அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-26

அமெரிக்காவை கண்டு பிடிக்கும் கொலம்பஸின் முயற்சியில் தேவ மாதா மற்றும் தூய யாகப்பரின் உற்றதுணை..

கி.பி.1492: ஸ்பெயின் தேசத்து மக்களை பல வித காலகட்டங்களில் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி வந்துள்ளார் தூய சந்தியாகப்பர். அதில் கி.பி.1492 வருடத்தில் நிகழ்ந்த போரும் அடங்கும். அந்த போர் கிரானடா போர் ( Granada war) என்று அழைக்கப்படுகிறது. அந்தபோரில் ஈடுபட்டது அரசி இசபெல்லா அவர் கணவர் ஃபர்னினார்ட் (Isabella I and Ferdinand II). சந்தியாகப்பர் துணையோடு வெற்றி பெற்ற நாள் ஜனவரி 2. புனித சந்தியாகப்பருக்கு தேவ மாதா காட்சி கொடுத்த நாள். 

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும் அந்த ஆண்டுதான். அரசி இசபெல்லாவின் ஆணையோடுதான் கொலம்பஸ் தன் பயணத்தை தொடங்கினார்.

அவர் பயணம் செல்லும் முன் ஈப்ரோ நதிக்கரையில் இருந்த தேவ அன்னையின் தூண் மாதா கோவிலுக்கு சென்று ஜெபித்து விட்டுத்தான் தன் பயணத்தை துவக்கிருக்கிறார். மேலும் அவருக்கு புனித லூக்காஸ் தன் கையால் வரைந்த தேவ மாதாவின் ஒவியத்தின் மேல் தனிப்பக்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த படம் இருந்த ஒளியின் ஆறு (“A River of Light.” ) என்ற ஆற்றின் கரையில் இருந்த தேவ அன்னையின் ஆலயத்திற்கும் சென்று விட்டுத்தான் தன் பயணத்தை தொடங்கினார்.

ஸ்பெயின் தேசத்தை ஆண்டுவந்த கத்தோலிக்க பேரரசி இசபெல்லா காலத்தில் ஸ்பெயின் தேசிய கொடியோடுதான் அதே வருடம்தான்  (கி.பி.1492) கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமேரிக்காவை கண்டு பிடித்தார்.

கொலம்பஸ் ஒரு இறைபக்தியுள்ள கத்தொலிக்க கிறிஸ்தவர். அதே போல கொலம்பஸ் டீம் ( Team) தூய யாகப்பரின் மீதும் பக்தி வைத்திருந்தார்கள்.

கி.பி 1519 ம் ஆண்டு கோர்ட்ஸ் (கொலம்பஸின் நண்பர் மற்றும் அவர் டீமை சார்ந்தவர்) அமெரிக்காவின் லாண்டிகுவா (Lantigua) என்ற இடத்தை அடைந்து முதல் கத்தொலிக்க ஆலயம் கட்டப்பட்டு புனித சந்தியாகப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கி.பி. 1521 ம் ஆண்டு மெக்சிகோ,அஸ்டக்சோடு (Aztecs) நடந்த போரில் வெற்றி பெற்ற பின்பு கோர்ட்ஸ் அமெரிக்காவின் ருயின்சில் (Ruins)ஆலயம் அமைத்து அந்த ஆலயமும் புனித சந்தியாகபருக்கே அர்ப்பணிக்கப்பட்டது.

புனித சந்தியாகப்பர் தூய பரிசுத்த மாதாவிற்கு ஸ்பெயின் தேசத்திலும், அமெரிக்கா தேசத்திலும் அன்னைக்கு முன்பாக சென்று அன்னைக்கான வழியை தயார் செய்தார்.

புனித சந்தியாகப்பர் சமாதானத்தின் அப்போஸ்தலராகவும் அழைக்கப்படுகிறார்.

ஜெபம் : இயேசு சுவாமியின் அன்பையும், தேவ மாதாவின் அன்பையும் பெற்ற எங்கள் அருமைப் புனிதர் புனித சந்தியாகப்பரே ! உம்மை நம்பி உம் பாதுகாப்பின் கீழ் வாழும் நாடுகளின் மக்களையும், அவர்களின் அரசர்களையும் காத்தவரே ! போரில் வெற்றி கொடுத்தவரே! பல சமையங்களில் அவர்களுக்காக வாளேந்தி போர் செய்தவரே !

உம்மைப் போல எங்களுக்கும் போர் குணத்தையும், வைராக்கிய மனதையும் தாரும் அய்யா. எங்களை எந்த நேரம் வீழ்த்தாலும் என்று சுற்றித் திரியும் பசாசுகளுக்கு எதிராக ஜெபமாலைப்போர் புரிந்து, நாங்கள் ஆன்மீக வெற்றி பெற்று உம்  துணையோடும், நம் பரிசுத்த தேவதாயின் துணையோடும்  நம் தேவ பிதாவின் நிரந்தர இல்லமான மோட்ச வீட்டிற்கு செல்ல அனுதினமும் எங்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேச உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்- ஆமென்.

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !