வினா-விடைகள் 01 முதல் 50 வரை.

தூய லொயோலா இஞ்ஞாசியார் வாழ்வும் பணியும்

1. லொயோலா இஞ்ஞாசியார் எந்த ஆண்டு பிறந்தார்?

1491. 

2. லொயோலா இஞ்ஞாசியார் பிறந்த நாடு எது?

ஸ்பெயின். 

3. இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டின் எந்த மாகாணத்தில் பிறந்தார்?

பாஸ்க். 

4. இஞ்ஞாசியார் பிறந்த பகுதியில் பேசப்பட்டுவந்த மொழி எது?

பாஸ்கு மொழி. 

5. இஞ்ஞாசியாரின் பெற்றோர் யாவர்?

டோன்பெர்ட்ரான் - டோனாமரினா. 

6. இஞ்ஞாசியாரின் பெற்றோருக்கு எந்த ஆண்டு திருமணமானது?

1467. 

7. இஞ்ஞாசியாருக்கு உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்?

12 பேர். 

8. இஞ்ஞாசியார் அவருடைய பெற்றோருக்கு எத்தனையாவது குழந்தையாகப் பிறந்தார்? 

13 ஆவது. 

9. இஞ்ஞாசியார் திருமுழுக்கு பெற்ற இடம் எது?

அஸ்பெயித்சீயா பட்டணம். 

10. அஸ்பெயித்சியா நகரில் வசித்துவந்த இருபெரும் குடும்பங்கள் யாவை?

ஓஞாஸ் குடும்பம், லொயோலா குடும்பம்.

11. லொயோலா குடும்பம் பெற்றிருந்த அடையாளச் சின்னம் யாது?

இரண்டு ஓநாய்கள் சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த உணவுப்பானையில் வாய் வைப்பது போன்ற வடிவம். 

12. இஞ்ஞாசியாருக்கு திருமுழுக்கில் இடப்பெற்ற பெயர் யாது?

இனிகோ லோபஸ் தெ லொயோலா. 

13. இஞ்ஞாசியாருக்கு எந்தப் புனிதரின் பெயர் சூட்டப்பெற்றது?

இனிகோ ஆஃப் ஓஞா. 

14. இனிகோ ஆஃப் ஓஞா எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?

பதினொன்றாம் நூற்றாண்டு. 

15. இனிகோ ஆஃப் ஒஞா எங்கு மடாதிபதியாகப் பொறுப்பு வகித்தார்?

ஓஞா என்னுமிடத்திலுள்ள ஆசீர்வாதப்பர் சபையின் மடாதிபதி. 

16. இனிகோ என்பதன் பொருள் யாது?

நெருப்பு. 

17. லோப்பஸ் என்னும் சொல்லின் பொருள் யாது?

ஓநாய். 

18. லொயோலா என்ற சொல்லின் பொருள் என்ன?

மண். 

19. இஞ்ஞாசியார் திருமுழுக்கு பெற்ற ஆலயம் எது? திருமுழுக்கு நான் வழங்கிய அருட்தந்தை யார்?

தூய செபஸ்தியார் ஆலயம், அருட்தந்தை யுவான் தெ சபாலா. அப்பால் 

20. இஞ்ஞாசியாரின் பெற்றோர்க்கு எத்தனை ஆண் பிள்ளைகள்? அவர்கள் பெயரைப் பட்டியலிடுக.. 

8 பேர். யூவான் பேரேஸ், மார்ட்டின் கார்சியா, பெல்ட்ரான், ஒக்கோவா, ஹெர்னான்டோ, பெர்ரோ லோபஸ், பிரான்சிஸ்கோ, இனிகோ. 

21. இஞ்ஞாசியாரின் பெற்றோர்க்கு எத்தனை பெண் பிள்ளைகள்? அவர்கள் யாவர்? 

5 பேர். யுவானா, மதலேனா, பெட்ரோனில்லா, சாஞ்சா இபனேஸ், மரியா பெல்ட்ரான். 

22. இஞ்ஞாசியாரின் மூத்த சகோதரர் யூவான் பேரேஸ் எந்தப்போரில் எங்கு மடிந்தார்? 

பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக நேப்பில்ஸ் நகரில் நடந்த போரில். 

23. இஞ்ஞாசியாரின் தந்தை யாருடைய ஆட்சியில் போர்க்களத்தில் சண்டையிட்டு வெற்றி வாகை சூடினார்?

ஆரகோன் நாட்டு அரசர் பெர்டினாண்ட்- அரசி இசபெல்லா. 

24. லொயோலா மாளிகைக்கு வாரிசாகத் திகழ்ந்த இஞ்ஞாசியாரின் சகோதரர் யார்? 

மார்ட்டின் கார்சியா.

25. மார்ட்டின் கார்சியாவிற்கு திருமணம் நிகழ்ந்த ஆண்டு எது?

1518. 

26. மார்ட்டின் கார்சியாவின் மனைவி பெயர் யாது?

மதலேனா தெ அரவோஸ். 

27. அரசி இசபெல்லா இஞ்ஞாசியாரின் அண்ணி மதலேனாவிற்கு வழங்கிய திருமணநாள் பரிசு எது? 

புத்தகங்கள். 

