இன்றைய புனிதர் - ஜனவரி 3 - பாரிஸ் நகர புனிதர் ஜெனிவீவ் ***


பாரிஸ் நகர புனிதர் ஜெனிவீவ் 
(St. Genevieve of Paris)

பாரிஸ் நகரின் பாதுகாவல் புனிதர்: (Patron Saint of Paris)

பிறப்பு: கி.பி 422

நாந்தெர்ரே, ஃபிரான்ஸ் (Nanterre, France)

இறப்பு: கி.பி 512 (வயது 90)

பாரிஸ், ஃபிரான்ஸ் (Paris, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜனவரி 3

பாதுகாவல்: பாரிஸ்

புனிதர் ஜெனிவீவ், ரோமன் கத்தோலிக்கம், மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதரும், பாரிஸ் நகரின் பாதுகாவலரும் ஆவார். இவரது நினைவுத் திருநாள், ஜனவரி மாதம், 3ம் தேதி ஆகும்.

பாரிஸ் நகரின் மேற்கு புறநகர் பகுதியான "நாந்தெர்ரே" (Nanterre) எனுமிடத்தில் பிறந்த இவர், "ஆக்ஸெர்ரியின் ஜெர்மானஸ்" (Germanus of Auxerre) மற்றும் "ட்ராய்ஸின் லூபஸ்" (Lupus of Troyes) ஆகிய ஆயர்களின்  சந்திப்புக்குப் பின்னர் பாரிஸுக்கு குடிபெயர்ந்தார். அங்கே, கிறிஸ்தவ பணி வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்தார். கி.பி. 451ம் ஆண்டில், அவர் ஒரு "பிரார்த்தனை மராத்தான்" க்கு தலைமை தாங்கினார். அது, பாரிஸ் நகருக்கு படையெடுத்து வந்த "ஹன்ஸ்" (Huns) ஆட்சியாளர் "அட்டிலா" (Attila) என்போரை நகரத்திலிருந்து திசைதிருப்பி, பாரிஸைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.

கி.பி. 464ம் ஆண்டில், ஜெர்மானிய மன்னர் "முதலாம் சில்டெரிக்" (Childeric I) நகரத்தை முற்றுகையிட்டபோது, இவர் நகரத்திற்கும், அதன் முற்றுகையாளர்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டு, உணவு சேகரித்து, தனது கைதிகளை விடுவிப்பதற்காக மன்னர் சில்டெரிக்கை சமாதானப்படுத்தினார்.

"நாந்தெர்ரே" (Nanterre) எனுமிடத்தில், "செவெரஸ்" (Severus) மற்றும் "ஜெரோன்சியா" (Geroncia) ஆகியோருக்கு பிறந்த இவர், ஒரு விவசாய பெண் என்று வர்ணிக்கப்படுகிறார். இவரது வாழ்க்கை சரிதத்தை ஒரு சமகாலத்தவரால் எழுதப்பட வேண்டும் என்று இருந்தாலும், ஜெனீவியின் சரிதத்தை வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.

பிரிட்டனுக்குச் செல்லும் வழியில், நாந்தேரேயில் தங்கிய "ஆக்ஸெர்ரேயின்" ஆயர், "ஜெர்மானஸை" (Germanus of Auxerre) சந்தித்த ஜெனீவீவ், தாம் கடவுளுக்காக மட்டுமே வாழ விரும்புவதாக அவரிடம் தெரிவித்தார். அவர் அவரை ஊக்குவித்ததன் காரணமாக, பதினைந்து வயதிலேயே ஜெனீவீவ் கன்னியாஸ்திரி ஆனார். தமது பெற்றோர் இறந்ததன் பிறகு, அவர் பண்டைய பாரிஸ் நகரின் "லூடேஷியா" (Lutetia) எனுமிடத்தில்,  தனது ஞானத்தாயுடன் வசிக்கச் சென்றார். அங்கு அந்த இளம் பெண், தனது பக்தி மற்றும் தொண்டு பணிகளில் ஈடுபாடு கொண்டதற்காகப் போற்றப்பட்டார். மேலும் நோன்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தார். இதில் இறைச்சியைத் தவிர்ப்பது மற்றும் வாரத்தில் இரண்டு முறை மட்டுமே விரதத்தை விடுத்தல் ஆகியவற்றை பின்பற்றினார். அவருடைய நோன்பு நடவடிக்கைகளை குறைக்க வைப்பது தங்கள் கடமை என்று அவரது சபையின் தலைமை நினைக்கும் வரை, சுமார் முப்பது வருடகாலம் அவர் இந்த வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றினார். பொறாமை கொண்டவர்களிடமிருந்தும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும், தமது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்தார்.

