இன்றைய புனிதர் - ஜனவரி 24 - அந்தியோக்கியா நகர் புனிதர் பேபிலாஸ் ***


அந்தியோக்கியா நகர் புனிதர் பேபிலாஸ்

(St. Babylas of Antioch)

அந்தியோக்கியா ஆயர்/ மறைசாட்சி:

(Bishop of Antioch and Martyr)

பிறப்பு: ---

இறப்பு: கி.பி. 253

ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம்: கிரெமோனா (Cremona)

நினைவுத் திருநாள்:

ரோமன் கத்தோலிக் திருச்சபை = ஜனவரி 24

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை = செப்டம்பர் 4

(Eastern Orthodox Church)

கிழக்கு கத்தோலிக்க திருச்சபை = செப்டம்பர் 4

(Eastern Catholic Church)

அந்தியோக்கியா நகர் புனிதர் பேபிலாஸ், "பேரரசர் டேசியஸ்" (Emperor Decius) காலத்தில், சிறைச் சாலையில் மரித்த "அந்தியோக்கியா ஆயர்" (Bishop of Antioch) ஆவார்.

அவர், "பேரரசர் மூன்றாம் கோர்டியன்" (Emperor Gordian III) ஆட்சிக் காலத்தில் (238-244), "ஆயர் ஜெபினஸ்" (Bishop Zebinus) என்பவரின் பின்வந்த, அந்தியோக்கியாவின் (Antioch) பன்னிரெண்டாம் ஆயர் ஆவார். கி.பி. 250ம் ஆண்டு முதலான "டேசியன் துன்புறுத்தல்கள்" (Decian persecution) காலத்தில், கிறிஸ்தவ விசுவாசத்தில் அவரளித்த உறுதியான வாக்குமூலம் காரணமாக, சிறையில் தள்ளப்பட்டு, துன்புறுத்தப்பட்டு மரித்தார். பின்னர் அவர் மறைசாட்சியாக (Martyr) வணங்கப்பட்டார்.

முக்கிய ஆதிகால கிறிஸ்தவ திருச்சபை தந்தையும் (Important Early Church Father), கான்ஸ்டான்டிநோபிள் பேராயருமான (Archbishop of Constantinople) "ஜான் கிறிசோஸ்டம்" (John Chrysostom) என்பவர் ஆயர் பேபிலாஸ் பற்றி எழுதிய போதனைகளின்படி, ஆயர் பேபிலாஸ் கிறிஸ்தவ மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆயர் ஆவார்.

ஒரு நாள் "பாகன் பேரரசன் நுமேரியன்" (Pagan Emperor Numerian) ஒரு இளம் பெண்ணை விக்கிரகங்களுக்கு பலியிடும்படி உத்தரவிட்டான். ஒரு அரசனின் மகளான அப்பெண், ஒரு போரில் பிணையாக நிறுத்தப்பட்டாள். இந்த குற்றச் செயலுக்குப் பின்னர், அவன் கத்தோலிக்கர்களை கேலி செய்வதற்காக, அந்தியோக்கியா பேராலயத்தினுள் நுழைய சென்றான். பேராலயத்தில் நுழைவாயிலில் அவனை தடுத்து நிறுத்திய பேபிலாஸ், அவனை நோக்கி, "தூய்மையற்ற, திமிர்த்தனமான மனிதனே, திரும்பிப் போ. நீ இங்கே நுழையாலாகாது." என்றார். வெறுப்பு நிரம்பிய நுமேரியனுக்கு இது பெரும் அவமானமாகப் போனது.

பின்னர், பேபிலாஸ் மற்றும் அவரது மூன்று சீடர்களையும் கைது செய்த நுமேரியன், விசாரணை என்ற பெயரில் அவர்களை அவமதித்தான். அவர்களில் ஒருவரான ஒரு துறவியைப் பார்த்து பரிகசித்து, "உங்கள் கடவுளின் பாடசாலையின் உங்கள் எஜமானரான முட்டாள்களுக்கு சுவாரஸ்யமான விஷயங்களை கற்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றான். அதற்கு ஆயர் அவர்கள், "ஆமாம், ஞானத்தையும் சத்தியத்தையும் பிள்ளைகளுக்கு நான் கற்பிக்கிறேன். முட்டாள்களுக்காக, அவர்கள் என் பள்ளியில் கலந்து கொள்ளவில்லை; இல்லையென்றால் நீயும் அங்கே இருந்திருப்பாய்" என்றார்.

ஆயர் பேபிலாஸின் மூன்று சீடர்களையும் சித்திரவதை செய்த நுமேரியன், ஆயரிடம் சென்று, குழந்தைகளுக்கு இத்தகைய முட்டாள்தனத்தை கற்பிக்கும் எஜமானே, நான் சொல்வதை கேளுங்கள், இந்த நேரத்தில் நீங்கள்  தோற்றுவிட்டீர்கள். ஏனெனில் உங்கள் மூன்று மாணவர்களும் எங்கள் தெய்வங்களுக்கு பலியாகச் செலுத்தப்படவுள்ளனர் என்றான்.

தேவனுடைய மனுஷன் தமது கடுமையான பார்வையை அவனிடம் உறுதிப்படுத்தி பதிலளித்தார்: "நீ வெட்கமின்றி, பொய் சொல்கிறாய். நீ இயல்பாகவே இதை செய்கிறாய். ஏனென்றால், நீ பிசாசின் மகன், பொய்யில் சிறந்தவன்" என்றார்.

பேரரசன் நுமேரியன் அவருக்கு மரண .தண்டனையளித்தான்.