இன்றைய புனிதர் - ஜனவரி 24 - புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ் ***


புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ்

(St. Francis de Sales)

ஜெனீவா நகர ஆயர்/ மறைவல்லுநர்:

(Bishop of Geneva/ Doctor of the Church)

பிறப்பு: ஆகஸ்ட் 21, 1567

சாடேயு டி சலேஸ், சவோய், தூய ரோம பேரரசு

(Château de Sales, Duchy of Savoy, Holy Roman Empire)

இறப்பு: டிசம்பர் 28, 1622 (அகவை 55)

லியோன்ஸ், லியோன்னைஸ், ஃபிரான்ஸ் அரசு

(Lyons, Lyonnais, Kingdom of France)

ஏற்கும் சபை: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஜனவரி 24

முக்திப்பேறு பட்டம்: ஜனவரி 8, 1661

திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்

(Pope Alexander VII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 8, 1665

திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்

(Pope Alexander VII)

பாதுகாவல்: 

ரொட்டி செய்பவர் (Baker); ஓரிகன் (Oregon); 

சின்சினாட்டி (Cincinnati); எழுத்தாளர்கள் (Writers); 

செய்தியாளர்கள் (Journalists); கொலம்பஸ் (Columbus); 

ஓஹியோ (Ohio); காது கேட்காதவர்கள் (Deaf people); 

கல்வியாளர் (educators); அபிங்டன் (Upington); 

தென் ஆப்பிரிக்கா (South Africa); வில்மிங்டன் (Wilmington); 

டெலவெயர் (Delaware); செய்தியாளர் (Catholic press); 

பாவ மன்னிப்பாளர் (Confessors) 

கிறிஸ்து அரசர் பேரரசு குருவின் கல்வி நிலையம் (The Institute of Christ the King Sovereign Priest)

முக்கிய திருத்தலங்கள்: 

அன்னசி, ஹௌட்-சவோய், ஃபிரான்ஸ்

(Annecy, Haute-Savoie, France)

புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ், ஜெனீவா நகரின் ஆயரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் சீர்திருத்தத் திருச்சபையினரை மீண்டும் கத்தோலிக்க திருச்சபையோடு சேர்க்க அரும்பாடுபட்டார். இவர் ஒரு சிறந்த மறை சொற்பொழிவாளர். இவரின் புத்தகங்கள், குறிப்பாக "Introduction to the Devout Life" மற்றும் "Treatise on the Love of God" ஆகியன, ஆன்மீக உருவாக்கம் மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு பெரிதும் பயன்படுகின்றன.

இளமைக் காலம்:

கி.பி. 1597ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 21ம் நாள், ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “சவோய்” (Savoy) குடும்பத்தில் பிறந்த இவரது தந்தையார், "ஃபிரான்காய்ஸ் டி சலேஸ்" (François de Sales) ஆவார். தாயார், "ஃபிரான்காய்ஸ் டி சியோன்னஸ்" (Françoise de Sionnaz) ஆவார். இவரது திருமுழுக்குப் பெயர் "ஃபிரான்சிஸ் பொனவென்ச்சுரா" (Francis Bonaventura) ஆகும்.

இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளுள் முதல் குழந்தை ஆவார். இவருடைய தந்தையார், இவர் எதிர்காலத்தில் சிறந்ததோர் நீதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில், இவருக்கு அருகேயிருந்த நகரத்தில் உயர்தர கல்வி அளிக்கப்பட ஏற்பாடு செய்தார். எட்டு வயதில், அன்னேசி நகரிலுள்ள கப்புச்சின் கல்லூரியில் (Capuchin college in Annecy) கல்வி பயின்றார்.

கல்வி:

கி.பி. 1583ம் ஆண்டு, பாரிஸ் நகரில் உள்ள, இயேசு சபையின் கல்வி நிறுவனமான "காலேஜ் டி கிலர்மோண்டில்" (Collège de Clermont) "சொல்லாட்சி" மற்றும் "மனிதநேயம்" ஆகியவற்றில் உயர் கல்வி கற்க சென்றார்.

கி.பி. 1584ம் ஆண்டு, இறையியலில் விதி அல்லது நியதி பற்றின ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது, தான் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வது உறுதி என எண்ணி மிகவும் வருந்தினார். அதனால் ஏற்பட்ட துக்கத்தினால் கி.பி. 1586ம் ஆண்டு, டிசம்பர் மாதம், உடல் நலம் குன்றியது. கி.பி. 1587ம் ஆண்டு, ஜனவரி மாதம், தெற்கு ஃபிரான்ஸில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். அங்கே, "கருநிற மடோன்னா" (Black Madonna) என்றழைக்கப்படும் அர்ச்சிஷ்ட "மீட்பு" அன்னை கன்னி மரியாளின் (Our Lady of Good Deliverance) திருச்சொரூபத்தின் முன்னே செபம் செய்தார். கடவுளுக்கு தன் வாழ்வினை அர்ப்பணிக்க முடிவு செய்தார். தம்மை இறை அன்னைக்கு ஒப்புக் கொடுத்தார். கடவுள் அன்பாய் இருகின்றார் என விவிலியம் கூறுகின்றது; ஆதலினால், அவரிடம் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் பாதையில் செல்ல தீர்மானித்தார்.

