இன்றைய புனிதர் - ஜனவரி 22 - அருளாளர் வில்லியம் ஜோசப் சமினட் ***


அருளாளர் வில்லியம் ஜோசப் சமினட்

(Blessed William Joseph Chaminade)

குரு மற்றும் மரியான் சபை நிறுவனர்:

(Priest and Founder of Society of Mary (Marianists)

பிறப்பு: ஏப்ரல் 8, 1761

பெரிஜியூக்ஸ், பெரிகார்ட், ஃபிரான்ஸ் அரசு

(Périgueux, Périgord, Kingdom of France)

இறப்பு: ஜனவரி 22, 1850

போர்டியுக்ஸ், ஃபிரான்ஸ்

(Bordeaux, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (மரியான் சபையினர்)

(Roman Catholic Church - Marianists)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 3, 2000

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜனவரி 22

அருளாளர் வில்லியம் ஜோசப் சமினட் (Blessed. William Joseph Chaminade), ஃபிரெஞ்ச் புரட்சியின்போது துன்புறுத்தப்பட்ட (Persecution during the French Revolution) கத்தோலிக்க குருவும், பிற்காலத்தில் “மரியான்” (Marianists) என்றழைக்கப்படும் “மரியாள் சபையை” (Society of Mary) நிறுவியவருமாவார்.

“மரியான் குடும்பத்தின்” (The Marianist Family) பிற மூன்று கிளைகளாவன:

1. திருமணமான மற்றும் பிரமச்சரிய ஆண் மற்றும் பெண்களடங்கிய “மரியான் சமூகத்தின்” பொதுநிலையினர் (The married and single men and women of the Marianist Lay Communities).

2. மரியாளின் உடன்பாட்டுக்கு அர்ப்பணித்துக்கொண்ட பொதுநிலைப் பெண்கள் (The consecrated laywomen of the Alliance Mariale).

3. “மரியான் சகோதரியர்” (Marianist Sisters) என்றழைக்கப்படும் “மாசற்ற மரியாளின் பெண்கள்” (Daughters of Mary Immaculate) சபை.

வில்லியம் ஜோசப் சமினட், கி.பி. 1761ம் ஆண்டு, ஃபிரான்ஸ் அரசின் “பெரிஜியூக்ஸ்” எனுமிடத்தில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோரான “ப்லைஸ் சமினட்” மற்றும் “கேதரின் பெதொன்” (Blaise Chaminade and Catherine Bethon) இருவரும் ஆழ்ந்த பக்தியானவர்கள். இவர் தமது பெற்றோரின் பதினான்காவது குழந்தை ஆவார். இவரது மூன்று சகோதரர்கள் கத்தோலிக்க குருக்கள் ஆவர். இதே வழியில் சேவை செய்வதற்கு அழைக்கப்படுவதாக உணர்ந்த இவர், தமது பத்து வயதில், தென்மேற்கு ஃபிரான்சின் “முஸ்சிடன்” (Mussidan) எனுமிடத்திலுள்ள, குருத்துவம் பெறுவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட “மைனர் செமினரி” (Minor seminary) என்றழைக்கப்படும் இளநிலை குருத்துவ பள்ளியில் இணைந்தார். கி.பி. 1785ம் ஆண்டு, தமது இருபத்துநான்கு வயதில் உள்ளூர் மறைமாவட்டத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

கி.பி. 1790ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்ததன் பின்னர், வில்லியம் ஜோசப் சமினட், தென்மேற்கு ஃபிரான்சின் துறைமுக நகரான “போர்டியுக்ஸ்” (Bordeaux) சென்றார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மறுக்கப்படுவதற்கு அவசியமாக இருக்கும் புரட்சியின் மதச்சார்பற்ற மதிப்பை உறுதிப்படுத்துவதற்குண்டான வாக்குறுதியை ஏற்க மறுத்து, மதகுருமாரின் சிவில் அரசியலமைப்பை எதிர்த்ததன் மூலம் அரசின் எதிரி ஆனார். மரண தண்டனையின் ஆபத்தை உணர்ந்திருந்த அவர், இரகசியமாக கத்தோலிக்க குருப் பணிகளை செய்தார். அவருடைய இந்த இரகசியப் பணிகளில் உதவியாக, அவருடைய நண்பர்களில் ஒருவரான “வணக்கத்துக்குரிய மேரி-தெரேஸ்-டி லமரௌஸ்” (Venerable Marie-Thérèse de Lamourous) எனும் பொதுநிலைப் பெண் ஒருவர் இருந்தார். (பின்னாளில், ஃபிரெஞ்ச் புரட்சியின் பிறகு, “போர்டியுக்ஸ்” (Bordeaux) நகரில், (The Miséricorde) என்ற பெயரில் மனம் திருந்திய விலைமாதருக்கான கருணை இல்லம் ஒன்றினை நிறுவுவதற்காண பணிகளில் அவருக்கு உதவியாக வில்லியம் ஜோசப் சமினட் இருந்தார்.)

