அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-25

எழுவரிலும் ஒருவர் : இயேசு உயிர்த்தெழுந்த பின்பு மூன்றாம் முறையாக காட்சி கொடுத்தபோதும், கடற்கரையில் தீ மூட்டி மீன்களையும் அப்பத்தையும் இயேசுவோடு உணவருந்திய ஏழுவரில் நம் புனிதரும் ஒருவர். ( அருளப்பர் : 21:1-3 )

இப்படி இயேசு முக்கியமான ஒரு சில வேளைகளில் அதிலும் குறிப்பாக அவர் கொஞ்சம் சீரியசாக இருக்கும்போது, மகிமையை வெளிக்காட்டும் போது அதில் நம் புனிதருக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார் நம் தேவன்..

சிந்தனை : ஏன் எப்படி ராயப்பரை திருச்சபையின் தலைவராகவும், அருளப்பரை நற்செய்தி எழுதவும், ரொம்ப வருடங்கள் வாழ்ந்து நற்செய்தி அறிவிக்கவும் தேர்ந்தெடுத்தாரோ அதே போல் சந்தியாகப்பருக்கும் ஒரு பணியை வைத்திருந்தார்..

“இயேசுவின் பணியை மகா தைரியத்தோடு பல இடங்களில் ( ஜெருசலேம், யூதேயா, சமாரியா, கலிலேயா, சரகோசா மற்றும் ஸ்பெயின் வரை) போதித்து, வேத சாட்சி மரணம் கூட பரிசுத்த அன்னையால் அறிவிக்கப்பட்டி இயேசு மறித்த அதே ஜெருசலேமில், அதே பாஸ்கா திருவிழாவின் போது இயேசுவின் மரணத்திற்கு பின் 14 ஆண்டுகள் கழித்து இயேசுவின் சீடர்களில் முதலாவதாக மகா மனமகிழ்ச்சியோடு அவர் கிண்ணத்தில் குடித்தவர், அப்போஸ்தலர்களில் முதலாவதாக தன் தலைவனுக்காக தலை கொடுத்து ரத்தம் சிந்தி மரிக்கும் பேற்றினை பெற்றார்.

இயேசுவின் நம்மிக்கையையும், அன்பையும் பெற்ற நம் சந்தியாகப்பரை போல் நாமும் இயேசுவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வாழ்வோமா?

மீண்டும் சந்திப்பேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..