கி.பி. 1592ம் ஆண்டு, சட்டம் மற்றும் இறையியல் துறைகளில் முனைவர் பட்டத்தை பதுவா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இங்கே தான் தனக்கு இறை அழைத்தல் இருப்பதாக முதன் முதலில் உணர்ந்தார். படிப்பு முடிந்ததும், உடனே வீடு திரும்பாமல், இத்தாலியின் "லொரெட்டோ" (Loreto) என்னுமிடத்திலுள்ள மரிய அன்னை திருத்தலத்திற்க்கு திருப்பயணம் சென்றார்.

மனித நேயம், சொல்லாட்சிக் கலை, இறையியல், மற்றும் சட்டம் படித்தப் பின்னர், தன் தந்தை பார்த்து வைத்திருந்த செல்வந்தக் குடும்பப்பெண்ணை மணக்காமல் குருவாக தீர்மானித்தார். அப்போதய ஜெனீவா நகர ஆயரின் அழைப்பை ஏற்று, கி.பி. 1593ம் ஆண்டு, குருமடத்தில் சேர்ந்து, குருத்துவம் பெற்று, அம்மறைமாவட்ட தேவாலயத்தில் பணிபுரிந்தார்.

ஆயராக:

கி.பி. 1517ம் ஆண்டு, கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் ஆரம்பமானதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரின் கத்தோலிக்க ஆயர்கள் ஃபிரான்ஸில் உள்ள அன்னெசி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர், ஃபிரான்சிஸ் பேராலயத்தில் பணிசெய்து கொண்டுருந்ததால், சவாய் நகரில் இருந்த சீர்திருத்தத் திருச்சபையினரிடமும் மறை பரப்பலானார், இவரின் முயற்ச்சியால் பலரும் கத்தோலிக்கத்திற்க்கு திரும்பலாயினர்.

இவர் ரோம் நகரம் மற்றும் பாரிஸ் நகருக்கு பயணம் செய்து திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் மற்றும் ஃபிரெஞ்ச் அரசன் ஆறாம் ஹென்றியும் உடன்பாடு செய்ய வைத்தார்.

கி.பி. 1602ம் ஆண்டு, ஜெனீவா ஆயரின் இறப்புக்குப் பின், ஃபிரான்சிஸ் டி சலேஸ் புதிய ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவரின் ஆயத்துவ பணியின்போது, எல்லோரும் இவரை சிறந்த மறையுரையாளராகவும், ஏழை எளியவரின் நண்பராகவும் கண்டனர். இவரின் புத்தகங்களில் இவரின் ஃபிரெஞ்ச், இத்தாலிய மற்றும் இலத்தீன் மொழிகளின் புலமை வெளிப்பட்டது.

கி.பி. 1610ம் ஆண்டு, ஜூன் மாதம், ஆறாம் தேதி, "புனித ஜேன் ஃபிரான்சிஸ் டி சான்ட்டலுடன்" (St. Jane Frances de Chantal) இணைந்து, "மாதா மிணவுதல் சபை" (Order of the Visitation of Holy Mary) என்னும் பெயரில், பெண்களுக்கான துறவர சபையினை நிறுவினார். இவர், "புனித பிலிப் நேரியின் சொற்பொழிவுக்கலை சபை" (Oratory of St. Philip Neri) என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு சிறு சபையையும் தோற்றுவித்தார்.

கி.பி. 1622ம் ஆண்டு, டிசம்பர் மாதம், "சவோயின் பிரபு முதலாம் சார்லஸ் இம்மானுவலின்" (Charles Emmanuel I, Duke of Savoy) பரிவாரங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த ஃபிரான்சிஸ் டி சலேஸ், "லியொன்" (Lyon) சென்று சேர்ந்ததும், "விசிட்டேன்டைன் துறவு மடத்தின்" (Visitandine monastery) தோட்டக்காரரின் குடிலில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார். டிசம்பர் மாதம், 28ம் தேதி, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர், இறைவனடி சேர்ந்தார்.

இறப்புக்குப் பின்:

திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர், ஃபிரான்சிஸ் டி சலேஸுக்கு கி.பி. 1661ம் ஆண்டு, அருளாளர் பட்டமும், நான்கு வருடத்துக்கு பின் புனிதர் பட்டமும் அளித்தார். கி.பி. 1877ம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், இவரை திருச்சபையின் மறைவல்லுநராக பிரகடணம் செய்வித்தார்.

இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜனவரி 24 ஆகும்.