கி.பி. 1795ம் ஆண்டு, சபை அல்லாத உறுப்பினர்களோடு சேர்ந்து செயல்பட தேசிய அரசாங்கம் முயன்றபோது, “போர்டியுக்ஸ்” (Bordeaux) நகர மதகுருமாரின் நல்லிணக்கத்தை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பை சமினட் ஏற்றுக்கொண்டார். அவர் அரசியலமைப்பு பிரமாணத்தை எடுத்துக்கொண்டார். ஆனால், கத்தோலிக்க திருச்சபைக்கு சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினார். இதுபோன்ற சுமார் ஐம்பது குருக்கள் அவருடைய உதவியுடன் தங்கள் நல்லிணக்கத்தை நிறைவு செய்தனர். கி.பி. 1795ம் ஆண்டுமுதல், “ஃபிரெஞ்ச் டைரக்டரி” (French Directory) எனப்படும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆட்சிமன்ற குழு அரசுப் பொறுப்பை ஏற்றதும், அவர் நாட்டை விட்டு வெளியேறி, ஸ்பெயின் (Spain) நாட்டின் “சரகொஸா” (Zaragoza) பிராந்தியத்தில் தஞ்சமடைந்தார்.

அங்கு வாழ்ந்த காலத்தில், அன்னை மரியாள் மீது தாம் கொண்ட வலுவான பக்தி காரணமாக, அங்குள்ள அன்னையின் பேராலயத்துக்கு (Basilica of Our Lady of the Pillar) சென்று செபிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரது செபத்தின் விளைவாக, கத்தோலிக்க விசுவாசத்தை ஃபிரான்ஸ் நாட்டுக்கு மீட்பதற்கான பார்வை உருவாக்கப்பட்டது. இதன் முடிவில், பொதுநிலையினர் மற்றும் மறைப் பணியாளர்களுக்கான ஒரு அமைப்பை நிறுவ முடிவு செய்தார்.

கி.பி. 1800ம் ஆண்டு, அவர் “போர்டியுக்ஸ்” (Bordeaux) திரும்பியபோது, உலகளாவிய மரியான் அமைப்பினை (Marian Sodality) மீண்டும் நிறுவினார். அவர் இளம் பொதுநிலையினரின் இயக்க வளர்ச்சியை தனது பணிக்கு முக்கிய மையமாகக் கண்டார். இதில் அவர், மறைப்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் உள்ளிட்ட திருச்சபையின் பாரம்பரியவாத சக்திகளால் எதிர்க்கப்பட்டார்.

இவர்களது மரியான் அமைப்பு (Marian Sodality), பிற நகரங்களுக்கும் பரவியது. அவரை “பஸாஸ்” (Diocese of Bazas) மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமித்ததன்மூலம், வாட்டிகன் அவரது முயற்சிகளை அங்கீகரித்தது.

சாமினேட்டின் வாழ்க்கையின் கடைசி பத்து ஆண்டுகள், அவரது உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள், நிதி பற்றாக்குறைகள் மற்றும் அவரது சபை நிர்வாகத்தில் அவரது பார்வை மீதான தடைகளால் நிரப்பப்பட்டிருந்தது. பகுதியளவில் முடங்கிப்போன அவர், பின்னர் அவரது சபை நிர்வாகத்தால் மெய்நிகர் தனிமைப்படுத்தப்பட்டார். தமது சபையின் உறுப்பினர்கள் சூழ்ந்திருக்க, வில்லியம் ஜோசப் சமினட் கி.பி. 1850ம் ஆண்டு மரித்தார்.