காலை நொறுக்கி இடதுகாலையும் காயப்படுத்தியது. 

77. இஞ்ஞாசியாரின் வீரதீரத்தைப் போரில் கண்ட பிரான்சுபடை வீரர்கள் இஞ்ஞாசியாரை எவ்விதம் நடத்தினர்? 

மாவீரனுக்குரிய மதிப்பை அளித்து நடத்தினர். 

78. காலில் குண்டடிபட்ட பிறகு பிரான்சு நாட்டுப் படையினரோடு இஞ்ஞாசியார் எத்தனை நாள் தங்கியிருந்தார்?

15 நாள். 79. காயம்பட்டிருந்த இஞ்ஞாசியாரை பிரான்சு படைவீரர்கள் பல்லக்கில்

எங்கு அனுப்பி வைத்தனர்? லொயோலா மாளிகைக்கு. 

80. இஞ்ஞாசியார் குண்டடிபட்டு எத்தனை மாதங்கள் படுக்கையில் இருந்தார்?

பத்து மாதங்கள் 

81. காலில் காயம்பட்டிருந்த இஞ்ஞாசியாரின் மனதை வருத்திய பெரும் கவலை யாது? 

கால் சரியாக உலகம் போற்றும் போர்வீரனாகப் புகழ்பெற முடியாதோ எனும் கவலை. 

82. தன் கால் சரியாவதற்காக எத்தனைமுறை இஞ்ஞாசியார் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்?

3 முறை. 

83. இஞ்ஞாசியாரின் எந்தக் கால் மற்றொரு காலைவிட குட்டையாக வலக்கால் இடக்காலைவிட கட்டையாக இருந்தது.

இருந்தது?

தடையாக இருந்தது.

84. அறுவைச் சிகிச்சையால் இஞ்ஞாசியாரின் கால் எந்நிலையிலிருந்தது? 

முழங்காலுக்குக் கீழே ஓர் எலும்பு மற்றோர் எலும்பின்மீது நீட்டிக்கொண்டு ஒரு கால் குட்டையாக இருந்தது. 

85. கால் குட்டையாக இருந்ததால் இயல்பாக நடக்கமுடியாதென இஞ்ஞாசியார் எந்த சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார்? 

தேவையற்ற எலும்பு. சதையை அகற்றி குட்டையாக இருந்த கால் இரும்புக் கருவிகளால் இழுத்து நீட்டப்படும் சிகிச்சை. 

86. காலில் ஏற்பட்ட விபத்து இறைப் பணிக்கு விடுத்த அழைப்பாக யாருக்கு மாறியது?

இஞ்ஞாசியாருக்கு. 

87. இளம் வயதில் இஞ்ஞாசியாரின் குறும்புத்தனத்தைக் கண்டிக்க வளர்ப்புத்தாய் மரியா தெ கரீன் அம்மாள் என்ன சொல்லி அதட்டுவார்? 

"யாராவது ஒருவன் உன் காலை உடைத்தால்தான் உனக்குப் புத்தி வரும்." 

88. இஞ்ஞாசியார் எங்கு படித்ததை நினைவுகூர்ந்து அதுபோன்ற

வீரதீரநூல்களைப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டார்? அரவெலாவில் யூவான் வெலாஸ்க்குவெஸ் அரண்மனையில் படித்ததை

நினைவுகூர்ந்து. 

89. காலில் காயத்தோடு ஓய்விலிருந்த இஞ்ஞாசியார் படிக்கக் கேட்ட நூல் எது?

அமாஸ்திஸ். 

90. இஞ்ஞாசியார் படிப்பதற்காக வீரதீர நூல்கள் கேட்டு அவையில்லாததால் வேறு இரு நூல்களை அவரிடம் கொடுத்தவர் யார்? 

இஞ்ஞாசியாரின் அண்ணி மகதலேனா அரவோஸ்.

91. இஞ்ஞாசியாரின் அண்ணி படிக்கக் கொடுத்த நூல்கள் எவை?

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, புனிதர்களின் வாழ்க்கை வரலாறு. 

92. இஞ்ஞாசியாரின் அண்ணிக்கு அவ்விரு நூல்களையும் கொடுத்தவர் யார்? 

இஞ்ஞாசியாரின் அண்ணி திருமணநாளுக்குப் பரிசாக அரசி இசபெல்லா அவ்விரு நூல்களையும் கொடுத்தார். 

93. இஞ்ஞாசியார் படித்த "கிறிஸ்துவின் சரிதை" நூலை எழுதியவர் யார்? அந்நூல் எத்தனை பாகங்களைக் கொண்டது?

லுடோல்ஃப், 4 பாகங்கள். 

94. லுடோல்ஃப் எந்த சபையைச் சார்ந்த துறவி?

கர்த்தூசிய சபை.

95. இஞ்ஞாசியார் படித்த "புனிதர்களின் வரலாறு" நூலின் ஆசிரியர் யார்? 

ஐக்கோபா தெ வராசே. ஐக்கோபா தெ வராசே எந்த சபையைச் சார்ந்த துறவி?

தொமினிக்கன் சபை. 

97. புனிதர்களின் வரலாற்று நூலின் பெயர் 

FLOS SANCTORUM 

98. FLOS SANCTORUM என்பதன் பொருள் யாது?

புனிதர்களின் மலர். 

99. புனிதர்களின் வரலாற்று நூல் எம்மொழியில் எழுதப்பட்டிருந்தது?

கஸ்தீலியன். 

100. இஞ்ஞாசியார் தான் கேட்ட நூல் கிடைக்காததால் அண்ணியார் தந்த நூல்களை எவ்வாறு படிக்கத் தொடங்கினார்?

வேண்டாவெறுப்போடு.