ஜெனிவீவுக்கு, பரலோக புனிதர்கள் மற்றும் தேவதூதர்களின் தரிசனம் அடிக்கடி கிட்டியதாகவும் கூறப்படுகிறது. அவளுடைய எதிரிகள் அவரை ஒரு ஏரியில் மூழ்கடிக்க சதி செய்யும்வரை, தமக்கு கிட்டிய தரிசனங்களையும் தீர்க்கதரிசனங்களையும் அவர் அறிவித்தார். ஆயர் ஜெர்மானஸின் (Germanus) தலையீட்டின் மூலம், அவர்களின் பகை இறுதியாக முறியடிக்கப்பட்டது. பாரிஸின் ஆயர், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியரின் நலனைக் கவனிக்க அவரை நியமித்தார் மேலும், அவரது அறிவுறுத்தல் மற்றும் முன்மாதிரியால் அவர் அவர்களை உயர்ந்த புனிதத்தன்மைக்கு அழைத்துச் சென்றார்.

கி.பி. 451ம் ஆண்டு,  பாரிஸில் அட்டிலாவின் கீழ் ஹன்ஸ் தாக்குதலுக்கு சற்று முன்பு, ஜெனீவீவ் மற்றும் ஜெர்மானஸின் திருத்தொண்டர் ஆகியோர், பாரிஸில் பீதியடைந்த மக்களை தப்பி ஓடாமல் பிரார்த்தனை செய்ய தூண்டினர். ஜெனீவீவியின் பிரார்த்தனைகளின் பரிந்துரைகள் காரணமாக, பாரிஸ் நகருக்குப் பதிலாக, அட்டிலாவின் இராணுவம் "ஆர்லியன்ஸுக்குச்" (Orléans) சென்றதாகக் கூறப்படுகிறது. கி.பி. 464ம் ஆண்டு, "சைல்டெரிக்" பாரிஸை முற்றுகையிட்டபோது, ஜெனீவீவிவ் ஒரு படகில் முற்றுகை பகுதிகள் வழியாக ஒரு படகில் பயணித்து, "ட்ராய்ஸ்" நகருக்குச் சென்று, நகரத்திற்கு வேண்டிய தானியங்களைக் கொண்டு வந்தார். போர்க் கைதிகளின் நலனுக்காக, சைல்டெரிக்கிடம் அவர் கெஞ்சினார். மேலும் அவரிடமிருந்து சாதகமான பதிலையும் பெற்றதாக கூறப்படுகின்றது. அவரது செல்வாக்கின் காரணமாக, சைல்டெரிக் மற்றும் க்ளோவிஸ் ஆகியோர், குடிமக்கள் மீது தங்களுக்கு பழக்கப்படாத கருணை காட்டினர்.

புனிதர் டெனிஸ் மீது (Saint Denis) ஒரு பக்தியைகொண்டிருந்த ஜெனிவீவ், அவரை மிகவும் நேசித்தார் மேலும் புனிதரது மீபொருட்களை வைப்பதற்காக, அவரது நினைவாக ஒரு சிற்றாலயத்தை அமைக்க விரும்பினார். கி.பி. சுமார் 475ம் ஆண்டு, ஜெனீவ் புனிதர் டெனிஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நிலங்களை வாங்கினார். மற்றும் அண்டை குருக்களை, அவர்களின் ஆன்மீக முயற்சிகளுக்காக அதனை பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்தினார். இவர்களது இந்த சிறிய சிற்றாலயம், கி.பி. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற புனித யாத்திரைக்கான இடமாக மாறியது.

ஃபிராங்கிஷ் மன்னரான (King of the Franks) "முதலாம் க்ளோவிஸ்" (Clovis I), நிர்மாணித்த மடாலயத்தில் மறைப்பணியாற்றி வந்த ஜெனிவீவ், அவரது மரணத்தின் பின்னர், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.