28. இஞ்ஞாசியார் அண்ணன் மார்ட்டின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த இஞ்ஞாசியாருக்குப் பிடித்தமான படம் எது?

கபிரியேல் தூதர் கன்னிமரியாளுக்கு மங்களவார்த்தை சொல்லும் படம். 

29. மங்கள வார்த்தை சொல்லும் படத்தை இஞ்ஞாசியாரின் அண்ணி மதலேனாவிற்குப் பரிசளித்தவர் யார்? 

இளவரசி இசபெல்லா. 

30. சொந்த நாட்டிற்காகப் போர் புரிந்து மடிந்த இஞ்ஞாசியாரின் சகோதரர்கள் யாவர்?

யூவான் பேரேஸ், பெல்ட்ரான், ஓக்கோவா. 

31. இஞ்ஞாசியாரின் மூன்று சகோதரர்கள் எந்த மன்னனுக்காகப் போரிட்டு உயிர் துறந்தார்கள்?

ஐந்தாம் சார்லஸ் மன்னர். 

32.1510 இல் அமெரிக்காவுக்குப் பயணமாகி இறந்த இஞ்ஞாசியாரின் சகோதரர் யார்?

ஹெர்னாண்டோ. 

33. அஸ்பெயித்சீயா தேவாலயத்தில் குருவாகப் பணியாற்றிய இஞ்ஞாசியாரின் சகோதரர் யார்? 

பெர்ரோ லோபஸ். 

34. இஞ்ஞாசியார் தன் தாயின் மறைவிற்குப் பிறகு யாருடைய அடைக்கலத்தில் வளர்ந்தார்? 

மரியா தெ கான். 

35. மரியா தெ கரீன் யார்?

இஞ்ஞாசியாரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவர். 

36.மரியா தெ கரீனுடைய கணவர் யார்?

கொல்லர் வேலை செய்த எராஸ்டி. 

37. இஞ்ஞாசியாருக்கு அடிப்படையான மறைக்கல்வியைப் போதித்தவர் யார்? 

வளர்ப்புத்தாய் மரியா தெ கரீன்.

38. நாள்தோறும் இரவு செப்டம், செபமாலை முடிந்தவுடன் பாரம்பரிய மிக்க வீரதீரக் கதைகளை இஞ்ஞாசியாருக்குக் கூறுபவர் யார்? 

இஞ்ஞாசியாரின் தந்தை பெல்ட்ரான். 

39. இஞ்ஞாசியார் இளம்வயதில் கொண்டிருந்த இலட்சியம் யாது?

உலகம் போற்றும் மாவீரனாகவேண்டும் என்பது. 

40. இஞ்ஞாசியார் அடிக்கடி நினைவுகூர்ந்த புராணக்கதையில் வரும் மாவீரன் யார்?

மாவீரன் அமாதின் தெ கால். 

41. இளம் வயதில் எந்தத் திறனை மேம்படுத்திக் கொள்வதில் இஞ்ஞாசியார் ஆர்வமுடன் இருந்தார்?

அழகான கையெழுத்து. 

42. தன் மகனுக்குத் தோழனாக இருந்து வாழ்க்கை நடத்த லொயோலா குடும்பத்திலிருந்து ஓர் இளைஞனை அனுப்புமாறு இஞ்ஞாசியாரின் தந்தைக்கு கடிதமெழுதிக் கேட்டுக்கொண்டவர் யார்?

கருவூலக்காப்பாளர் டோன் யூவான் வெலாஸ்க்குவெஸ். 

43. கருவூலக்காப்பாளர் கேட்டுக்கொண்டபடி இஞ்ஞாசியாரின் தந்தை அரெவலோ அரண்மனைக்கு யாரை அனுப்பி வைத்தார்?

இஞ்ஞாசியாரை. 

44. அரண்மனையில் கருவூலக் காப்பாளர் மகனுக்கு இஞ்ஞாசியார் தோழனாக எத்தனை ஆண்டுகள் அரண்மனையில் தங்கியிருந்தார்? 

தன் 16 வயது முதல் 26 வயது வரை பத்து ஆண்டுகள். 

45. டோன் யூவான் வெலாஸ்குவெஸின் அரண்மனையில் இஞ்ஞாசியார் எத்தகைய நூல்களை விரும்பிப் படித்தார்?

போர்வீரர்களின் வீரதீரச் செயல்களடங்கிய நூல்கள். 

46. சொந்தமாகக் கவிதை எழுதி தம் நண்பர்களிடம் அவற்றை இசையோடு பாடுகின்ற திறமை பெற்றிருந்தவர் யார்?

இஞ்ஞாசியார். 

47. அரண்மனையில் இஞ்ஞாசியார் பெற்ற போர்ப்பயிற்சிகள் யாவை?

வாள் வீச்சு, குதிரையேற்றம், மல்யுத்தம். 

48. இஞ்ஞாசியார் எந்த வயதில் போர்வீரராகப் பணியைத் தொடங்கினார்? 

17 வயது.

49. இஞ்ஞாசியார் யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்?

இளவரசி கத்தரீனா. 

50. இளவரசி கத்தரீனா யார்? 

பிலிப் அரசரின் மகள், சார்லஸின் இளைய சகோதரி.